Friday, January 11, 2013

25 வயது ( சுய தம்பட்டம் )

அத்தனை அன்பு வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், என்று நான் சொன்னால் அந்த வாழ்த்துக்களுக்கு நான் கொடுத்த உச்ச மரியாதை அதுவாக இருக்காது என்று நினைக்கின்றேன். இருந்தாலும் தமிழில் அந்த வார்த்தை மட்டும்தான்  என்பதால் அதை அடி மனதில் இருந்து உண்மையாக சொல்கின்றேன் "எல்லா வாழ்துக்க்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்" நான் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அகந்தையை குறிக்கும் என்று நான் கருதவில்லை "நாதியற்றவன்" என்பதன் சுருக்கம் தான் நான் என்பது என் கருத்து .   
25 வயது என்பதை நினைக்கும் போதுதான் எனக்குள் வாழ்கையின் மூன்றில் ஒரு பங்கிலும் அதிகமான காலம்  வாழ்ந்துவிட்டேன் என்பதை சந்தோசமாக உணர முடிகின்றது. வயது அதிகமாக அதிகமாக பொறுப்பை விட திருப்தி  அதிகமாகின்றது என்பது சந்தோசமான விசயமா ?? வாழ்வின்  அடிமட்ட  நிலையில் இருந்து எனக்கான பாதையை தேட ஆரம்பித்து இன்னமும் தாகத்தோடு போராட ஆசைப்படும் ஒருவன் என்ற மமதை இல்லாத நம்பிக்கையும் உண்டு. இதுவரையில் தோல்விகள்தான் அதிகம் என்றாலும் மனம் எப்போதும் தளரேன் காரணம் "நான் தமிழன் பச்சை தமிழன்."

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது என்பது எனது நண்பர்களுக்கு தெரியும். நேற்றுவரை எதை சாதித்தோம் என்று கொண்டாடுவது என்ற கேள்வி தான் அந்த உணர்வுக்கு காரணமாய் இருந்தது. இருந்தும் சில மனிதர்களுடன் வாழ்வதே எவ்வளவு கடினமான  காரியம் என்பதை நினைக்கும் போது அதுவும் ஒரு சாதனை தான் என்பது என் அகந்தயில்லாத நம்பிக்கை. எனக்கே தெரியாமல் எனக்கு   போடப்பட்ட முகமூடிகள் அதிகம் இன்னும் தெளிவாக சொல்வதானால் எனக்கு நல்ல பெயர் என்பது ரொம்ப குறைவு. எனக்கே தெரியாமல் அவை உருவாக்கப்படுகின்றன.  இந்த வருடம் நான் எதிர்கொண்ட மிகப்பெரிய மனப்போராட்டம் இதுதான் "நான்" என்பது பற்றி எனக்கே தெரியாதபோது எப்படி நம்மை சூழ இருப்பவர்கள் நம்மை எடை போடுகின்றார்கள் ???? இது கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று அல்லவா? ஆனால் அந்த மன போராட்டத்தில் இருந்து நான் மிக பத்திரமாக வெளிவந்துவிட்டேன், இது இந்த வருடத்தில் நான் அடைந்த மிகப்பெரிய வெற்றி .. 

யாருக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சித்தால் பார்க்கும் ஒவ்வொருவருக்காகவும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உண்மை நிஜமாய் உரைப்பதால் "நான் எனப்படும் நாதியற்றவன் நானாகவே இருந்துவிட்டு செல்கின்றேன்" .....

4 comments :

  1. எப்படி நம்மை சூழ இருப்பவர்கள் நம்மை எடை போடுகின்றார்கள் ????
    நல்ல கேள்வி ஆனால் பதிலில்லை. ஒவ்வொருவரும் தம்மை தனியான உலகமாக வடித்திருந்தால் தம்மைப் போல மற்றவரும் நடக்க வேண்டுமென நினைப்பார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்த முயன்றால் 'நீ' என்பதை இழக்க வேண்டி ஏற்படும். 'நான்''நல்லவன்'என்பதை விட நான் நானாக இருக்கிறேன் என்று வாழ்வதே நல்லது............வாழ்த்துக்கள் (சுய தம்பட்டம் கூடாது)

    ReplyDelete
    Replies
    1. 'நான்''நல்லவன்'என்பதை விட நான் நானாக இருக்கிறேன் என்று வாழ்வதே நல்லது............:)

      Delete
  2. சில மனிதர்களுடன் வாழ்வதே எவ்வளவு கடினமான காரியம்......இப்படியானவர் கள் நம் ஒவ்வொரு அசைவிலும் எங்களின் குறைகளைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்......பிறர் எம்மை எடை போடுகிறார்கள் என்பதற்காக நாம் எம் எண்ணங்களை மாற்றம் செய்ய வேண்டுமா......????
    நீ நீயாக இரு...நான் ”நான்” என்ற ”நாதியற்றவனாக” இருக்கிறேன்....

    "நான் எனப்படும் நாதியற்றவன் நானாகவே இருந்துவிட்டு செல்கின்றேன்"
    Follow this........

    ReplyDelete
  3. யாருக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சித்தால் பார்க்கும் ஒவ்வொருவருக்காகவும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உண்மை நிஜமாய் உரைப்பதால் "நான் எனப்படும் நாதியற்றவன் நானாகவே இருந்துவிட்டு செல்கின்றேன்" .....
    great anna...

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்