Thursday, January 10, 2013

மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம்

நம் கண்முன்னே அந்த கொடூரம் நடந்திருக்கின்றது. நேற்று இரவுதான் அந்த செய்தி காதுகளுக்கு எட்டியது கொஞ்ச நேர அமைதி, இயங்க முடியாத மௌனம் என்று தன்னிலை மறந்ததும்.... சில நிமிடங்களில்  ஒரு விரக்தி நீண்ட பெருமூச்சு  ( இவை வர்ணிப்பாக யாரும் கருதக்கூடாது ) மரண தண்டனைக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் கொள்கை கொண்டவர்கள் மட்டும் பதிவை தொடருங்கள் , பதினைந்து செங்கல் கற்கள் இரண்டு தகரம் கை நீட்ட இடமில்லாத ஒரு வீட்டை அதில் குருவிகள் போல வாழும் ஒரு குடுமபத்தின் எதிர்காலத்துக்காக தன்னை அர்பணிக்க சென்ற அந்த தாய்க்கு எவ்வளவு ஆசைகள் இருந்திருக்கும்?  தனக்காக யார் யாரோ முயற்சி செய்கிறார்கள் என்ற செய்தி சிறைக்குள் அவள் காதுகளுக்குள் எட்டியிருந்தால் இறுதி நிமிடம் வரை வாழும் நம்பிக்கை எவ்வளவு இருந்திருக்கும் , உலகின் உச்சகட்ட கொடுமை நூறு வீத வாழும் நம்பிக்கை இருக்கும் போது தனக்கே தெரியாமல்  இறப்பதுதான். 

ரிசானாவுக்கு நடந்ததும் அதுதான் " நேற்று முன்தினம் ரிசானாவை  கவனிக்கும் வைத்தியர் உலக ஊடகங்களுக்கும் , இலங்கை ஊடகளுக்கும்  அவசர செய்தி ஒன்றை வெளியிட்டார்  ரிசானா   சிறைக்குள் எதுவும் அறியாதவளாக இருக்கின்றார், மரண தண்டனை உறுதியானது அவருக்கு தெரியாது,  தான் குடும்பத்துடன் மீண்டும் சந்தோசமாக வாழப்போவதாக   முழுமையாக நம்புகிறார் என்று " தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அறிந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் . அப்படியானால் ஒரு உச்சகட்ட கொடுமை ஒன்று அந்த தாய்க்கு நடத்தப்பட்டுள்ளது, 

இன்னுமொருபுறம் ரிசானாவின் கையில் இருக்கும் போது  இறந்த அந்த குழந்தை மூச்சு திணறல் காரணமாகவே இறந்தார் என்றும் அது கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் gulf  news உள்ளிட்ட பல ஊடகங்கள் அப்போதே செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியே இருந்தாலும் வெறும் 17 வயது சிறுமி ஒரு  குற்றம் புரிந்தால் அவரை சீர்திருத்த முயலக்கூடாதா ? மரண தண்டனைதான் தீர்வா??? இன்று எல்லா ஊடகங்களிலும்  ரிசானாவின் குடும்ப புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது அந்த படங்களை பார்க்கும் துணிவு இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன் ரிசானா  மரணித்து ஒரு செய்தியை தெளிவாக சொல்லி இருக்கின்றார். சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இன்னும் பல ரிசானாக்கள் வாழ்வை தேடி சென்று வாழ்கையை தொலைக்கும் அவலம் கண்டிப்பாய் தொடரும், மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம் ...

4 comments :

 1. உங்கள் பதிவு உருக்கமானது. ஆனால் இன்னும் கொஞ்சம் ஆழமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. கண்ணுக்குக் கண் பல்லுப்பல் என்று காட்டுமிராண்டித்தனமாக இயங்கிய சமூகத்தினை புரட்டிப் போட்டவை சட்டங்கள் தான். சட்டத்தினை சாடப் போனால் மதவாதிகள் என்பார்கள். ஷரீஆ சட்டம் பல வேளைகளில் என்னை வெறுப்படைய வைத்தாலும் சில வேளைகளில் சரியானதாகவே கருதுகிறேன். டெல்லி கற்பழிப்புக்கு பகிரங்க கல்லடி மூலம் மரணதண்டனை விதித்தால் நானும் மகிழ்வேன். இங்கு தண்டனை என்பது சமூகத்திற்கு படிப்பினையை விளைவிக்க வேண்டும். சமூகமே எதிர்க்கும் தண்டனை எப்படி சமூகத்தைத் திருத்தும்??ரிசானாக்குகாக கண்ணீர் வடிப்பதை விடுத்து ரிசானாக்கள் உருவாவதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆழமாய் யோசிக்க எனக்கு ஆழமான அறிவு வேண்டுமே அதைத்தான் நான் தேடுகிறேன் ஆனால் " டெல்லி சம்பவத்திற்கு நீங்கள் சொல்லும் தண்டனை ஏற்புடையது அல்ல என்பது என் கருத்தாக இருக்கும் " அதனால் எந்த பயனும் இல்லை அப்படி நீங்கள் பரிந்துரைப்பது உங்கள் கோப ஆவேசத்தைத்தான் காட்டுகின்றது என்று நான் கருதுவது குற்றமில்லை என்று சொல்வது சரியாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது காரணம் நீங்கள் சட்டம் படிக்கும் மாணவி
   இருந்தாலும் நான் ஏற்கனவே சொன்னது போல அந்த குற்றவாளிகள் சமூகத்தில் எவனும் குற்றம் செய்வதை தடுக்கும் வகையிலான தண்டனையில் தண்டிக்கப்பட வேண்டும் அவர்கள் குற்றத்தை உணர வேண்டுமே ஒழிய குற்றத்தை செய்ததை உணரும் தருணத்தில் உயிரை விடுவதில் என்ன பயன் ? நான் மரண தண்டனைக்கு முழுமையாக எதிரானவன்

   Delete
  2. திருந்த முயற்சிப்பவர்களுக்கு மரணம் தேவையில்லை ஆனால் பல கொலைகள் பல கற்பழிப்புக்கள் செய்வது விட்டு எதையுமே உணராது சிறையில் குதூகலமாக காலத்தை கழிப்போருக்கு என்ன செய்வது?? நானும் மரண தண்டனைக்கு எதிரானவள் தான் ஆனால் எல்லாக் குற்றங்களுக்கும் மன்னிப்புக் கிடையாது. மனிதர்களுக்கு சீர்திருத்தற் கோட்பாடு பொருந்தும் மனிதராக வாழும் மிருகங்களுக்கல்ல

   Delete
 2. It's very pathetic anna......மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம் ...குற்றமற்றவளுக்கு செய்த குற்றம்......

  ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்