Saturday, July 9, 2011

தெற்கு சூடான் விடுதலை"50 வருடகால போராட்டத்தின் முடிவில் கருப்பு தேசம் ஒன்றிற்கு வைர விடுதலை இருபது லட்சம் ஆத்மாக்களை காவுகொண்ட குழல் துப்பாக்கி அரக்கர்களாலும் கேவலமான சித்திரவதை கூடங்களாலும் தடுக்க முடியாமல் போன நியாயத்தின் வெற்றி ! புதிய தேசத்திற்கு தமிழனாய் வாழ்த்துகிறேன் !

Tuesday, July 5, 2011

"தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே "ஆவணப்படம் பார்த்து அதிர்ந்த பலரில் நானும் ஒருவன் , பாதிக்கு மேல் உடல் நடுக்கம் எடுக்கவே நிறுத்திவிட்டேன் (நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல்தான் ) மறுநாள் வெற்றியின் லோஷன் அண்ணாவின் பதிவில் ஆவணப்படம் பார்த்த அவரின் உணர்வை கவிதையாக தீட்டியிருந்தார் , அதுவும் அதன் பங்குக்கு என் சட்டையை பிடித்து கேள்வி கேட்க எல்லாமே நாம் வாழும் காலத்தில் தானே நடந்திருக்கிறது என்றால் நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல் தானே ?, கையாலாகாத பேடிப்பயல்தானே ? அனால் ஒன்று மட்டும் உண்மை இரண்டாயிரம் வருடங்கள் மூத்தகுடியின் அடக்கப்பட்ட ஓசையை பறை ஓசை சாற்றுவது போல் இனி என் தமிழனுக்கு இப்பேற்பட்ட அவலம் எந்த யுகத்திலும் வராது என்றளவுக்கு அந்த காட்சிகள் எங்கள் அழு ஓலங்களை உலகம் முழுக்க சத்தமிட்டிருக்கிறது !

இதற்கு மேல் இதை பற்றி பேசும் எழுதும் தைரியம் இருந்தால் நான் ஏன் காட்சிகளை பாதியிலேயே நிறுத்த போகிறேன் ?

Monday, July 4, 2011

ஹி ஹீ ஹி ஹீ .....எங்கள் அலுவலக வளாகத்தில் எப்போது நிமிடத்திற்கு நிமிடம் சந்தோசங்களுக்கும் பரபரப்பிற்கும் கொஞ்சமும் குறைவிருக்காது விளையாட்டாக பேசும் பல விடயங்கள் வானொலியில் நிகழ்சிகளாக படைத்து மக்களிடம் வரவேற்பும் பெரும் அனுபவங்களும் அலாதியானவை
சம காலத்தில் நடக்கும் கடுமையான விடயங்களைக்கூட வெகு நகைச்சுவையாக சமைத்து கொடுப்பதில்
எங்கள் ராஜ் அண்ணாவுக்கு நிகர் அவர்தான் எனக்கு அவர் குரு என்பதால் பல விடயங்களை கற்றுக்கொடுப்பார் அப்படி ஒருநாள் நடந்த ஒரு சுவாரஷ்யமான உரையாடல்

நான் - அண்ணா அது என்ன சாகசத்தொடர்?
ராஜ் - க்ரிஷ் கவனிச்சுக்கோ யானை நடக்கிறது தொடர் ,
யானை ஓடுகிறது வீரத்தொடர்
அதே யானை பறக்கிறது சாகசத்தொடர்

( எனக்கு புரியிரா மாதிரி சொல்லுராராமாம் நான் தலையாட்டிக்கொண்டிருக்கிறேன் எங்கிருந்தோ வந்த சக அறிவிப்பாளர் பிரசாந்த் விட்டாரே ஒரு கமெண்ட் ...)

பிரசாந்த் - ராஜ் அப்ப யானை அழுகிறது மெகா சீரியலாடா ??????????

தாலாட்டு பாடவாஎங்கள் வானொலியில் என்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பல நிகழ்சிகளை நான் அனுபவித்து ரசித்து வழங்குவதுண்டு . நேற்றைய கவிராத்திரி தாலாட்டு பாடவா என்ற தலைப்பில் நகர்ந்தது .வழக்கம் போல சக்தி கவிஞர்கள் தங்கள் பங்குக்கு அசத்த என் பங்குக்கு திடீரென நிணைவுக்கு வந்த சில வரிகளை சிந்திக்க முன் என் மைப்பேனா கிறுக்கியது ....

வலிக்கிறது .....
என்ன என்ன வலிக்கிறது .....
நினைக்க் நினைக்க நெஞ்சு விம்மி வெடிக்கிறது ....
என்ன அவசரம் உனக்கு ...

வெட்டிப்பயளிவன்
வெறும் பயலிவன்
கடைசிவரை அப்படித்தான் என்று நீயாய் முடிவேடுத்தாயோ

இவன் உழைப்பில் எனக்கு உப்பிடுவான் என்று
ஊரெல்லாம் பேசிவைத்துவிட்டு ..
என் உதிரத்தில் உப்பில்லாமல் ஆக்கிவிட்டு
எங்கே கரைந்து போனாயோ

தகப்பன் மட்டுமா நீ எனக்கு
தங்கத்தின் தங்கம் அல்லவே
அப்பன் அல்ல நீ எனக்கு அதையும் தாண்டி..
பொன்னல்லவே நீ ?
தந்தை பெயர் மட்டுமா சுமந்தாய்
மனதில் குழந்தையாய் சுமந்த தாய் அன்றோ ?

உதவியாய் ஒன்று உன்னிடம்
எனக்கொரு குழந்தையாய் நீ வர உனக்கொரு தந்தையாய்
நான் தாலாட்டு பாடவா ?
மருஜென்மத்திலேனும் நான் தாலாட்டுப்பாட வா ....
Copyright © 2014 நட்சத்திரவீதியில்