Sunday, October 30, 2011

விசித்திரமாகிப்போன சரித்திரம்



'சரித்திரம் விசித்திரங்களால் ஆனது அல்லது விசித்திரங்கள் நிறைந்தது தான் சரித்திரம் வெற்றியாளணினால் சரித்திரம் எழுதப்படுவதும் தோல்வியடைந்தவனின் விம்பம் அதில் எதிர்மறையாக சித்தரிக்கப்படுவதும் சரித்திரத்தின் விசித்திரம்தான். நாளை நிகழ்கால நல்லவர்களை அது கெட்டவர்களாக காட்டும் நிகழ்கால கெட்டவர்களை வீர தீர சாகசம் புரிந்தவனாக சரித்திர விம்பம் காட்டலாம் எல்லாமே வெற்றியின் கைகளில் உள்ளது. அல்லது சரித்திரத்தின் விம்பத்தை நிர்ணயிக்கும் சக்தி வெற்றிதான் '

கடாபி .......

கடந்த ஒரு வாரம் முழுவதும் உலகின் மூலைமுடுக்கெங்கும் உச்சரிக்கப்பட்ட அழுத்தமான பெயர் ஒரு சிலருக்கு கடாபி ஒரு கடுமையான புரட்சியாளன் ஒரு போராளி மேற்கின் நவகாலனித்துவ சக்திகளுக்கு எதிராக உரத்த தொனியில் எதிர்ப்பை காட்டியவர் லிபியாவை செல்வந்தனாக்கியவர் லிபிய தேசத்தை சர்வதேச அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியவர் ஆரம்பத்தில் லிபியாவின் 'ச்சே குவேரா' என்று அழைக்கப்பட்டவர் உலக முஸ்லிம் இளைஞர்களின் 'ஹீரோவாக' போற்றப்பட்டவர் ஒரு சமயம் மத்தி
ய கிழக்கையும் மறு சமயம் ஆப்பிரிக்காவையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர முயன்ற 'மண்ணை தான் சார்ந்த இனத்தை'நேசித்த ஒரு தலைவன்

ஒரு சிலருக்கு அவர் ஒரு மோசமான சர்வாதிகாரி தானே தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு பிடிவாதக்காரன் தன்னை பற்றி அதீத நம்பிக்கை கொண்ட ஒரு கற்பனா வாதி வெகு சிலருக்கு அவர் ஒரு பயங்கர வாதி சர்வ அதிகாரங்களையும் கொண்டதனால் அத்து மீறல்களை தாராளமாய் செய்த ஒரு சுயநல வாதி

இப்படி கடாபி நல்லவரா கெட்டவரா? என்று யாராவது கேட்டால் நாயகன் பாணியில் 'தெரியலம்மா' என்றுதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது நாற்பது வருடங்கள் பின்னோக்கி சென்றால் லிபியாவின் ஒரு ஆட்சியாளனை எதிர்த்து ரத்தம் சிந்தா இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை தன் கைக்குள் கொண்டு வந்த அந்த இளைஞன் ஒரு சாதாரண 'பழங்குடி இனத்தை சேந்தவன்'

வசீகரிக்கும் தோற்றம் கொண்ட அவனுக்கு வயது வெறும் இருபத்தேளே ஆனபோது உலகின் அனைத்து மூலையின் பார்வையையும் தன் வசப்படுத்தி ஆச்சர்ய படுத்தினான் தன்னை கேர்ணலாக தானே பதவி உயர்த்திக்கொண்டு ஆட்சியில் அமர்ந்த போது லிபிய மக்கள் அவனைஒரு மாவீரனாகவே பார்த்தனர் லிபியாவின் விடுதலைக்கான சரியான வழிகாட்டி அவன்தான் என பரி பூரணமாய் நம்பினர் மேற்குலகம் லிபிய என்னை வளங்களை சூறையாடுகிறது அவை லிபிய மக்களின் சொத்து என முழங்கிய பொது அவன் லிபிய மக்களின் 'ச்சே குவேராவாக' போற்றப்படுகிறான்

முழங்கியதோடு நின்றுவிடாமல் மேற்கு சூறையாடும் என்னை வள வருமானங்களை லிபியாவிட்குள்ளேயே முடக்கி லிபிய மக்களுக்கான பல நல திட்டங்களையும் உருவாக்கி வெற்றி கண்டான் என்னை வள வருமானங்கள் மக்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டு லிபியாவின் தனி நபர் வருமானத்தையும் உயர்த்திய போது அவன் ஒரு சிறந்த தலைவனாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டான் கடாபியின் அடுத்தடுத்த செயற்பாடுகளும் மக்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டன இந்த அங்கீகாரமே கடாபிக்கு தான் செய்வதனைத்தும் சரி என்ற மமதையை கொடுத்திருக்கலாம்



அடிப்படையில் ஆழமான கல்வியறிவு கடாபிக்கு இருந்ததாக தெரியவில்லை அதுவே தனக்கான ஒரு அரசியல் சித்தாந்தத்தை கடாபி உருவாக்க காரணமாய் அமைந்தது இந்த அரசியல் சித்தாந்தமே பல சுவாரஸ்யங்களை கொண்டது 'கிரீன் புக'; என்ற பெயர் கொண்ட நூல் வடிவில் அந்த சித்தாந்தத்தை கீறினார் கடாபி பல்வேறு பழங்குடி இனக்குழுக்களை கொண்ட லிபியா என்னும் அகண்ட தேசத்தை ஆழ அந்த சித்தாந்தம் கிட்டத்தட்ட சரியானதுதான் ஜனநாயகத்தையே சர்வாதிகாரமாக சித்தரிக்கும் கடாபி மக்கள் குழுக்கள் மூலம் மக்களை கட்டுப்படுத்துவதும் மத்திய குழு மூலம் நாடு ஆளப்படுவதும் கடாபியின் பச்சை புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் ஆனால் இது நடைமுறைக்கு வந்ததன்

பின்னர்தான் கடாபியின் சுய ரூபம் மக்களுக்கு புலப்பட்டது மத்திய மக்கள் குழுவை மக்கள் காங்கிரசாக சித்தரித்த கடாபி முழு ஆட்சி அதிகாரத்தையும் தனக்கே உரித்தாக்கினார் லிபியாவின் பல்வேறு பட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் கொண்ட தலமைப்பதவிகளுக்கு தமது உறவுகள் பிள்ளைகளை நியமித்தார் லிபிய மக்களிடம் இருந்து கடாபி விலகி செல்ல ஆரம்பித்தது இந்த சமயத்தில் தான் மட்டுமல்லாமல் என்னை வளங்கள் மூலம் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் பில்லியன் கணக்கான சொத்துக்களையும் சேர்க்க ஆரம்பித்தார்

அமெரிக்காவை நேரடியாக பகைத்துக்கொண்ட தலைவர்களில் கடாபிக்கு தனி பங்கு உண்டு எண்பதுகளில் அமெரிக்க ஜனாதிபதிகளுள் ஒருவர் கடாபியை 'மத்தியகிழக்கின் பைத்தியகார நாய்' என்று அநாகரீகமாக திட்டியதிளிருந்தே தெரியும் கடாபி மீது அமரிக்காவின் விரோதம் கடாபியும் அமெரிக்காவுக்கு எதிராக சும்மா இருந்து விடவில்லை எந்த மூலையில் அமெரிக்காவுக்கு எதிராக எந்த குழு போராடினாலும் அங்கெல்லாம் ஓடி ஓடி உதவி செய்தார் அவர் மட்டுமல்லாமல் கடாபியின் ஆதரவு குழுக்களும் அமெரிக்காவுக்கு எதிராக போராடும் குழுக்களுக்கு உதவி செய்தன

கடாபி பொது நலனுக்காக போராடுவது போன்று தம்மை சித்தரித்தாலும் ஆழத்தில் அதில் கடாபியின் சுய நலம் மிகுந்திருக்கிறது ஆப்பிரிக்காவை ஒன்றிணைத்து அதன் மூலம் உலகை வெல்ல அவர் கனவு கண்டார் ஆரம்பத்தில் லிபியாவை மத்திய கிழக்கு நாடாக கூறிக்கொண்டிருந்த கடாபி பின்னாளில் அதை ஆப்பிரிக்க நாடாக கூறிக்கொண்டார் இதன் மூலம் ஐக்கிய ஆபிரிக்க என்ற கோட்பாட்டை உருவாக்கி அதிலும் தலைமையை தமக்கு எதிர்பார்த்திருந்தார் கடாபி


என்னதான் தான் ஒரு போராளியாக மக்களிடம் தம்மை சித்தரிக்க கடாபி முயன்றாலும் அடிப்படையில் அவர் தம் பதவி புகழ் உயிர் பாதுகாப்பில் எப்போதும் கவனமாய் இருந்திருக்கிறார் சதாம் {ஹசைன் பிடிபட்ட பின் தம் மேற்குலக நகர்வுகளில் சில தளர்ச்சியான போக்குகளை காட்ட ஆரம்பித்ததை சொல்லலாம் இது முழுக்க முழுக்க தமது பாதுகாப்புக்காகவே கடாபியினால் மேட்கொள்ளப்பட்டது பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் இவரின் உற்ற நண்பன் ஆனார் அமெரிக்கவுடனும் நல்லிணக்கத்தை பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படுத்திகொண்டார் இவையனைத்தும் தம் உயிர் மற்றும் பதவி மீது அவர் வைத்திருந்த பயத்தினாலேயே மேட்கொள்ளப்பட்டது

சுற்றியிருப்பவர்களின் பார்வை எப்போதும் தம்பக்கமே இருக்க வேண்டும் என்பது காடாபிக்கு அவசியமான ஒன்று இதற்காக தம் சொந்த பிள்ளைகளை கூட புகழின் உச்சிக்கு செல்ல விட மாட்டார் அதே சமயம் தம்மை சுற்றி நம்பிக்கையானவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே கன்னிப்பெண்களை மெய்ப்பாதுகாப்பிட்காய் அமர்த்தியிருந்தார் ( அவர்கள் கடாபியினாலும் அவர் பிள்ளைகளாலும் பாலியல் ரீதியில் பயன் படுத்தப்பட்டார்கள் என்று தற்போது கூறப்படுகிறது ) தன் உடல் சுகாதாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பார் கடாபி இதற்க்கும் உக்ரெயினில் இருந்த பெண் தாதியர்களை கொண்டு வந்து அருகில் வைத்திருந்தார் இவரை சூழ எப்போதும் அழகான பெண்கள் கூட்டம் இருக்கும் அது இவருக்கு ரொம்ப பிடித்த ஒன்று ஆனால் அதை மட்டுமே வைத்துக்கொண்டு கடாபியை சபலபுத்திகாரர் என்று எடை போட முடியாது , பழைய கேசட்டுக்களில் அரேபிய பாடல்களை கேட்பது கடாபிக்கு ரொம்ப பிடிக்கும் தம் மீது நோய்கள் அண்டி விடக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருப்பார் இதற்காக கடாபி அருகில் செல்பவர்கள் கூட பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட்டனர்

அடிப்படயில் பழங்குடி நாடோடி இனத்தவர் என்பதால் தம் அரண்மனைக்கு வெளியே எப்போதும் இவர் தங்குவதற்கான கூடாரம் அமைக்கபட்டிருக்கும் அதிலும் வெளியிடங்களுக்கு சென்றால் கூடாரத்தில் தங்குவதை கட்டாய வழக்காக கொண்டிருந்தார் கடாபி

எல்லா வகையிலும் ராஜ சுகங்களை அனுபவித்த கடாபி தன்னை சுற்றி தன் தேசத்துக்குள் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மட்டும் கடைசி காலத்தில் சரியாக மதிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதுதான் உண்மை நாற்பதாண்டு கால ராஜ வாழ்க்கை என்பதால் தாம் செய்யும் அனைத்திலும் அவர் பூரண நம்பிக்கை கொண்டிருக்க வாய்ப்பிருக்கின்றது தம்மை ஒருபோதும் அழித்து விட முடியாது என்று பலமாக நம்பினார் அவர் அந்த நம்பிக்கையே அவரை ஒரு துர் மரணத்திற்கு சொந்த காரனாக்கியுள்ளது

மேற்;கு உலகத்திற்க்கு கடாபியை வீழ்த்த ஒரு சரியான தருணம் மட்டுமே தேவைப்பட்டது டுனீசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி அலை எகிப்தை தாக்கியது இதை லிபியாவை தாக்க வைத்தது மேற்கின் சூழ்ச்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அந்த புரட்சி அலையின் சத்தம் கேட்க்க ஆரம்பித்த உடனேயே லிபியாவில் தமக்கான செல்வாக்கை பற்றியும் மாறிவந்துள்ள உலக ஒழுங்கியலை பற்றியும் கடாபி மதிப்பீடு செய்திருந்தால் இந்த நிலை இன்று அவருக்கு வந்திருக்காது தன் மீது கொண்ட அதீத நம்பிக்கை அவரை துரத்தி துரத்தி கொலை செய்திருக்கிறது

கடாபியின் வாழ்க்கை நல்லது கெட்டது இரண்டும் கலந்தது என்றாலும் அவர் மரணித்த விதம் மனித நேயத்தை கேவலத்துக்குல்லாகும் விதத்தில் அமைந்திருந்ததை மறுக்க முடியாது அவரை நீதி மன்றத்தின் முன் நிறுத்தி தமக்குரிய செல்வாக்கை உயர்த்திக்கொள்ள புரட்சி படைக்கு கிடைத்த வாய்ப்பை புரட்சிப்படை இழந்து விட்டது மட்டுமல்லாமல் கடாபி இல்லாத லிபியா எப்படி அமையபோகிறது என்ற கேள்வி இங்கு முக்கியம் பல்வேறு இஸ்லாமிய இன குழுமங்களை கொண்ட லிபிய தேசம் அதிகாரத்துக்கான போட்டியில் இப்போது முண்டியடிப்பது தெரிகிறது சில கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் ஆனால் மாறி வரும் உலகியல் ஒழுங்குகளுக்கு தம்மை உட்படுத்தி தளர்த்தி செல்லாத எந்த தனி மனிதனோ அல்லது தலைவனோ கடைசியில் இப்படித்தான் தனிமை படுத்தப்படுவான் என்ற அழுத்தமான செய்தியை கடாபி உலகத்திக்கு சொல்லியிருக்கிறார் இனி பல சந்ததிகளுக்கு கடாபி ஒரு கொடுங்கோலனாக மட்டுமே சித்தரிக்கப்படுவார் என்பது மட்டும் கொஞ்சம் வேதனைதான் காரணம் கடாபி சரித்திரத்தையும் வெற்றியாளர்கள் தான் எழுதப்போகிறார்கள்

Wednesday, October 26, 2011

எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்




அளவா சிரிக்கிற அஞ்சலி.
பட படக்குற அனன்யா.,
எங்க ஊரு பையன் ஜெய்.,
கடைசி நிமிடம் கலங்க வைக்கும் சர்வானந்.,
நெஞ்சை அவ்வப்போது கீரிப்போடும் சத்யாவின் இசை.,
பழனி மலை , விதி ஓட்டிச்செல்லும் பஸ்.,
பஸ்சுடன் பயணிக்கும் இசைஞானி பாடல்.,
காதல் சிட்டுக்கள்.,
தொடங்க முதல் முடியும் காதல்.,
உடைந்த பஸ் இன் வெற்றி கோப்பை.,
கடைசி நிமிட அமைதி மரண படுக்கையில் சொல்லப்படும் காதல்.,
மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்.,
திரும்ப வருமா என ஏங்க வைக்கும் நொடிகள்.,
அறுந்து அறுந்து போகும் உயிர்கள்.,
இப்போதும் காலை கண் விழித்ததும் வெறுமை படுத்தும் அந்த முடிவு.,
டைரக்டர் சரவணன் (இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்).,
Copyright © 2014 நட்சத்திரவீதியில்