Thursday, December 30, 2010

வருடம் சொன்ன செய்தி

இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் 2010 ஆம் வருடத்திற்கு கை அசைக்க தயாராகும் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு இந்த கடந்த வருடம் திருப்பு முனையாக அமைந்தது என்பதை விட சில செய்திகளை எனக்கு மிகத்தெளிவாக சொன்ன ஒரு வருடமாகும் நான் எதிர்பாராத பல ஆச்சர்யங்களை கண்கூடாக கண்டுகொண்ட ஒரு வருடமாகும் ..........

அதிலும் கடைசி மாதம் நான் எதிர்பாராத பல சந்தோசங்களை எனக்கு தந்திருக்கின்றது நான் சார்ந்த சக்தி fm இன் நிகழ்ச்சி மாற்றங்களின் பின்னால் எனக்கும் சில பெறுமதியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன அவற்றில் என் பன்முக திறன்களை நான் என்னால் முடிந்தவரை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன் மறக்க முடியாதது எனக்குள் இருந்த எழுத்து கோர்வையை கவிதைகள் என்ற பெயரில் மூத்தோர்கள் நிறைந்த கவியரங்கத்தில் என்னால் முழங்க முடிந்தது

ஞாயிறு இரவு நடக்கும் கவியரங்கத்திட்காக என் கவிதைகளும் இணைத்துக்கொள்ளப்பட்டு மக்களிடம் இருந்தும் சக நண்பர்களிடம் இருந்தும் மற்றும் கவியரங்க நண்பர்களிடம் இருந்தும் சுமாரான "கவிதை"
என்ற பெயர் கிடைத்தது எனக்கான முதல் அங்கீகாரம் என கருதுகிறேன்

இலங்கையின் எழுத்து துறை முன்னோடி கவிஞர் திரு இரா சடாகோபன் அய்யா அவர்களின் தலைமையில் மேடையேறிய என் கவியரங்க வரிகளை அடுத்த அடுத்த பதிவுகளில் பதிவிடுகிறேன் உங்கள் பின்னூட்டங்களை பதிவிடுங்கள் தயவு செய்து

அதே நேரம் ஊடகத்துறை சார்ந்த மற்றும் தென் இந்திய திரை உலகம் சார்ந்த பலரிடம் நேரடியாக நான் எடுத்த செவ்விகளையும் எழுத்துருவில் பதிவிட தயாராகிறேன்

கடந்து முடிந்த வருடம் எனக்கு சொன்ன செய்தி மட்டும் இப்போதும் என் காதுகளுக்குள் கேட்டுகொண்டே இருக்கிறது அது "கவனம் இந்த வாழ்க்கை அவ்வளவு சாதாரணம் இல்லை "கவனமாய் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் நம்பிக்கைகளுடன் அடுத்த ஆண்டில் நான் மீரா .......

Wednesday, December 29, 2010

இனிய புதுவருடம் இதமாய் இனிவருடும் நண்பர்களே..

புதியதொரு வருடம் சேர்ந்தே ஒரு வயது மூப்பு எனக்கு..22 வயது கடந்துபோனதை நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது "நட்சத்திரவீதியில் " நகர்வலம் சீரானதாக இல்லாவிட்டாலும் எனக்கு ஒரு நல்ல ஆரம்பத்தை பெற்றுத்தந்தது இந்த வலைப்பதிவு என்பதில் சந்தேகம் இல்லை என் கனவுகளின் பாதையில் என் பயணம் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நடைபோடுகிறது என்பதும் என் கற்பனையில் சேர்க்க முடியாத ஆச்சர்யம்

பதிவுலகில் நான் இன்னமும் அடையாலமில்லாமலேயே இருக்கிறேன் உண்மை என்னவென்றால் இந்த பதிவுகள் ஒவ்வொன்றும் பிறர் படிப்பதற்காக அல்ல பிறர் படிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்பதும் எனக்கு தெரியும் இந்த பதிவுகள் அனைத்துமே என் தனிப்பட்ட தாகத்துக்கானதாகவே ஆரம்பித்தேன் இதுவரை என் பதிவுகளை விளம்பரப்படுத்தும் எண்ணம் வராமைக்கு காரணமும் அதுதான்

பள்ளிக்கூட நாட்களில் எழுத்துக்களில் தொலைந்துபோன என் இரவுகளின் கருமையும் ,வானொலிக்கு வந்தபின் அசாத்தியமாய் என்னை தொடரும் தனிமைகளின் வெறுமையும் நாமும் எழுதினால் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்புமே இந்த "நட்சத்திரவீதியில்"

என் மீது அக்கறை உள்ள என் நலன்விரும்பிகளும் ,தமிழ் கடலில் நீந்த தயாராகும் தகுதி எனக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கை இருக்கும் சிலரும் பதிவுலகில் என்னை வழிநடத்துகின்றனர் அவர்களில் ரேடியோ மோகன் எனப்படும் சக்தி வானொலியின் சமகால நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராஜ்மோகன் ,அறிந்தும் அறியாமலும் பதிவுகளுக்கு சொந்தக்காரரும் சக்தி பண்பலையின் உதவி முகாமையாளருமான டயனா ..நண்பன் பாஹத் , மற்றும் சக்தயின் முன்னாள் நிகழ்ச்சி பொறுப்பதிகாரி திரு .மாயா மற்றும் சக்தி பண்பலையின் அறிவிப்பாளினி சஹோதரி ஓஷியாவும் முக்கியமானவர்கள்

இன்னும் தேர்ச்சியடயாத துளிர்விட முனையும் என் எழுத்துக்கள் என்னும் தளிர்களுக்கு உரமிட்டு இன்னும் இன்னும் மாறுபட்ட பதிவுகளை பதிவிட்டு பதிவுலகில் நானும் ஆழமாய் கால்பதிக்க நட்சதிரவீதிக்கு வரும் அனைவரும் உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களை கண்டிப்பாக பதிவிட வேண்டுகின்றான் என் எழுத்துக்குழந்தை .....நன்றிகளுடன் மீ.ரா.
இனிய புதுவருடம் இதமாய் இனிவருடும்
Copyright © 2014 நட்சத்திரவீதியில்