Thursday, September 15, 2011

மங்காத்தா (லாஜிக் இல்லா மேஜிக் )

மாப்பிள்ளை மாதிரி மொக்க படத்தையே மனசாட்சியில்லாமல் விளம்பரப்படுத்தி ஓட்டு ஓட்டு என்று ஓட்டும் சன் பிச்சர்ஸ் காரர்களின் கையில் மங்காத்தா மாதிரி மாஸ் படம் கிடைத்தால் சும்மாவா சென்னையில் மட்டும் படம் வந்து ஒரே வாரத்தில் முப்பது கோடி வசூல் ......


எல்லோருக்கும் தெரியும் அஜித்தின் ஐம்பதாவது படம் இது ஏற்கனவே அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் தல என்ற செல்ல பெயர் தமிழ் நாடு முழுவதும் இயங்கி வந்த முப்பத்தெட்டாயிரம் ரசிகர் மன்றங்கள் / நற்பணி மன்றங்கள் அத்தனையும் அஜித் கலைத்து கைவிட்ட பிறகு இந்த படம் என்ன கதியாகுமோ என்று பலரும் உச்சு கொட்ட , நரை முடியுடன் கொடூர வில்லத்தனத்துடன் படத்தை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக்கியிருக்கிறார் தல .. காட்சிக்கு காட்சி பார்வையிலேயே பேசும் வித்தை அஜித்துக்கே உரியது மனுஷன் அநியாயத்துக்கு அழகு கை தட்டல்களை ஏகத்துக்கு வாங்கி குவிக்கிறார் அஜித் வரலாறில் ஐம்பது படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள திரைப்படம் இது அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் தல தொடரட்டும் தல பயணம்


பி. கு - ஒரு சின்ன குறை ஐம்பதாவது படத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்கள் பற்றியும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்

Wednesday, September 7, 2011

யாழ் பயணம் ......

யாழ்பாணத்தில் என்னை பார்க்க ஒரு மாற்று திறநாளி வந்திருந்தார் அவரையும் அவர் குரலையும் நான் கவிராத்திரி நிகழ்ச்சியில் பல முறை கேட்டிருக்கிறேன் உணர்வுகள் பொங்கும் அவர் வரிகளை என்னை மறந்து அனுபவிப்பேன் அவர் என்னை நேரில் பார்க்க வந்தபோதுதான் அவர் ஒரு மாற்று திறநாளி என்பதே எனக்கு தெரியும் ! அவர் என்னிடம் எத்தனையோ வானொலிகளில் நான் கவிதை சொல்லியிருக்கிறேன் ஆனால் நீங்கள் தந்த அங்கீகாரம் எனக்கு யாருமே தந்ததில்லை ,உங்க வார்த்தைகள இரவுல கேட்கும்போது என் அத்தனை கவலைகளும் எங்க போகுதுனே தெரியல நீ நல்ல இருக்கனும்பா என்று என் கையை இருகப்பிடித்துக்கொண்டார் இவ்வளவு தூரம் வந்ததே உங்களிடம் இதை சொல்லத்தான் என்று சொல்லிவிட்டு கையில் கொண்டுவந்திருந்த சில இனிப்புகளையும் கொடுத்துவிட்டு தன் வழியே போக ஆரம்பித்தார் அவர் அப்பாவித்தனமான அன்பு தெரிந்த அந்த கண்ணில் என் இரண்டு வருட உழைப்பின் உண்மை பெறுமதியை நான் அப்போதுதான் உணர்ந்தேன்
நான் பட்ட அத்தனை கஷ்டங்களும் அவமானங்களும்
அப்படியே கரைந்து போனது , இதற்காகத்தானே அத்தனை உழைப்பு ? உண்மையில் எனக்கான உண்மை அளவீடும் இப்படியான உண்மை மனிதர்களிடம்தான் இருக்கிறது என்பதை சரியாக உணர்ந்த பொழுது அவர் என் பார்வையில் இருந்து மறைந்து விட்டார்... !

நிற்க ......

யாழ் பயணம் வெகு சிறப்பாக இருந்தது நீண்ட நாட்கள் பார்க்க ஆசைப்பட்ட மண் அது உணர்வுக்கொப்பளிப்புகளுக்கு அளவே கிடையாது சக்தி கலையகம் நல்லூரில் இருந்தாலும் நான் நல்லூரிலும் கலையகத்திலும் இருந்தது என்னவோ ரொம்ப குறைவான நேரம் தான் கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்த அளவு வெளியிலேயே செலவு செய்தேன் அத்தனையும் ரசித்தேன் என்பதை விட ருசித்தேன் என்றால் தவறில்லை ( இனியொரு முறை யாழ் பயணம் சாத்தியப்படாது என்ற உணர்வு மேலோங்கி இருந்ததால் இந்த பயணத்தை அங்குலம் அங்குலமாக அனுபவித்தேன் ) எல்லாம் தவிர்த்து யாழ் பயணம் சிந்தனை ரீதியான பல மாற்றங்களை எனக்குள் ஏட்படுத்தியிருக்கிறது பழகும் பலரின் நிஜ முகங்களை
கூட என்னால் யாழ் பயணத்தில்தான் தெரிந்து கொள்ள முடிந்தது பல ஊர்களுக்கு சென்று வீடு வீடாக நாம் நம் துறை அது தொடர்பாக மக்கள் சம காலத்தில் என்ன பார்வையை செலுத்துகிறார்கள் என்று பலதும் தெரிந்து கொள்ளக்கூடியாதாக இருந்தது (மக்கள் ரசனையில் எத்தனை மாற்றங்கள் வந்துவிட்டது ?)


வவுனியா கிளிநொச்சியை தாண்டும் போது உணர்வில் ஏற்பட்ட விசித்திரங்கள் எனக்கு புதுமையானவை , இதற்கு முன் எங்கும் எப்போதும் அறிந்திராத உணர்வு அது கிளிநொச்சியில் சில நேரம் என்னை அறியாமலே கண்கள் காரணம் இல்லாமல் ? கலங்கியது அந்த மண்ணை கூட பத்திராமாக கொண்டு வந்து என் வீட்டில் வைத்திருக்கிறேன் யாழ்பாணத்தில் எங்களுக்கு கிடைத்த வரவேற்ப்பு இது வரை அல்லது இனிமேல் வேறு ஒரு வானொலிக்கு கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது .. அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றிகள் தனிப்பட்ட என் வானொலி நிகழ்சிகளுக்கு விமர்சனங்களை சொன்ன , எனக்காக பரிசுகளை தந்த அனைவருக்கும் நன்றி
Copyright © 2014 நட்சத்திரவீதியில்