Saturday, April 17, 2010

ஊருக்கு போயிருந்தேன் ..........


அப்பா எத்தனை மாதகால ஏக்கம் "பிரசவத்தின் பாதிநாள் அல்லவா? ஆறு மாத கால தவம் "...."முதலிரவுக்கு நாள் தள்ளிப்போகும் புதுமணத்தம்பதிகள் எப்போ? "என்று கேட்கும் வேகத்துடன் காத்திருந்தேன் இந்த இரண்டு நாட்களுக்காக( ஹீ ஹீ...)

ஆறுமாதங்களின் பின் உண்மையான காற்றை சுவாசித்த ஆனந்தம் ,முதல்மார்க் வாங்கிய முன்பல்லிமானவனின் பேரின்பம் பிறந்தமண்ணை இவ்வளவுகாலம் பிரிந்திருந்தது இதுதான் முதல்தடவை ,தலைநகரில் நான் என் பெற்றோரைவிட அதிகமாக இழந்ததாக உணர்ந்தது இந்த மன்னய்த்தான் இருக்காத பின்னே? "இந்த மண்ணுக்குத்தான் என் உயிர் துடிக்கும் ஓசை தெரியும் ,என் கண்ணீரின் உப்பு தெரியும் ,யாவற்றுக்குமேல் என் உண்மைகளும் உண்மையான என்னையும் புரியும் ......"
நுழைவாயிலில் உரசிய மெல்லிய ஜிலு ஜிலு காற்றிலே ..இருபதுவருடகால சரித்திரமும் மணிரத்னம் படத்தொகுப்பு போல மனசில்

எங்கள் ஊருக்கு செல்வதும் அரைகுறையாய் படித்த ஒருவன் வேலைதேடுவதும் ஒன்றுதான் என்னவொன்று அங்கே கால்பிடிப்பது இங்கே பஸ் பிடிப்பது இரண்டுநாள் விடுமுறையில் அரைநாள் பஸ் பிரயாணம் இதில் கடைசி பஸ் யும் விட்டால் இரவுமுழுவதும் பிச்சய்க்காரர்களின் வாழ்கை வரலாற்றை உணரவேண்டியதுதான்

நடுத்தர குடும்பப்பெண் ஒருத்தி அழுவழகத்தில் இருந்து கடைசி பஸ் பிடிப்பதற்கான வேகத்துடனும் பரபரப்புடனும் ஓடிக்கொண்டிருந்தேன் .....மகாராசன் பஸ் வண்டி 15 நிமிடம் தாமதம் ..எனக்கு எப்போதும் பிடித்த கடைசி இருக்கையின் கடைசி இருக்கையில் உலகத்தை வென்ற மகிழ்ச்சியுடன் அமர்ந்தேன் எதேச்சையாக யன்னல் நீராவியில் பெயர் எழுதிப்பார்க்கும் வழக்கமான என் குரங்குதனத்தில் திரும்பிய ஒருநிமிடத்தில் அந்த சம்பவம் நடந்து முடிந்தது

என்ன ஒரு அழகு ...ச்சே chance எ இல்ல இலவம்பஞ்சு என்றால் இதுதானோ? அந்த தோள்கள் ,காஷ்மீர் குளிருக்கு நாம் போடும் கம்பளிகூட இவ்வளவு பரிசுத்தமாக இருக்காது ...........அந்த கண்கள் அந்த கண்கள் அதேதான் ஆஹா யோகநிலையில் இப்படித்தான் பணிந்திருக்குமோ? அந்த அழகில் நான் உறைந்தே போய்விட்டேன்,அந்த கண்களின் அமைதியை கண்டு என்னையே மறந்துவிட்டேன் ....

என்னவொரு தைரியம் ...இந்த இரைச்சல்களை கொஞ்சமும் காதில் வாங்காமல் ,இந்த தெருவோர அங்காடிவிட்பனை பலகையிலா உறங்குவது ,இந்த கொள்ளை அழகுடன் ,பாதுகாப்பைபற்றிய துளி கவலையும் இன்றி இந்த வயதில் வயதுக்கு மீறிய துணிச்சல்தான் ....
பார்வையை திருப்பமுடியாமல் கஷ்டப்பட்டு பஸ் இல் இருந்த மற்றவர்களையும் பார்த்தேன் நான் நினைத்தது சரி என்னைமட்டுமல்ல அங்கிருந்த அத்தனைபெரினுடைய பார்வையையும் வசீகரித்திருந்தது அந்த "நாய்க்குட்டி"

"தன்னை மறந்த முழுமை உறக்கம் அது .......தொப்பி களவு போவது தெரியாத வியாபாரியின் உறக்கம் அது ..........நான் உட்பட எம்மில் பலரும் ஆறுவயதிலேயே தொலைத்துவிட்ட நிஜ உறக்கம் அது ......""ஒரு குழந்தையை கொஞ்ச ஆசைப்படும் தகப்பன் இடத்தில் நின்று அந்த நாய்க்குட்டியை ரசித்துக்கொண்டிருந்த "என் கண்ணுக்கும் அந்த குட்டிக்கும் இடையிலான கோட்டுக்குள் நுழைந்தது ஒரு தாடிக்கார தடிமாடு (மனுஷேதாங்க )
ஒரு அறுபது வயதிருக்கும் ,நல்ல திடகாத்திரமான வயோதிப வாலிபன் ஒருவன்(ர்ர்ர்) அந்த ஐந்தறிவு மழலையை தூக்கி முன்னும் பின்னுமாக திருப்பி எதோ ஆராய முற்பட எங்கிருந்தோ வந்த அதன் தாய் அவன் மீது பாய தடம் தெரியாமல் ஓடிய அவனை கண்டு அந்த பேருந்தே சிரித்தது
"ஆணாதிக்கமும் ,ஆணுக்கே முதலிடம் கொடுக்கும் கேவலங்களும் உங்க ஆறறிவுக்குள்ள இருக்கட்டும் எங்களுக்குள்ளும் அந்த கேவலங்களை புகுத்தினால் இப்படித்தான் நடக்கும் என்பதுபோல் "
விடாமல் குரைத்துக்கொண்டிருந்த அந்த நாயை பார்த்து சின்ன புன்னகையோடு இருந்த என்னோடு பேருந்து ஊர் பாதையில் நகர்ந்தது "ச்சே சூப்பர் குட்டிடா ஆண்குட்டி யா இருந்தா இப்பவே கொண்டு போய்டுவேன்" என்ற என் முன்னிருக்கைகாரனுக்கு ஆறறிவாம்?
Copyright © 2014 நட்சத்திரவீதியில்