Tuesday, December 18, 2012

"இரவு தேசம் " 1

       நெடுநாள் பழகியது  போன்ற உணர்வை ஏற்படுத்தும் முகங்கள், நன்கு தெரிந்த பழக்கப்பட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் இடங்கள். என பல விடயங்கள் சில நிமிடங்கள்  அல்லது நொடிகளுக்குள் ஏற்படுபவைதான். எப்போதோ எங்கேயோ மனதுக்குள் ஒரு ஓரமாய் ஒழிந்து
 கிடக்கும் அல்லது புதைந்து கிடக்கும் அந்த சமாச்சாரங்களை கிண்டிக்கிளறி எடுக்கும் மேற்படி விடயங்களுக்கு நன்றி சொல்லி மரியாதை செய்வது அதிகம் பொருந்தும். நிதானிக்க நேரமின்றி 
  ஒடுபவார்களுக்கு ஏறி வந்த ஏணியை நினைவுபடுத்தும் வல்லமை உள்ளவை இம்மாதிரியான நினைவுபடுத்தும் விடயங்கள்

நேற்று இரவு நாடு முழுவதும் கன மழை. கொழும்பில அல்லது நகர்ப்புறங்களில் இயற்கை கொடுக்கும் சந்தோசங்களை ஈடுபாட்டுடன் அனுபவிக்க ஒரு மகான் நிலை கண்டிப்பாய் வேண்டும். அவ்வளவு கஷ்டமானது. வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தும்மல் வராமல் போவது போன்ற  அசவ்கரியத்தை கொடுக்கும் சம்பவங்கள் நிறைய நடப்பது இங்குதான் ,  பல பொழுதுகள் கடற்கரை, காற்றையும் அலை சொல்லும் சேதிகளையும் கேட்டு ரசிக்க செல்லும் மன நிலையை  கூட அலை அலையாய் வரும் காதல் ஜோடிகள் மாற்றி விடுகின்றன என்பது  உதாரணம். இது வயது கோளாறு?

இருளை அனுபவிப்பது ஒரு அலாதியான இன்பம். அதிலும் அது செயற்கை தன்மை அல்லாத இருளாக இருப்பது இன்பத்தை கூட்டும், கலப்படம் இல்லாத இருள் என்பது முக்கியம் ,  இங்கும் நகர்புற இருளை குறை சொல்ல வேண்டிவருகின்றது, உண்மை இருள் என்பது எல்லாம் அடங்கிய ஒரு மோன நிலை...  அது கனவில்லாத தெளிந்த உறக்கம் போன்றது , நினைவில்லாத நிம்மதி போன்றது , இயற்கைக்கே உரிய அழகான ஓசைகளை தவிர்த்து அனைத்தும் வாய் மூடி மௌனித்திருக்கும் நிலை, பிறந்து 6 , 7 மாதம் ஆன  குழந்தை  விடிவதற்குள் எழுந்து தனக்குத்தானே சிரித்துக்கொள்லுமே  அப்படியான ஒளியும் இயற்கையின் அழகான சத்தங்களில் ஒன்றுதான்.   அவை ஒன்று கலந்த இருளை அனுபவிப்பதும் அள்ளி அள்ளி பருகுவதும் அளவில்லாத ஆனந்தத்தை தரவல்லது,இப்படியான இருள் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் கிடைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று !...

7 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உங்கள் நிசப்த சிந்தனை அழகு
    இப்படி சில சமயம் நான் எண்ணி இருக்கிறேன்.
    எனக்கு இருள் பிடிக்கும்
    இருள் கறைஇல்லாதது. நிசப்தத்தின் நிழல். கவிதைகளின் தோழன்.

    ReplyDelete
  3. இது அழகான தேசம் :)
    மிகவும் அழகாக எண்ணங்களைச் செதுக்கியிருக்கிறீர்கள்...


    இன்னுமொரு இரவு தேசமும் இருக்கிறது கிராமங்களில் வாலிபர்கள் இரவுகளில் கூட்டமாக இருந்துகொண்டு எந்த சாவுவீடோ அல்லது திருமண வீடோ அங்கேயே தங்கிவிடுவதும் பின்னர் தங்களுக்கு எதிரியாக இருப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று இளநீர்குழைகள் வாழைக்குழைகள் நேர்ச்சகைக்கு விட்ட சேவல் கோழியைத் திருடுதல் போன்ற வீர தீரச் செயல்களைச் செய்வதும் மாட்டிய பின் விழிபிதுங்க ஊர் பெரியார்கள் முன்னிலையில் நிற்பதும் மறக்க முடியாதவைகள்...

    ReplyDelete
  4. தங்களுக்கு எதிரியாக இருப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று இளநீர்குழைகள் வாழைக்குழைகள் நேர்ச்சகைக்கு விட்ட சேவல் கோழியைத் திருடுதல் போன்ற வீர தீரச் செயல்களைச் செய்வதும் மாட்டிய பின் விழிபிதுங்க ஊர் பெரியார்கள் முன்னிலையில் நிற்பதும் மறக்க முடியாதவைகள்...//rasanai //

    ReplyDelete
  5. என் வாழ்க்கைல முதல்...தடவை.... மலை.. மழை... குளிர்... தனிமை.. .இருட்டு... நிசப்தம்.. ஒற்றை மெழுகுதிரி வெளிச்சம்.. மருந்துக்கு..கூட...செயற்கை..இல்லாத...மனுஷங்க.. தொல்லை.. இல்லாத... இந்த... எல்லாத்தையும்... ஒண்ணா.. நேத்து ஒரு 5 மணி நேரம்.. நானும்..அனுப்பவிச்சேன்... அமைஞ்சுது..
    //"எல்லை இல்லாத ஒரு எல்லைக்கு நம்மை அழைத்து செல்லும்"// exactly.. .... நீங்க....சொல்றது... ஆமா...சிலது...அனுபவிச்சாதான்.. புரியும்..இல்ல... அழகான எண்ணங்களுக்கு ..வரி..வடிவம் தந்ததுக்கு...நன்றி..

    ReplyDelete
  6. this site was very interesting, anna. Share more please. I reallllllly enjoyed reading it! :-)

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்