Friday, January 18, 2013

"சிவப்பு தேநீர்"

{1925காலப்பகுதியில் தென்னிந்தியாவின் தேயிலை தோட்டமொன்றில் ஒரு உரையாடல் }


" இப்போ பரவயில்ல டாக்டர் 10 வருசத்துக்கு முன்னால நெனச்சே பார்க்க முடியாதளவுக்கு நிலைமை படு மோசமா இருந்தது மொத்த ஜனங்கள்ல பாதிபேரு ஒவ்வொரு வருசமும் மலேரியா வந்து செத்துப்போவாக .அதவிட கொறச்சல் பேரு நிமோனியா வந்து வயிற்ரோட்டம் வந்து செத்து போவாக .அப்போ எல்லாம் கூலிக   ஓடாம இருக்க எல்லா இடத்துலயும் காவக்காரங்கள நிறுத்தி வைப்போம். வேல செய்யும்போது கூட ஓடாம இருக்க கூலிகள கண்கானிச்சிட்டே  இருப்போம். பெரும்பாலான மேஸ்திரிக ராவுல கூலிகள அடச்சு வச்சுருவாக சில நேரம் சங்கிலில கட்டி வச்சுருவாக இத்தன  ஜாக்கிரதையா  இருந்தாலும் கூலிக  ஓடிப்போயிடுவாக, போறவங்க பாதி வழிலேயே செத்துறுவானுங்க, சில பேர  திருப்பி புடிச்சுட்டு வந்து மத்த கூலிகளுக்கு முன்னால பீதி ஏட்படுரா மாதிரி அடிச்சே கொன்னுடுவானுங்க

,ஒ... எஸ்டேட்ல எவ்வளவு  பயங்கரமான விசயங்கள எல்லாம் பார்த்திருக்கேன் தெரியுமா டாக்டர் கூலிகளா வந்தவங்கள்ள 90 வீதம் பேரு ஏமாத்தி  எஸ்டேட்டுக்கு  கொண்டுவரப்பட்டவங்கதான்.  அவுகளுக்கும் கூலிகளுக்கும் சம்பந்தமே இல்லாத நால  மிருகங்கள  மாதிரிதான் நடத்துவானுங்க. ஆடு மாடுகள கூட இதவிட நல்லபடியா  நடத்துவானுங்கனு சொன்னா கூட தப்பே இல்ல. திருநெல்வேலி கூலிகள சேத்த பின்னலாதான் நிலைமை கொஞ்சம் நல்லாயிட்டு வருது , 

வெள்ளைக்கார தொரைகலும் ரௌடிக மாரிதான் , புடிச்சு  கூலி பொண்ணுங்கள  படுக்க கூப்டுவாக சம்மதிக்கலனா அடிச்சே கொன்னுடுவாக , வேற வழி  இல்லாம இணங்கி போற பொண்ணுங்க கர்ப்பமாகிட்டா   ரொம்ப கொடூரம் கருவ கலைக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க சில நேரம்    வயித்துக்குள கைய விட்டு கருவ இழுத்துருவாக இல்லனா கரு கலைரா வரைக்கும் வயித்துல ஏறி மிதிக்கவும் செய்வாக , வருசா வருஷம் எஸ்டேட்ல இருக்குற ஜனங்கள்ல பாதி பேருக்கு மேல உயிரை விடலனா அது அதிஷ்டம்தான் ..... ("RED  TEA  தொகுப்பிலிருந்து) 



"இப்படி பலரின் உயிர் கொடையினால்  உருவாக்கப்பட்டதுதான் உலகம் அழகு அழகு என்று கொண்டாடும் இந்த சொர்க்க பூமி 

"இன்று டீ எஸ்டேட்களை பற்றி உங்களிடம் இருந்து நிறைய தெரிந்துகொண்டேன்" என்று என்று கூறிய டாக்டர் ஏப்ரகாம் யோசனையுடன் தனக்குத்தானே கூறிக்கொள்வதுபோல தொடர்ந்தார் இன்று இந்த எஸ்டேட்களில் உற்பத்தி செய்யப்படும் தேநீரை "சிவப்பு தேநீர்" என்று சொன்னால் அது   மிகைப்படுத்தல் ஆகாது என்று நினைக்கிறேன்  கடந்த காலங்களில் தங்களை தாங்களே பலி கொடுத்துக்கொண்ட ஆயிரம் ஆயிரம் ஆண் பெண்களின் இரத்தத்தாலும் கண்ணீராலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது இந்த   தேநீர். இந்த 
முகம் தெரியாத தேயிலை தொழிளாலர்கள் மற்றும் எழுத்துப்பணியாளர்கள் தென்னிந்தியாவில், சிலோனில் தேயிலை தொழிலை நிர்மாணிக்க செய்த தியாகங்கள் அரசாங்கத்தினாலும் நமது நாட்டு மக்களாலும் என்றாவது ஒருநாள் புரிந்துகொள்ளப்படும். அங்கீகரிக்கப்படும். என்று நாம் நம்புவோம்.  ("RED  TEA  தொகுப்பிலிருந்து) 
1925 இல் சொல்லப்பட்ட அந்த வார்த்தையை அச்சு பிசகாமல் அப்படியே 2013 இலும் சொல்லவேண்டி உள்ளது இன்னும் நூறு வருடம் போனாலும் அரசாங்கமோ நாட்டு மக்களோ அந்த  மாபெரும் தியாகங்களை நினைக்கப்போவதில்லை ........காரணம் அவை யாருக்கும் தேவை இல்லை 

2 comments :

  1. சிவப்பு தேநீர்..........தொழிலாளர்களின் உதிரத்தில் உதித்தது. மனதை நெகிழ வைக்கும் பதிவு.காலங்கடந்தாலும் நிகழ்வுகளின் ஒருமைத்தன்மையை பதிவு செய்தமைக்கு நன்றி கிருஷ்ணா. " பொண்ணுங்க கர்ப்பமாகிட்டா ரொம்ப கொடூரம் கருவ கலைக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க சில நேரம் வயித்துக்குள கைய விட்டு கருவ இழுத்துருவாக இல்லனா கரு கலைரா வரைக்கும் வயித்துல ஏறி மிதிக்கவும் செய்வாக " நடுங்கச் செய்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த புத்தகம் முழுவதுமே நடுங்கவைக்கக்கூடிய பல சம்பவங்களை கொண்டது முடிந்தால் கண்டிப்பாக படிக்கவும் "எரியும் பனிக்காடு" என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ( வருகைக்கு நன்றி )

      Delete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்