Tuesday, April 10, 2012

"தமிழ் தொலைகாட்சிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் சிவகார்த்திகேயன் ஒரு புரட்சிகர ஆளுமை "


பொண்ணுங்கள பொருத்தவரைக்கும் டி வீ க்கு முன்னால அழகா இருந்தாலே போதும் மண்டைல எதுமே இல்லாததுகள் கூட சீக்கிரமே மக்கள் ரசிக்குறாங்க ஆனா இந்த பசங்க நிலைமை எப்பவுமே திண்டாட்டம் தான். எதையாவது வித்தியாசமா செய்தே ஆகணும் . நம்ம நாட பொறுத்த வரைக்கும் நல்ல துல்லியமான தமிழுக்கும் , உச்சரிப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் ஆனா இப்போ நம்ம நாட்லயும் இந்திய தொலைக்காட்சி மோகம் வந்ததால அவசர அவசரமா எல்லா டி வீ களும் தங்களையும் தொகுப்பாளர்களையும் மாத்த வேண்டிய நிலைமை அதுலயும் இந்திய நிகழ்ச்சிகளை வச்சு இப்போ எல்லாம் டி வீ நடத்தவே முடியாது ஏன்னா அதுக்கு செய்மதில சன் டி வீ இல்லனா விஜய் டி வீ பார்த்துடலாம் .

இந்த இந்திய தொலைகாட்சிகளின் இலங்கை மீதான ஊடுருவல் பற்றி நிறைய பேர் அக்கறை படுறாங்களே இல்ல. இன்னமும் ழைய பஞ்சாங்கங்கல்லேயே அக்கறையா இருக்காங்க அடையாளம் அடையாளம்னு , அடையாளம் இல்லாம போறாங்க . ஆனா இலங்கை தொலைகாட்சிகள் இப்படியே போனா கண்டிப்பா இலங்கை முழுக்க சன் டி வியும் விஜய் டி வீ யும் கொடி கட்டி பறக்கத்தான் போகுது.இப்போ மேற்படி அறிவிப்பாளர் அல்லது தொகுப்பாளர் மேட்டருக்கு வருவோம் நல்ல தமிழ் பேசணும் துல்லியமா பேசணும் அப்டினா அது இயல்பா வந்தாதான் அழகு. ஆனா பலர் அப்படி ஒரு தமிழை கஷ்டப்படுத்தி வரவச்சு பேசினா எரிச்சல் தான் மிஞ்சும் , இன்னுமொரு பக்கம் இந்திய தமிழ் பேசுகிறோம் அப்டினா அதுவும் இயல்பாவே வரணுமா இல்லையா ? இங்க நம்ம தொலைகாட்சிகள்ள ஏதோ பிறந்து வளர்ந்ததே தமிழ் நாடு அப்டின்ற மாதிரி இந்திய தமிழ் பேச போய் அதுவும் கொச்சைபடுத்தப்பட்டு மறுபடி எரிச்சல். நமக்கு என்ன வருமோ அத செய்தாதான் அழகு மக்களும் ரசிப்பாங்க (எனக்கு பூர்வீகம் தமிழ் நாடு அதால எனக்குள்ள இந்திய தமிழ் வாடை இயல்பாவே ஒட்டியிருக்கு அதுனால நான் தைரியமா அந்த தமிழ் பேசுறேன் )

விஜய் டிவீ அறிமுகப்படுத்திய புரட்சிகர மாற்றங்கள் தொகுப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை எல்லா நிகழ்சிகளிலும் ஒரு பொண்ணு வந்து கையையும் தலையையும் ஆட்டி , அர்த்தமே இல்லாம காரணமே இல்லாமல் சிரித்துகொண்டிருந்த சம நேரத்துல விஜய் டி வீ பல புதுமையான தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது ஆரம்ப காலத்தில் ஜேம்ஸ் வசந்தன் ( தற்போது இசையமைப்பாளர் ) தொகுப்பாளராக புகழ் பெற்றார். தொடர்ந்து அவரை விஜய் டி வீ பயன்படுத்தியது விஜய் என்றாலே ஜேம்ஸ் வசந்தன் தான் என்று அவரை அடையாளப்படுத்தியது அதன் தொடர்ச்சியாக அந்த இடம் வெறுமையாய் இருக்க ந்த இடத்தை நிரப்பினார் டீ டீ எனப்படும் திவ்ய தர்சினி. விஜய் டி வீயை பொருத்தமட்டில் ஒருவரை மிக அழகாக அடையாளப்படுத்தும். அதன் தொடர்ச்சியாக திடீரென தன்னை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த நேயர்களையும் தன் பக்கம் ஈர்த்துகொண்டார் "நீயா நானா கோபிநாத்" மீசை இல்லாமல் இருபத்தைந்து வயதுக்குள் தான் தொகுப்பாளர்கள் என்ற வரை முறையை மாற்றி கோபி அசத்தினார் எல்லா டி வீ களும் கோபி மாதிரி ஆளுமை உள்ள தொகுப்பாளர்களை தேட ஆரம்பித்தது. குறைந்தது அந்த உருவம் உள்ளவர்களையாவது தேடி போட ஆரம்பித்தது . ( இதுல நல்ல உதாரணம் கலைஞர் டிவி யின் சங்கர் ) அப்புறமா விஜய் டி வி யின் வழக்கமான பார்முலாதான் கோபி எல்லா நிகழ்ச்சிகள்ளையும் பயன்படுத்தப்பட்டார் ( இப்பவும் அப்டிதான் )

எல்லாம் தாண்டி விஜய் தொலைகாட்சியின் ஒரு சிரிப்பு நிகழ்ச்சி " கலக்க போவது யாரு " மூலமா ஒரு போட்டியாளரா அறிமுகமான அந்த இளைஞன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பையே மாத்தி போடுவான் என்று அப்போது டி வீ பார்த்த யாருமே நினைக்க வாய்ப்பில்லை . ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் அந்த இளைஞன் அபாரமாய் தன்னை வளர்த்துக்கொண்ட விதம் ஆச்சர்யமாய் இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை , மிமிக்ரிளையும் அண்ணன் வெளுத்து வாங்கவே விஜய் டி வீ யின் தேடலில் அடுத்த வித்தியாசாமான ஆளுமையாய் சிக்கினார் "சிவகார்த்திகேயன் ". மற்றைய எல்லா தொகுப்பாளர்களையும் தன் பக்கம் ஈர்த்த விதம் மிக வித்தியாசம் நாம பார்க்கும் போது எந்த நிமிசமும் நம்ம பார்வைக்குள்லையே நிரம்பும் ஆளுமை சிவகார்த்திகேயனுக்கு உண்டு ,எவ்வளவு பெரிய ஆர்டிஸ்டாக இருந்தாலும் சிவா விடம் அலாதி பிரியம் காட்ட ஆரம்பித்தனர். எல்லோரிடமும் தனித்து தெரிந்தார் சிவா , மீண்டும் விஜய் டி வியின் வழக்கமான பார்முலா இப்போது விஜய் டி வி யின் எல்லா நிகழ்ச்சிகளிளும் சிவகார்த்திகேயனின் முகம்தான் , பார்க்க பக்கத்து வீட்டு பையனின் முகம் செயற்கை இல்லாத தமிழ் எல்லா விஷயத்துலயும் நகைச்சுவையை கொண்டு வந்து சேர்த்தல் , ன்று இந்திய தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் நடையையே மாற்றி போட்ட பெருமை சிவாவுக்கு உண்டு . இப்போது அதன் தொடர்ச்சியாக சினிமாவுலயும் அண்ணன் கலக்க ஆரம்பிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு !


நிற்க சிவகார்த்திகேயனிடம் இருந்து நம்ம கத்துக்க வேண்டிய நிறைய விஷயங்கள் உண்டு அதெல்லாம் சொல்ல போனால் எழுத போனா நான் ஏதோ சொல்லகூடாத எதையோ சொன்ன மாதிரி தூற்றப்படுவேன். ஆனால் எனக்கு தெரிய இலங்கை தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தமக்கு இயல்பாக வருவதை செய்ய வேண்டும் ( இது எனக்கும் சேர்த்துதான் ) . அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு இடமளிக்க வேண்டும் இல்லையெனில் மாறும் ரசனையில் இந்திய டி வீ விகளின் அபார வளர்ச்சியில் நம்ம ரசிகர்கள் ஊரிப்போவதை தடுக்க முடியாது ( இப்பவே இலங்கை நாளேடுகள்ள நேத்ரா டி வி , சக்தி டிவி , வசந்தம் டி வி களின் நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போய் ஜெயா டிவி, சண் டிவியில் என்ன நிகழச்சிகள் என்று நிரல் போட ஆரம்பிச்சுடாங்க ).

6 comments :

 1. அண்மையில் ஒளிபரப்பாகிய ஒரு வார்த்தை ஒரு கோடியில் சிவா தான் வளர்ந்து வந்த பின்னணி பற்றி நெகிழ்வடன் சொல்கிறார். வறுமைக்குள் இருந்து வெளிச்சம் உருவாக்கிறய வைரமாக அவர் தெரிகிறார். vijai tv இன் வெற்றி இயல்பாய் இருத்தல் என்ற இரகசியமே.

  ReplyDelete
 2. enna kodumai krish unga lolu thaankamudiya

  ReplyDelete
 3. ithula enna lollu irukkuthu mathan ??????????

  ReplyDelete
 4. நம்ம கத்துக்க வேண்டிய நிறைய விஷயங்கள் உண்டு... intha vasanathuku munnadi ellaridamum irunthunu podanum... karanam nam katralin thedal verengo illai naal thorum nam santhikkum nabargalidam irunthu than unnathu... arumayana pathivu... nandri :)

  ReplyDelete
 5. இளைய தலைமுறைக்கு ஒரு சூப்பர் ஹரோ சிவா

  ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்