Saturday, June 11, 2011

ரஜினி ரஜினிதான்

"ரஜினிகாந்த அவர்கள் நலம் பெற உலகம் முழுவது நடந்த பிரார்த்தனைகள் கைகொடுத்துள்ளது விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார் ரஜினி நான் அதிகம் படிக்கும் ஒரு இணையதளமான என் வழி இணையத்தில் எனக்கு ரொம்ப பிடித்த ஒரு ஆக்கத்தை இங்கு உங்களுக்காய் தருகிறேன் வெளி உலகத்திற்கு நல்லவர்களாய் காட்டிக்கொள்ளும் பலர் யோசிக்காமல் பட்டென சொல்லும் பதில்கள் அவர்களின் உண்மையை காட்டிவிடும் இந்த செவ்வியில் ரஜினி அவர்கள் சட்டென சொல்லும் பதில்களிலும் அவரின் நிதானத்தை பாருங்கள் உண்மையிலேயே ரஜினியை பலர் வழிகாட்டியாக ஏற்றுகொண்டதில் தவறேதும் சொல்வதற்கில்லை"


இதுவும் ஒரு ஃப்ளாஷ்பேக்தான்… 1981- பிப்ரவரி மாதம், திருமணமான புதிதில், கணவர் ரஜினியை மனைவி லதா பேட்டி எடுப்பதுபோல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது.

ஒருபேட்டி எடுக்கப் போய்தான், ரஜினியின் மனதைக் கவர்ந்து மனைவியானார் லதா என்பதால், திருமணத்துக்குப் பின் இன்னொரு பேட்டி எடுக்க வைத்தார்கள் போலிருக்கிறது.

ரஜினி, லதா இருவருமே இதற்கு உற்சாகமாக சம்மதித்தனர்.

அப்போது, லதா கேட்ட கேள்விகளும் ரஜினி அளித்த பதில்களும் இதோ:

லதா: நீங்கள் எனக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகையை மணந்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்?

ரஜினி: சினிமா நடிகையும் ஒரு பெண்தானே!

லதா: படப்பிடிப்புக்குப் போய்விட்டு வீடு திரும்பும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

ரஜினி: எனக்கு என்ன தோன்றும் என்று உனக்குத்தான் தெரியுமே! எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?” (‘வேண்டாம்’ என்றார், லதா வெட்கத்தோடு)

லதா: ‘ஏன் கல்யாணம் செய்து கொண்டோம். பிரம்மச்சாரியாக இருந்திருக்கக்கூடாதா’ என்று எண்ணியதுண்டா?

ரஜினி: உன்னோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும்போது, கல்யாணத்தை எவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று வருத்தப்படத்தான் தோன்றுகிறது.

லதா: வசதியான வீடு, மனத்திற்கேற்ற மனைவி, சினிமாப்புகழ் இந்த மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?

ரஜினி: என் தனித்தன்மையை.

லதா: என்னிடம் இதுவரை சொல்லாத ரகசியமோ, மறைத்து வைத்த விஷயமோ உண்டா? இருந்தால் ஏன் சொல்லவில்லை?

ரஜினி: என்னிடம் எந்த ரகசியமும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட நீயே இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே, நியாயமா?

லதா: ஒரு மனைவியின் முதல் குழந்தை கணவன் என்கிறார்களே, அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

ரஜினி: என்னைப் பொறுத்தவரை ஒப்புக்கொள்கிறேன்.

லதா: குடும்ப வாழ்க்கையில் என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எது அடையாளம்?

ரஜினி: நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதுதான் அடையாளம்.

லதா: ஒரு பிரபல நடிகரின் மனைவியாகிய எனக்கு, உண்மையான மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது?

ரஜினி: என்னுடைய மகிழ்ச்சியில்.

லதா: என்னைப் போலவே யாராவது டெலிபோனில், ‘நான்தான் லதா பேசுகிறேன்’ என்று சொன்னால் நீங்கள் நம்பிவிடுவீர்களா?

ரஜினி: என் ஜில்லுவின் குரல் எனக்குத் தெரியாதா என்ன?

லதா: மனம் விட்டுச் சொல்லுங்கள். என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எது?

ரஜினி: முன்பின் தெரியாமல் எல்லோரிடமும் கருணை காட்டுவது!


-நன்றி என் வழி குழுவினர் மற்றும் திரு. வினோ -

"தமிழக முதல்வரும் நம்மவர் தீர்மானங்களும் "



அடுத்தடுத்து அதிரடியாய் அடிதடியாய் நகர்கிறார் அம்மையார் முதுகெளும்புடைந்துபோன கருணாநிதியின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது! அதே சமயம் கடந்த கருணாநிதி ஆட்சியின் தடங்களை அழிப்பதில் மும்முரமாகவும் ஈடுபட்டிருப்பதனால் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நம்மவர்கள் தொடர்பாக முதல்வர் அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தைரியமான ஆச்சர்யமான தீர்மானங்களின் நீடிப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்பாக எனக்குள் சில கேள்விகளை எழுப்புகின்றன நான் இப்படி சொல்வதில் அர்த்தம் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் கடந்த வரலாறு முழுக்க பார்த்தால் தெரியும் கருணாநிதி எதை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதை அவருக்கு நேரெதிர் செய்பவர்தான் தமிழகத்தின் தற்போதய முதலவர் எனவே கருணாநிதி நம்மவர்கள் தொடர்பாக நடந்துகொண்ட விதத்தின் மறுபக்கத்தை அம்மையார் செய்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை அம்மையாரின் இந்த அடி தமிழரின் மூத்த தலைவன் என்று கொக்கரிக்கும் கருணாநிதியின் வாழ்கையில் வாங்கிய மரண அடி நல்ல பாடம்



ஆனால் ஜெயலலிதா அவர்களின் அவதாரத்தினால் இந்திய மத்தி கூட ஆடிப்போய்விட்டத்தை மட்டும் புறக்கணிக்கமுடியாது மறுபக்கம் இந்திய காங்கிரஸ் கட்சியினர் அடுத்த தேர்தலில் ஜெயலிதாவுடன் இணையவேண்டும் என்ற அழுத்தங்களை காங்கிரஸ் கட்சியின் உள்ளுக்குள்ளேயே உள்ளவர்கள் கொடுத்துவருவதாக சில நாளிதழ்களில் நான் படித்தேன் எனவே தமிழகமுதல்வரின் காங்கிரஸ் எதிர்ப்பு போக்கு எவ்வளவு காலம் என்பதை இப்போதைக்கு ஊகிக்கமுடியாதுள்ளது எது எப்படியோ தற்போதைக்கு ஜெயலலிதா அவர்களின் போக்கு தமிழரின் நம்பிக்கை !

மீண்டும் சனத் ஜெயசூரிய



இலங்கை அணியில் மீண்டும் சனத் இணைக்கப்பட்டமை குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது ... பல்வேறுபட்ட இணைய தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் இது தொடர்பான நிறைய சாதக பாதக கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ள இந்த நேரத்தில் நானும் சில கருத்துக்கள் பகிர நினைத்தேன் சாதாரண ஒரு ரசிகனாக சனத்தின் மீள் வருகை நான் மிக நீண்ட காலம் எதிர்பார்த்தது ஒன்று அந்த வகையில் மீண்டும் களத்தில் துடுப்போடு அவரை பார்க்க கிடைத்தது எனக்கு சந்தோசம் ( அடித்தாலும் அடிக்காவிட்டாலும் )"பாதம் தலை என்று எல்லாவற்றையும் சரி செய்துகொண்டு . பந்தை எதிர்கொள்ள சனத் களத்தில் நிற்கும் போது மனதுக்குள் எழும் அச்சம் கலந்த ஆர்வம்" எனக்கு இன்றுவரை வேறு எந்த துடுப்பாட்ட வீரர் ஆடும்போதும் எழுந்ததில்லை



பார்த்துட்டே இருந்தா எப்டி பாஸ் ?... சீக்கிரம் கிளம்புங்க

சனத்தின் தீவிர ரசிகனான எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு கவலை சனத் சரியான முறையில் அணியில் இருந்து உரிய மரியாதைகளுடன் வெளியேறவில்லை "ஒரு விளையாட்டு வீரன் புகழின் உச்சியில் இருக்கும் போதே (போதும் என்றளவு சாதித்து விட்டால் ) இளையவர்களுக்கு இடம் கொடுத்து கௌரவமாய் விலக வேண்டும்" என்று பிரபல கிரிக்கட் விமர்சகரான வெற்றியின் லோஷன் அண்ணா சொல்வது சனத்துக்கு சாலப்பொருந்தும்...



தவிரவும் களத்தில் துடுப்போடு பார்த்த இவரை கையில் மைக்குடன் அரசியல் மேடைகளில் ஐயோ சகிக்கல! சிறந்த அணியாக தன்னை மெருகேற்றிக்கொண்டிருந்த சிம்பாப்வே அணியின் தற்போதைய நிலை இலங்கைக்கும் வந்துவிடுமோ என்று எனக்கு கொஞ்சம் விபரீதமான பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறது பாமரத்தனமான பயமாகவும் இருக்கலாம் ஆனால் இலங்கை அணி சமகாலத்தில் இங்கிலாந்தில் விளையாடும் விதம் அந்த பயத்தை எனக்குள் தோற்றுவித்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை எது எப்படியோ இங்கிலாந்து தொடரில் கௌரவ பாராளமன்ற உறுப்பினர் சனத் அவர்கள் நல்ல இனிங்க்ஸ் ஒன்றுடன் சர்வதேச கிரிக்கட்டுக்கு விடை கொடுத்தால் நல்லது ஒரு வேலை இந்த போட்டியிலும் நல்ல இனிங்க்ஸ் இல்லை என்றால் மறுபடி இன்னுமொரு போட்டியில் விளையாடினாலும் ஆச்சர்யப்படுவதட்கில்லை!!!

Friday, June 10, 2011

"இசைகேட்டு வளர்ந்தேன் "



‎"இவரின் பாடல்கள்தான் சிறந்தது அவரின் பாடல்கள்தான் சிறந்தது என்று என் காதுபட பலர் சண்டைப்பிடிக்கிறார்கள் என்னால் 1950 களில் இருந்து இன்று வரை உள்ள எத்தனையோ பாடல்களை ரசிக்கமுடிகிறது .... நல்ல இசை என்பதை இசையமைப்பாளர் நிர்ணயிப்பதில்லை அது கேட்பவனின் காதினாலும் மனதினாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது "

Wednesday, June 8, 2011

"விருப்பமில்லா இரவுகளின் நீளம் கொடுமையானது "

"என் வாழ்நாளில் நான் போக கூடாத உயிரே போனாலும் போகவே கூடாத ஒரு இடமாய் எப்போதும் கருதுவது வைத்தியசாலைதான் மருந்து வாடை .நோயாளர்களின் முனகல் ., நர்சுகளின் அலட்டல் , டாக்டர்களின் முகம் , கொடூர முதுமை அல்லது முதுமையை கொடூரமாக்கிக்கொண்டவர்கள் , மரணத்துக்காய் காத்திருக்கும் மனிதர்களின் விரக்தி புன்னகை, , ஊசி வலிக்காய் அண்டம் சிதற கத்தும் குழந்தைகளின் அழுகை என்று வைத்தியசாலை அநியாயத்துக்கு மிரட்டுகிறது என்னை (இவை எனக்கு எப்போதும் ஒட்டாது என்று ஆரம்பத்திலேயே தெரிந்ததலோ என்னவோ அப்பாவின் ஆசைப்படி வைத்தியர் ஆக எனக்கு ஒரு பொறி அளவு எண்ணம் கூட வரவில்லை)



பல முறை அப்பாவுக்கு துணையாய் கொழும்பு ஆதார வைத்தியசாலையில் என் இரவுகளை நான் கழித்திருக்கிறேன் ... வாழ்நாள் முழுதும் மருந்தே உணவாகிப்போன அவருக்கு வைத்தியசாலை ஒன்றும் புதிதல்ல ஆனால் அங்கிருந்த ஒவ்வொரு நொடியையும் பல்லை கடித்துக்கொண்டு (அப்பாவுக்காக ) நான் சகித்துக்கொண்ட நாட்கள் இனிதிரும்பவே கூடாது என்றும் யாருக்கும் வரக்கூடாது என்றும் தினம் இரவுகளில் நினைப்பதுண்டு

உண்மையில் இப்போதெல்லாம் நேரம் நகரும் வேகம் கற்பனைக்கும் எட்டுதில்லை .... எப்படி நேரமானது என்றுகூட ஸ்தம்பிக்கிறேன் ஆனால் வைத்தியசாலைகளில் நான் கழித்த நொடிகள் மட்டும் ஏன் அவ்வளவு நீளமாய் இருந்தது ????
இன்றளவு வாழ்க்கையில் குறைந்த வேகத்தில் நேரத்தின் பயணம் அந்த வைத்தியசாலைகளில் தான் நான் உணர்ந்திருக்கிறேன் "

Tuesday, June 7, 2011

போங்கையா நீங்களும் உங்க பேச்சுவார்த்தையும் "



என்ன அண்ணாச்சி நீங்க? மறுபடியும் இப்டி பண்ணிட்டீங்களே ...அண்ணாச்சி இந்த முறை உங்கள எப்டியும் மந்திரி ஆக்கி அனுப்பியே தீரணும்னு நம்ம படிச்ச பயபுள்ளைக சொன்னதால தான் அனுப்பினோ ...எனக்கு படிக்க வராது பாருங்க அதக்காக எத்தன வாட்டி இப்டி எங்கள காட்டிக்கொடுப்பீங்க மூணு பேரா மொத்தமா அள்ளிக்கிட்டு பார்லிமென்ட் போகும்போதே நெனச்சேன் இந்த வாட்டி நம்மாளுகளுக்காக ஏதோ பெருசா கிழிச்சி கோர்துடுவீங்கனு

அதே மாதிரி பிரிச்சு மேஞ்சிடீங்க போங்க நாலு புள்ளைகளோட நானும் மனுசியும் விழுந்து விழுந்து வேலை செஞ்சும் ரொட்டிக்கு மாவு வாங்க பெட்டிக்கடைல கால்கடுக்க நிக்கிற வேதனை உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லீங்க
மூனாவது பொண்ணு படிக்கிறதுக்கு புஸ்தகம் கேட்டு நிக்கிறப்போ பயலுக்கு வகுப்பு பீசு கொடுக்க இருந்த காசுல பாதிய குடுத்துட்டு திரும்புரப்போ வயசுக்கு வந்த ரெண்டாவது புள்ளைக்கு சடங்கு சுத்த காசு இல்லாம பொண்டாட்டி தாளித்துண்ட எடுத்துகுட்டு வட்டிக்காரன்கிட்ட போறப்போ மனசுக்குள்ள நான் அழுகுறது என் பொண்டாட்டிக்கே தெரியாது உங்களுக்கு எங்க தெரியப்போவுது

காய்ச்சல் தும்மல் வந்தா கூட சாய்த்தன்னிய குடிச்சுபுட்டு மலைய உட்டு எறங்காம வேல பாக்குற அவளுக்கு நா எப்டி ஆறுதல் சொல்லறது ? ... நா என்ன தொன்நூராயிரமா சம்பளம் கேட்டே ? ... ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா வாங்கி தர முடியாதா ? உண்மைல மோதலாளிமாரோட மாசக்கணக்க அப்டி என்னதான் பேசுறீங்க ...இந்த நூறு ர்ரோவா வாங்கத்தான் ஆயிரக்கணக்குல செலவு பண்ணிட்டு மீட்டிங் போடீங்கலாகும்

முன்னூத்தி என்பது ரூபா எனக்கு போதும்னு நீங்க எப்டி முடிவு பண்ணுவீங்க ...நீங்க என்ன எனக்கு சகலையா இல்ல சம்மந்தியா ...... இல்ல மாசத்துல பதினஞ்சு நாள் என்கூட மலைல ஏறி கூட சொமக்குறீங்களா தேர்தல தவிர எப்பவாவது உங்கள நேர்ல நான் பார்த்தா நெனவே இல்லையே ...நீங்க எவ்ளோதான் எங்க வயித்துல அடிச்சாலு வலிக்குமா எங்களுக்குன்னு ? வடிவேலு சொல்றமாதிரி நாங்களும் ஒவ்வொரு தேர்தளுளையும் அனுப்பிட்டுதான் irukkom நம்ம புள்ளைகளோட புள்ளைங்க என்னைக்காவது இந்த பாவத்துக்காக எங்களை காரித்துப்புமேயா ?

அது சரி எனக்கு பிரச்சன இருந்தா தானே உங்களுக்கு பதவி ...இந்த பயளுகலாவது உருப்படியா நாலு எழுத்து படிச்சு இங்கயே ஒரு வேலைய செஞ்சி எங்கள வேலைய விட்டு நிப்பாடுவானுங்கனு பார்த்தா அவனுங்களும் கொழும்புக்கு பொய் ரொட்டி அடிக்கிறேனுதான் இருக்கானுங்க அவனுங்க பயலுகலாவது படிச்சு எங்க ஆத்மாவயாவது சந்தோசப்படுத்தட்டும் .... அப்பயாவது ஐநூறு ரூபா வாங்கி தருவீங்களா அண்ணாச்சி!!! ?? ..

Sunday, June 5, 2011

விருது



கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்சங்கம் நடாத்திய முத்தமிழ் விழாவில் ... சக்தி வானொலியின் சமகால நிகழ்ச்சி தயாரிப்பாளரும் ,

வானொலி நாடக இயக்குனருமான .திரு ஆ .ராஜ்மோகன் அவர்களுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது .... இலங்கையில் வானொலி துறையில் ஒருவருக்கு இவ்வாறான விருதுகள் கிடைப்பது என்பது மிக அபூர்வமான விடயம்

உண்மையில் இந்த விருது இவருக்கு கிடைத்தமை விருதுக்கு மட்டுமல்ல விருதை அளித்தவர்களுக்கும் கிடைத்த பெருமையாகவே நான் சொல்வேன் அப்படி நான் சொல்வதற்கு சில உதாரணங்களை சொல்கிறேன் .... அதற்கு முன்னாள்

யார் இந்த ராஜ்மோகன் ?

எதற்காக இவருக்கு இப்படி விருது வழங்கப்படவேண்டும் ?

அப்படி என்ன மற்றவர்கள் செய்யாததை ( இலங்கையின் வானொலி அறிவிப்பாளர்கள் ) இவர் செய்து விட்டார் ?

விரைவில் ,.நட்சத்திரவீதியில்..............
Copyright © 2014 நட்சத்திரவீதியில்