Friday, July 27, 2012

வழக்கு எண் 18/9

படம் வந்து பல காலம் ஆகிய பிறகு அண்மையில்தான் இந்த படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. ஒரு நாள் இந்த படத்தை பற்றி என் நண்பன் ஒருவன் சொன்னான் படத்தை பார்த்த இயக்குனர் பாலுமகேந்த்ரா இந்த படத்தை பார்க்கத்தான் இவ்வளவு நாள் உயிருடன் இருந்தேனா ? என்று ரொம்ப உருகி சொன்னாராம். அவர் கருத்து தப்பே இல்லை அவ்வளவு நேர்த்தியான படம்தான் . பார்க்கும்போதே தெரிகிறது குறுகியகாலத்தில் படமாக்கப்பட்டாலும் நீண்டகால உழைப்பை படத்தின் உருவாக்கத்திற்கு செலவிட்டு நிறைய உழைத்திருக்கிறார் இயக்குனர் காதலில் கிடைத்த நல்ல இயக்குனர் என்ற பெயரை "கல்லூரி படத்திலும் தக்க வைத்தாலும் வர்த்தக ரீதியில் கல்லூரி தோல்விப்படம் அதை இந்த படத்தில் ஈடுகட்டியிருக்கின்றார் பாலாஜி சக்திவேல் ( நல்ல திறமைசாலிகள் இக்காலத்தில் தோற்கக்கூடாது என மனப்பூர்வமாய் விரும்புவதால் அவரின் இந்த பட வெற்றி ஏதோ என் வெற்றி போலவே மனம் சொல்கின்றது ) விளிம்பு நிலை மனிதர்களின் வாழக்கை மாற்றங்களை அனுமானிக்கவே முடியாது "நடைபாதை உறக்கம்" , 'பல நாள் பட்டினி" என அனைத்தையும் அப்படியே சொல்லியிருப்பது அருமை அதை கனா காணும் காலங்கள் புகழ் ஸ்ரீ அப்படியே கொண்டு வந்திருக்கிறார் ( சில நாட்களுக்கு முன் கொழும்புக்கு வெறும் கனவோடு வந்து நான் பார்த்த பல விடயங்கள் ) . அவரின் நண்பனாக வரும் அந்த சின்ன பையன் கதாபாத்திரம் மிக அருமை. இந்த சின்ன வயசில் பையன் அமோகமா நடித்திருக்கிறான். சினிமா கனவை ஸ்ரீ தூண்டிவிட அதனை மறுத்து பேசி தன் கருத்தின் நியாயத்தை சொல்ல பேசும் வசனங்களும் அருமை. படம் முடியும் வரை கூட வரும் கதாபாத்திரம் அவனுடையது. கலக்கமே இல்லாமல் கொஞ்சமும் நடிப்பு பயம் இல்லாமலே அசால்ட்டாக பின்னியிருக்கும் அந்த பையனை உச்சி முகரலாம். கதை ஓட்டத்தில் சில விசயங்களை பாதியிலேயே அனுமானித்துவிட்டேன். முக்கியமாக அப்பாவி ஸ்ரீயை போலீஸ் பிடித்து, திருப்பமாக உண்மை குற்றவாளியும் பிடிபட , பிடிபட்ட குற்றவாளி பெரிய இடம் என்று வரும்போது அடுத்த கட்டம் தெரிந்துவிட்டது. ஆனால் முடிவில்தான் இயக்குனர் தான் யார் என்பதை காட்டியிருக்கின்றார் ..சபாஷ் ....... ஹீரோயின்கள் ரெண்டு பேருமே ரொம்ப அருமை. நீண்ட நாட்களுக்கு பிறகு பெண் கதாபாத்திரங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த தமிழ் படம் இதுதான். ( என் நினைவு சரி என்றால் பருத்தி வீரனுக்கு பிறகு நடிகைகள் நடிச்ச ஒரே படம் இதுதான் ) , பல நல்ல கதைகள் பாத்திரப்படைப்புகளினால் தோல்வி அடைந்திருக்கின்றன, இந்த படம் ஒரு போதும் தோல்வி அடைந்திராமல் இருக்க ஒரு நூல் அளவு தவறு கூட வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குனரும் அவரோடு பணி புரிந்த அணைவருமே கவனமாய் இருந்திருக்கின்றனர் அது நிறைவேறியும் இருக்கின்றது ......

Wednesday, July 25, 2012

சிரட்டை

 எங்க ஊரை சுற்றிலும் பல ஊர்கள் மத்தியில்தான் நாங்கள் அதுவும் ஒரு பள்ளத்தாக்கு , ஒரு நேரம் வந்தால் எல்லா ஊர்கள்லயும் திருவிழா கலைகட்டும் ஒரு ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் என்பதால அநேகமா  பள்ளிக்கூடத்துல அந்த ஊர் பசங்கதான் அதிகமா படிப்பாங்க. திருவிழான்னு வந்துட்டா வெறும் மேசைக்குதான் வாத்தி பாடம் நடத்த வேண்டி வரும். ஊரை சுற்றி நாலு ஊர் என்பதால நாலு ஊர்லயும் திருவிழாவுக்கு குழாய் ( ஸ்பீக்கர் )  கட்டி பாட்ட கத்த விட்டுருவாங்க. நாலு பக்கம் இருந்து பாட்டு வந்து நடுவில இருக்க நமக்கு எல்லாம் கலந்து ஒண்ணுமே புரியாமல் ஒரு சத்தம் மட்டும் விடிய விடிய கேட்கும் ,அநேகமாக அந்த பாட்டுகள விரல் விட்டு எண்ணிடலாம் ( செல்லாத்தா செல்ல மாரியாத்தா , கற்பூர நாயகியே , பாட்டுகள் இல்லாமல் திருவிழாவே கெடயாது )

திருவிழாவில கடைசி நாள் ரதம் வரும். விடிய விடிய ரத பவனி அப்படி பல ஊர்கள கடந்து ரதம் எங்க ஊருக்கு வரும் போது எப்டியும் ராத்திரி பத்து மணி ஆகிடும். ரதத்துக்கு முன்னால பல களியாட்டங்கள், கரகாட்டம்தான் சிறப்பு ...எனக்கு அப்போ ஒரு பன்னிரண்டு வயசு, ராத்திரி  ரதத்தின் பின்னால கொஞ்ச தூரம் போக வீட்டுல அனுமதி வாங்கியாச்சு அடம்புடிச்சுதான். என் வீட்டுல இருந்து கொஞ்ச தூரத்துல ஸ்ரீதர் வீடு ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஒரே பள்ளிக்கூடம் அப்புறம் பெரிய பள்ளிக்கூடம் ஒன்னுக்கு போய்ட்டான்... சரி அவனும் திருவிழாக்கு வந்ததால அவன்கூட நானும் சேர்ந்துட்டு பைக்கட் ஐஸ்க்ரீம் இரண்டு வாங்கி சாப்டுட்டே ரதத்துக்கு பின்னால  போயடிருந்தோம்.

ரதத்துக்கு பின்னால  ஒரே பொண்ணுங்க கூட்டம் எவ்ளவோ தேடி பார்த்துட்டேன் என் ஆள் வரல!.... ரதத்துக்கு முன்னால மேல வாத்தியத்துக்கு முன்னால கரகாட்டம். அங்க ஒரே கூட்டம் விசில் சத்தம் பறக்க ஒரு பொண்ணு சும்மா சுழன்று சுழன்று ஆடுறா .... சுத்திவர ஒரே கூட்டம் ஒவ்வொரு தடவை சுழர்ரபோவும் கூட்டத்துல ஏகப்பட்ட கைதட்டல். நானும் ஸ்ரீதரும் அந்த ஜோதியில கலந்துட்டோம் எல்லார் பார்வையும் அந்த பொண்ணு மேல என்ன ஒரு பதினாறு வயசு இருக்கும். பலபேர் அவ மார்பையே வைத்த கண்ணு  வாங்காம பார்திட்டிருக்காங்க  ஆட்டம் நம்ம சங்கிலி அண்ணனுக்கு புடிச்சு போச்சு (ஆட்டம் புடிச்சத விட அய்ட்டம்தான் ரொம்ப பிடிச்சிருக்கனும் ) பத்து ரூபா நோட்டுக்களால ஒரு மாலைய செஞ்சு தள்ளாடி தள்ளாடி போய்  அந்த பொண்ணு கழுத்துல  போட்டுட்டு கூடவே மார்பையும் உரசிட்டு வந்துட்டார்.  அண்ணன் ஊர்ல பெரிய பணக்காரர் சொந்தமா ஒரு பஸ் வச்சிருக்காரு, கூடவே சின்னதா ஒரு மளிகை கடை மாச வருமானம் பத்தாயிரத்தையும் தாண்டும்னு அப்போ எங்க ஊர்ல ஆச்சர்யமா பேசுவாங்க . என் வயசு பையன் ஒருத்தனும், கரகம் ஆடுற பொண்ணு வயசுல ஒரு பொண்ணும் இருக்காங்க மனுஷன் பலான விசயங்கள்ல செம கில்லாடின்னு கேள்விபட்டிருக்கேன் .நல்ல வாட்ட சாட்டமான தோற்றம்தான் இரண்டு வாரம் சவரம் செய்யாத தாடி அந்த பொண்ணும் இவர் உரசினத ரசிச்சா மாதிரிதான் இருந்துச்சு.

அண்ணன் கண்ணு வச்சுடாண்டா .... ஸ்ரீதர் சொன்னான் சும்மா இருடா கேட்டுறபோவுதுன்னு நான் மழுப்ப..... நேரம் பதினொரு மணி இருக்கும்  நாங்க இரண்டு பேரும் அங்க இருந்து அடுத்த பக்கம் போய் பலூன் வாங்கிட்டு ஓடி பிடிச்சு விளையாடிட்டு வந்துட்டம்.  பௌர்ணமிதானே நல்ல வெளிச்சம் ரதம் அதை சூழ வந்த கூட்டம் எல்லாமே தூரத்துக்கு போற சத்தம் கேட்டுச்சு. நானும் ஸ்ரீதரும் வீட்டுக்கு போற வழில சங்கிலி அண்ணன் வீட்ட தாண்டிதான் போகணும் சரியாய் அவர் வீட்ட தாண்டும் போது உள்ள யாரோ அழுற சத்தம் கூடவே சங்கிலி கதைக்கும் சத்தமும் ....மூக்க முட்ட குடிசிருந்தது பேச முடியாம தள்ளாடுனத பார்க்கவே புரிஞ்சுது. அண்ணன் குழைவது பேசுற தொனியிலேயே கேட்டுச்சு டேய் வாடா பார்க்கலாம்னு கூட சொல்லாம ஸ்ரீதர் அந்த வீட்டு கதவு கிட்ட போய் இருந்த   சந்து வழிய பார்க்க ஆரம்பிச்சான். அப்போதான் தெரிஞ்சது கதவு சரியா பூட்டுப்படல

டேய் என்னடா பண்ற ? வீட்டுக்கு போவனும்டானு சொன்னது அவன் காதுல கேக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு ஆர்வமா உள்ள நடக்குறதுகள பார்த்துட்டு என் பக்கம் திரும்பாமலேயே கையாள என்ன வர சொல்லி சைகை காட்டுறான்.  உள்ள சங்கிலி அண்ணன் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் கரகாட்டம் ஆடின அதே பொண்ணு அழுதுட்டு நிக்குறா. சங்கிலி அண்ணன் ஏதேதோ பேசி தொட முயற்சி பண்ண ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்  அந்த பொண்ணு அழுறதா நிறுத்தவே இல்லை. அண்ணன் தள்ளாடி தள்ளாடி எதையோ பேசுறார் அந்த பொண்ணு மசியிரா மாதிரி தெரியல. எங்களுக்கு பின்னால யாரோ வருவது போல இருந்தது அதை பார்க்க திரும்பி இந்த பக்கம் திறும்புறதுக்குள்ள அண்ணன் அந்த பொண்ண கட்டி பிடிசுட்டாறு அவ அந்த பிடில இருந்து விலக திணறுரா... நான் வாய எப்போ திறந்தேன் தெரியல திறந்த வாய் மூடாமலே இருக்கு. ஸ்ரீதர் சிரிக்குறான் கொஞ்ச நேரத்துல அண்ணன் அந்த பொண்ணோட சேலைய எல்லாம் இழுக்க ஆரம்பிச்சுட்டார் அவ கஷ்டப்பட்டு மார்ப மறச்சுக்க முயற்சி பண்றா அப்போவும் சங்கிலி விடுறா மாதிரி தெரியல ஒரு கட்டத்துல இனி தப்ப முடியாதுன்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கணும் மார்புல இருந்த கைய எடுத்துட்டா அலுகுரதையும் நிறுத்திட்டா திடீர்னு ஒருபக்க   மார்பு கழண்டு கீழ விழுந்துடுசுச்சு ஆஆஆஆ அதெப்புடி அத என்ன ஒட்டியா வச்சுருக்காங்க இந்த பொண்ணுங்க கழண்டு விழுது ???????? நானும் ஸ்ரீதரும் ஒருத்தர ஒருத்தர் கேள்வியோட பார்க்குறம் பின்னால யாரோ வர்றது தெளிவா கேட்டுச்சு நானும் அவனும் வீட்ட தாண்டி இந்த பக்கம் வந்துட்டம் நல்ல வேளை பின்னால வந்தது சங்கிலி அண்ணனோட பொண்டாட்டி ரதத்துக்கு பின்னால போய் இப்போதான் வர்றாங்க

வந்தவங்க அப்டியே வீட்டுக்குள்ள போனத நாங்களும் பார்த்தோம் அவ்வளவுதான் வீட்டுக்குள்ள ஏதேதோ உடையுற சத்தம் எல்லாம் கேக்குது நானும் ஸ்ரீதரும் அந்த வீட்டு ஜன்னல் பக்கமா போயிட்டம் சங்கிலி அண்ணனுக்கு தர்ம அடி .... எனக்கு சிரிப்பு தாங்க முடியல அந்த பொண்ணு ஓட ஆரம்பிக்க சங்கில அண்ணனோட பொண்டாட்டி அவள் தலை முடிய பிடிச்சு இழுக்க அதுவும் கழண்டு அவங்க கையோட வந்துடுச்சு .... மயிர் போனாலும் பரவாயில்ல உயிர் தப்பிச்சத பெருசா எடுத்தது மாதிரி  அந்த பொண்ணு  ச்சே ச்சே பொண்ணு வேஷம் போட்டிருந்த பையன் விட்டான் பாருங்க ஓட்டம் ஓடுறப்போ இன்னுமொரு பக்க மார்பும் கழண்டு விழுந்துடுச்சு நானும் ஸ்ரீதரும் அந்த இடத்துக்கு போய் பார்த்தோம் ""சிரட்டை""
சிரிச்சு சிரிச்சு வீடு வரைக்கும் போனதே தெரியல அப்பாவும் சங்கில் அடி வாங்குற சத்தம் நிக்கவே இல்லை அடப்பாவி மனுஷா இரண்டு  தேங்காய் சிரட்டைக்காகவா இந்த அடி வாங்குற'???????? ஹி ஹெஈ

Monday, July 23, 2012

நட்சத்திர வீதியில் என் மனதின் பிரதிபலிப்புசினிமாவில் நான் அதிக ஆர்வம் கொண்டு பேசுவதாகவும் அதிகம் அதை பற்றி எழுதுவதாகவும் பலர் என்னிடம் குறைபட்டிருக்கின்றார்கள். சில நண்பர்கள் திட்டியும் இருக்கின்றார்கள்.  என்னை பொறுத்த மட்டில் சினிமா என்பது மட்டும்தான் என் பொழுது போக்கு அதை நான் ஆழமாய் நேசிக்கின்றேன், வலுவாய் காதலிக்கிறேன். அஜித் பற்றி நான் அதிகம் அலட்டுவதாகவும் பலர் திடியிருக்கின்றார்கள் அஜித் என்ற மனிதனையும் நடிகனையும் நான் நேசிக்கிறேன் அவரவர் தம்மை வளர்த்துக்கொள்ள முன்னுதாரணமாய் பலரை எடுக்கின்றார்கள், நான் அஜித்தின் உழைப்பை நேசிக்கிறேன், அந்த அடங்காமையை விரும்புகின்றேன். இதில் என்ன தவறு இருக்கின்றது என எனக்கு புரியவில்லை. சாப்பிட கோட காசு இல்லாமல் இருக்க படத்துக்காக பணத்தை செலவழிக்கும் கோமாளி அல்ல நான். என்னை அடுத்த வேலைக்காக தயார்படுத்தும் ஒரு இடமாகவே படங்களை பார்க்கின்றேன் .  "குடித்து கும்மாளம் அடிப்பதும் , நண்பர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை செலவழிப்பதும், குட்டி உஷார் பண்ணி ஊர் சுத்துவதும் தப்பில்லை என்றானபோது" ஒரு நடிகனுக்காக நான் எழுதுவதில் என்ன தவறு இருக்கின்றது? புரியவில்லை , இன்னுமொன்று நான் ஒரு நடிகனுக்காக எப்போதும் பிற நடிகர்களையோ அல்லது மனிதர்களையோ தாழ்த்தியதும் இல்லை, தேவை இல்லாமல் உயர்த்தியதும் இல்லை இந்த வலைப்பூவை நான் என் மன உணர்வை பிரதி பலிக்கும் ஒரு இடமாகவே கருதுகின்றேன். கிட்டத்தட்ட நட்சத்திர வீதியில் என்பது என் நாட் குறிப்பு போன்றதே என்ன ஒன்று அந்த நாட்குறிப்பை பொதுவாக யாரும் படிக்கக்கூடியதாய் வைத்திருக்கின்றேன்  எந்த ஒழிவு மறைவும் இல்லாமல்  அஜித் படத்தை பார்த்து என்னை நான் ஒய்வாக்கிக்கொள்கிறேன். மூன்று மணித்தியாலங்கள் சந்தோசப்படுகின்றேன் இதில் என்ன தவறு இருக்கின்றது ?

Tuesday, July 17, 2012

THE DIRTY PICTURE

சிலுக்கின் பார்வை, கவர்ச்சி, இதழ் அசைவு, என்று எதையுமே வித்யா பாலனால் ஈடுகட்ட முடியவில்லை ஏன் நெருங்கவே முடியவில்லை. ஆனால் நடிப்பில் சில்ல்கை பல மடங்கு தோற்கடித்துவிட்டார். மிரள வைக்கும் உழைப்பு . இந்த படத்தை வித்யாபாலனை தவிர யாராலும் இவ்வளவு நேர்த்தியாக செய்திருக்க முடியாது.

பில்லா 2

.
அஜித் என்ற மனிதன் மீது வைத்திருக்கும் அர்த்தமே தெரியாத ஈர்ப்பினால் பில்லா இரண்டாம் பாகத்துக்காக காத்திருந்து, முதல் நாள் முதல் ஷோவுக்கு கொழும்பு கான்கார்ட் திரையரங்கத்துக்கு சென்று, அடித்து பிடித்து டிக்கட் வாங்கி கூச்சலும் கும்மாளமுமாக படத்தை பார்த்து, விசில் பறக்க ரகளை பண்ணியது எனக்கு புது அனுபவம் . படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் எதோ ஒரு குறை என்று ஒருத்தன் கமன்ட் அடிக்க நல்லா பாரு மச்சான் படத்துல கதைதான் குறை என்று இன்னொருத்தன் சொல்ல தியட்டரில் விசில் மலை.
கதை

அல்பற்சிநோவின் பழைய படத்தின் கதையை பில்லாவின் முதல் கட்ட வாழ்க்கையாக சொல்லியிருக்கின்றார்கள். படம் sarukkiya இடமே கதை தான். ஆரம்பிக்க போகிறது என்று பார்த்தால் படம் முடிகிறது இன்னுமொன்று எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி இருக்கின்றார்கள். அல்லது சென்சாரில் படத்தின் பாதி குதரப்பட்டிருக்கின்றது அப்படி என்றால் சக்ரியை மன்னிக்கலாம்

அஜித் 


முரட்டுத்தனமான உழைப்பு, நேர்த்தியான நடிப்பு ,பார்வையிலேயே பேசுகிறார் அத்திப்படியை தொலைத்து பக்கம் பக்கமாக பேசியதை விட இரண்டே வரிகளில் திருக்குறள் போல பேசி கைதட்டல்களை அள்ளுகிறார். பில்லாவின் இளைய பருவம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதளவு குண்டாக இருப்பது குறை ,ஆனால் அதை மறைக்கும் விதம் சண்டை காட்சிகள் , அனால் காலை தூக்க சிரமப்படுவது தெரிகிறது. தமிழ் சினிமாவின் மிக அழகான நடிகர் ஸ்டைலிஷான நடிகர் என்றால் அது அஜித் தான் மீண்டும் நிரூபித்திருக்கின்றார்.


 விஜய் உச்சத்தில் இருக்கும்போது அவர் செய்த தவறு திருமலையில் கிடைத்த மாஸ் அங்கீகாரத்தை அப்படியே எல்லா படத்திலும் பிரயோகித்தது.
 ( திருமலை திருப்பாச்சி கில்லி சிவகாசி ஆதி வேட்டைக்காரன் ..........) ஆனால் வெற்றிக்குரிய சமன்பாட்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. அதனால் சறுக்கினார் அஜித் பில்லாவில் கிடைத்த ஸ்டைலிஷ் இமேஜ்ஜை தொடர்ந்து பயன்படுத்தினால் அவருக்கும் சறுக்கல் நிச்சையம் அதை மாற்ற முடியாது மக்கள் வித்தியாசத்தை விரும்புவதை   தல புரிஞ்சிக்கணம்  .ஸ்டான்ட் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும் வான் சண்டை என தல நடிப்பில் அடுத்த லெவலுக்கு போய்ட்டாருங்க தல தல தல .

இசை

யுவன் ஷங்கர் ராஜ இசை
என்றதும்  திரையரங்கம் அதிரும் ஆனால் பில்லா ஒன்றில் இருந்த மேஜிக் இங்கு இல்லை மங்காத்தாவில் இருந்த அசத்தல் இங்கு இல்லை ஏமாற்றிட்டார் .

வசனம்


இரா முருகன் தன அடையாளத்தை பதித்து விட்டார் ஒவ்வொரு வசனமும் ரொம்ப கூர்மை
( ஆசை இல்ல அண்ணாச்சி பசி )

கதாநாயகிகள் 


இரண்டு பேராம் பார்வதியை விட ப்ருணா க்கு வாய்ப்பு அதிகம். கலக்கல் அடிக்கடி நீச்சல் உடையில் வந்தாலும் சூடேறினா மாறி தெரியல, பல இடங்களில் முகம் சுளிக்க வைத்ததனால் கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி ஆபாசம் என்ற எல்லைக்குள் போய்ட்டாங்க சோ......... சாட் .

இயக்கம்

சக்ரி மீது ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. ஆனால் அது எல்லாவற்றையும் சரி பாதியாக முறியடித்திருக்கிறார் அவரிடம் நல்ல திறமை இருப்பது தெரிகிறது. படம் ஆங்கில படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கின்றது. அதன் கலர் டோன் உட்பட அத்தனையும் பார்த்து பார்த்து செதுக்கிய சக்ரி திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் மற்றப்படி சக்ரி தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குனர்.


"மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து ஏமாற்றிய படங்கள் வரிசையில் பில்லா இரண்டாம் பாகத்தையும் அடக்க வேண்டி வரும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் நிஜத்தை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும் ?லாஜிக் பார்த்தால் உலகத்தில் சினிமாவை ரசிக்கவே முடியாது படம் என்பது சந்தோஷப்பட பொழுதை போக்க அவ்வளவுதான் என்பவர்களின் வரிசையில் நானும் ஒருவன் என்பதால் பில்லா எனக்கு பிடித்திருக்கிறது. காரணம் அஜித் என்ற நடிகன் மீது அளவுகடந்த பிரியம் எனக்குண்டு அல்லவா அதுவாகவும் இருக்கலாம் . ஆனால் அஜித் தன திரையுலக வாழ்வில் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்து செய்யும் ஒரு தவறை இங்கேயும் செய்துவிட்டார்.
இன்னமும் தொடர்ந்து செய்கிறார்.படத்தின் கதை தேர்வில் அஜித் இன்னமும் பக்குவம் அடைந்ததாக தெரியவில்லை ,இதனால்தான் அவருக்கு கிடைக்கும் பல பெரிய வெற்றிகளை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

பில்லாவில் மறு அவதாரம் எடுத்த அஜித் ஏகன் , அசல் என்று கதை தேர்வில் சொதப்பி தோல்விபெற மங்காத்த அவரை ரஜினிக்கு அடுத்து என்ற இடத்தில் அசால்ட்டாக உட்கார வைத்தது ஆனால் அந்த வெற்றியையும் அவரால் தக்க வைக்க முடியாமல் போகுமோ என்பதுதான் கவலை."


"மொத்தத்தில் பில்லா இருக்கு  கொஞ்சம் நல்லா அனால் நான்கு நாட்களிலேயே தியட்டர்கள் இல்ல புல்லா........"
Copyright © 2014 நட்சத்திரவீதியில்