Wednesday, December 26, 2012

"வதன நூல் வதை நூல் ஆன கதை "

என் முகப்புத்த்கம் அடிக்கடி heck செய்யப்படுகின்றது பலருக்கு தவறான தகவல்கள் அனுப்பப்படுகின்றது, எனக்கே தெரியாமல் பலருக்கு request அனுப்பி un friend செய்யப்படுகின்றது , எல்லாமே சரி அதுக்காக என் சித்தப்பா பொண்ணு , பெரியப்பா பொன்னுக்கெல்லாமா  தப்பான தகவல் அனுப்புறது ? தகவல் அனுப்பப்பட்டுள்ள இரண்டாயிரம் பேரிடமும் மீள் தகவல் அனுப்பி நான் இல்லை என்று வாதிட பிடிக்கவில்லை , ஒரு பொறுப்புள்ள தொழிலில் இருப்பவன் என்ற வகையில் இப்போதைக்கு முகப்புத்தகத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன் ..

Tuesday, December 18, 2012

"இரவு தேசம் " 1

       நெடுநாள் பழகியது  போன்ற உணர்வை ஏற்படுத்தும் முகங்கள், நன்கு தெரிந்த பழக்கப்பட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் இடங்கள். என பல விடயங்கள் சில நிமிடங்கள்  அல்லது நொடிகளுக்குள் ஏற்படுபவைதான். எப்போதோ எங்கேயோ மனதுக்குள் ஒரு ஓரமாய் ஒழிந்து
 கிடக்கும் அல்லது புதைந்து கிடக்கும் அந்த சமாச்சாரங்களை கிண்டிக்கிளறி எடுக்கும் மேற்படி விடயங்களுக்கு நன்றி சொல்லி மரியாதை செய்வது அதிகம் பொருந்தும். நிதானிக்க நேரமின்றி 
  ஒடுபவார்களுக்கு ஏறி வந்த ஏணியை நினைவுபடுத்தும் வல்லமை உள்ளவை இம்மாதிரியான நினைவுபடுத்தும் விடயங்கள்

நேற்று இரவு நாடு முழுவதும் கன மழை. கொழும்பில அல்லது நகர்ப்புறங்களில் இயற்கை கொடுக்கும் சந்தோசங்களை ஈடுபாட்டுடன் அனுபவிக்க ஒரு மகான் நிலை கண்டிப்பாய் வேண்டும். அவ்வளவு கஷ்டமானது. வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தும்மல் வராமல் போவது போன்ற  அசவ்கரியத்தை கொடுக்கும் சம்பவங்கள் நிறைய நடப்பது இங்குதான் ,  பல பொழுதுகள் கடற்கரை, காற்றையும் அலை சொல்லும் சேதிகளையும் கேட்டு ரசிக்க செல்லும் மன நிலையை  கூட அலை அலையாய் வரும் காதல் ஜோடிகள் மாற்றி விடுகின்றன என்பது  உதாரணம். இது வயது கோளாறு?

இருளை அனுபவிப்பது ஒரு அலாதியான இன்பம். அதிலும் அது செயற்கை தன்மை அல்லாத இருளாக இருப்பது இன்பத்தை கூட்டும், கலப்படம் இல்லாத இருள் என்பது முக்கியம் ,  இங்கும் நகர்புற இருளை குறை சொல்ல வேண்டிவருகின்றது, உண்மை இருள் என்பது எல்லாம் அடங்கிய ஒரு மோன நிலை...  அது கனவில்லாத தெளிந்த உறக்கம் போன்றது , நினைவில்லாத நிம்மதி போன்றது , இயற்கைக்கே உரிய அழகான ஓசைகளை தவிர்த்து அனைத்தும் வாய் மூடி மௌனித்திருக்கும் நிலை, பிறந்து 6 , 7 மாதம் ஆன  குழந்தை  விடிவதற்குள் எழுந்து தனக்குத்தானே சிரித்துக்கொள்லுமே  அப்படியான ஒளியும் இயற்கையின் அழகான சத்தங்களில் ஒன்றுதான்.   அவை ஒன்று கலந்த இருளை அனுபவிப்பதும் அள்ளி அள்ளி பருகுவதும் அளவில்லாத ஆனந்தத்தை தரவல்லது,இப்படியான இருள் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் கிடைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று !...

Thursday, December 13, 2012

"சூப்பர் ஸ்டாரை பாதுகாத்த தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகனை முழுமையாக பாதுகாக்கவில்லை "ரஜினி சாரை பார்க்கும் போதெல்லாம் வியப்பும், ஒரு சின்ன   கவலையும்  குடிகொள்ளும் வியப்பு என்பது ஒரு தனி மனிதன் அடைந்திருக்கும் இந்த எட்ட முடியாத எல்லையை நினைத்து, அந்த உயர்வை நினைத்து, உழைப்பை நினைத்து .  கவலைகொள்வது சினிமாவில் ரஜினி என்ற ஆளுமை பின்னாளில் சிக்கிப்போன குறுகிய வட்டம்தான். மிக சிறிய வட்டம் அது, ஆனால் அந்த குறுகிய வட்டத்தை உலகம் முழுவதும் திரும்பி பார்த்து வியக்கும் புள்ளியாக மாற்றியமைத்த ரஜினி சார் மீது மறுபடியும் வியப்பு ....


அண்ணாமலை வெற்றிக்கு பிறகு வந்த படங்களை பார்த்தால் அந்த வட்டம் என்ன என்பது நன்றாக தெரியும் வெளிப்படையாக் புரியும் ( எந்திரன்  , பாபா வை தவிர ). என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவின் மிகை நடிப்பு தெரியாத மிக சரியான நடிகர் ரஜினி சார்தான் சிவாஜி கணேசன் அவர்களின் பழைய படங்கள்; பார்த்தவர்களுக்கு புரியும் ஒரு பாடல் என்றால்கூட வாய் கிட்டத்தட்ட 190 பாகைகளை தாண்டும், நெஞ்சு  நரம்பெல்லாம் புடைத்து வெடிக்கும் இது அக்மார்க் நாடகத்தனம்  , கமல் சார் ஒரு புது வடிவத்தை கதாபாத்திரத்ற்கு கொடுப்பார். ஆனால் மிக சரியாக பாத்திரம் என்னவோ அதை அப்படியே உள்வாங்கி கொடுக்கும் ஒரு தனித்துவ நடிகர் என்றால் ரஜினி சார்தான். முள்ளும் மலரும் படம் பார்த்தவர்களுக்கு அது புரியும் இன்னொரு பக்கம் ராகவேந்தரா படத்தில் ரஜினி சாரின் முக அமைதி ஒரு ஞானியால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று , ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு பரிணாமத்தை காட்டுவார் , மறக்க முடியாதது அவர் பண்ணிய தில்லுமுல்லு , தளபதி படத்தில் மௌனத்தில் ஒரு உணர்ச்சி பிரளயத்தையே முகத்தில் காட்டுவார் ." உண்மை நடிப்பு என்பது நடிக்காமல் இருப்பது"என்ற வாசகத்தை  தாரக மந்திரமாக கொண்டு படம் எடுத்தவர் இயக்குனர் மகேந்திரன் அதை அப்படியே பின்பற்றுபவர் என்பதால்தானோ என்னவோ மகேந்திரனுக்கு மிக பிடித்த நடிகர் ரஜினி.  (இன்றளவும் தமிழின் முக்கிய இயக்குனர்களில் மகேந்திரன்  முதன்மையானவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்காது என்று நம்புகின்றேன்  ) .அப்பேற்பட்ட நடிகனை வணிக சினிமா ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்துவிட்டது என்பது கவலையைத்தான்  தருகிறது,  எது எப்படியோ விறு விறு வேகம். மந்திர புன்னகை, சின்ன சிரிப்பில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் லாவகம், எவனாலும் செய்ய முடியாத stayle  என்று ரஜினி சாருக்கு தமிழ் சினிமா வகுத்துக்கொடுத்த சின்ன வட்டத்தை கொண்டு உலகம் முழுவதும் உயர்ந்து நிற்க அவருக்கு துணை வந்த அவரின் உழைப்பு இருக்கின்றதே அது அவ்வளவு இலகுவானது   இல்லை " 63 வயதில் நம் எல்லோருக்கும் பிடித்த சூப்பர் ஸ்டார் பத்திரமாக மிகப்பெரிய எவராளும் அடைய முடியாத உச்சத்தில் இருக்கிறார் ,ஆனால் ஒரு நல்ல  யதார்த்த நடிகனை நாம் எப்போதோ  தொலைத்துவிட்டோம் "....
Copyright © 2014 நட்சத்திரவீதியில்