Thursday, December 30, 2010

வருடம் சொன்ன செய்தி

இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் 2010 ஆம் வருடத்திற்கு கை அசைக்க தயாராகும் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு இந்த கடந்த வருடம் திருப்பு முனையாக அமைந்தது என்பதை விட சில செய்திகளை எனக்கு மிகத்தெளிவாக சொன்ன ஒரு வருடமாகும் நான் எதிர்பாராத பல ஆச்சர்யங்களை கண்கூடாக கண்டுகொண்ட ஒரு வருடமாகும் ..........

அதிலும் கடைசி மாதம் நான் எதிர்பாராத பல சந்தோசங்களை எனக்கு தந்திருக்கின்றது நான் சார்ந்த சக்தி fm இன் நிகழ்ச்சி மாற்றங்களின் பின்னால் எனக்கும் சில பெறுமதியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன அவற்றில் என் பன்முக திறன்களை நான் என்னால் முடிந்தவரை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன் மறக்க முடியாதது எனக்குள் இருந்த எழுத்து கோர்வையை கவிதைகள் என்ற பெயரில் மூத்தோர்கள் நிறைந்த கவியரங்கத்தில் என்னால் முழங்க முடிந்தது

ஞாயிறு இரவு நடக்கும் கவியரங்கத்திட்காக என் கவிதைகளும் இணைத்துக்கொள்ளப்பட்டு மக்களிடம் இருந்தும் சக நண்பர்களிடம் இருந்தும் மற்றும் கவியரங்க நண்பர்களிடம் இருந்தும் சுமாரான "கவிதை"
என்ற பெயர் கிடைத்தது எனக்கான முதல் அங்கீகாரம் என கருதுகிறேன்

இலங்கையின் எழுத்து துறை முன்னோடி கவிஞர் திரு இரா சடாகோபன் அய்யா அவர்களின் தலைமையில் மேடையேறிய என் கவியரங்க வரிகளை அடுத்த அடுத்த பதிவுகளில் பதிவிடுகிறேன் உங்கள் பின்னூட்டங்களை பதிவிடுங்கள் தயவு செய்து

அதே நேரம் ஊடகத்துறை சார்ந்த மற்றும் தென் இந்திய திரை உலகம் சார்ந்த பலரிடம் நேரடியாக நான் எடுத்த செவ்விகளையும் எழுத்துருவில் பதிவிட தயாராகிறேன்

கடந்து முடிந்த வருடம் எனக்கு சொன்ன செய்தி மட்டும் இப்போதும் என் காதுகளுக்குள் கேட்டுகொண்டே இருக்கிறது அது "கவனம் இந்த வாழ்க்கை அவ்வளவு சாதாரணம் இல்லை "கவனமாய் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் நம்பிக்கைகளுடன் அடுத்த ஆண்டில் நான் மீரா .......

Wednesday, December 29, 2010

இனிய புதுவருடம் இதமாய் இனிவருடும் நண்பர்களே..

புதியதொரு வருடம் சேர்ந்தே ஒரு வயது மூப்பு எனக்கு..22 வயது கடந்துபோனதை நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது "நட்சத்திரவீதியில் " நகர்வலம் சீரானதாக இல்லாவிட்டாலும் எனக்கு ஒரு நல்ல ஆரம்பத்தை பெற்றுத்தந்தது இந்த வலைப்பதிவு என்பதில் சந்தேகம் இல்லை என் கனவுகளின் பாதையில் என் பயணம் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நடைபோடுகிறது என்பதும் என் கற்பனையில் சேர்க்க முடியாத ஆச்சர்யம்

பதிவுலகில் நான் இன்னமும் அடையாலமில்லாமலேயே இருக்கிறேன் உண்மை என்னவென்றால் இந்த பதிவுகள் ஒவ்வொன்றும் பிறர் படிப்பதற்காக அல்ல பிறர் படிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்பதும் எனக்கு தெரியும் இந்த பதிவுகள் அனைத்துமே என் தனிப்பட்ட தாகத்துக்கானதாகவே ஆரம்பித்தேன் இதுவரை என் பதிவுகளை விளம்பரப்படுத்தும் எண்ணம் வராமைக்கு காரணமும் அதுதான்

பள்ளிக்கூட நாட்களில் எழுத்துக்களில் தொலைந்துபோன என் இரவுகளின் கருமையும் ,வானொலிக்கு வந்தபின் அசாத்தியமாய் என்னை தொடரும் தனிமைகளின் வெறுமையும் நாமும் எழுதினால் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்புமே இந்த "நட்சத்திரவீதியில்"

என் மீது அக்கறை உள்ள என் நலன்விரும்பிகளும் ,தமிழ் கடலில் நீந்த தயாராகும் தகுதி எனக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கை இருக்கும் சிலரும் பதிவுலகில் என்னை வழிநடத்துகின்றனர் அவர்களில் ரேடியோ மோகன் எனப்படும் சக்தி வானொலியின் சமகால நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராஜ்மோகன் ,அறிந்தும் அறியாமலும் பதிவுகளுக்கு சொந்தக்காரரும் சக்தி பண்பலையின் உதவி முகாமையாளருமான டயனா ..நண்பன் பாஹத் , மற்றும் சக்தயின் முன்னாள் நிகழ்ச்சி பொறுப்பதிகாரி திரு .மாயா மற்றும் சக்தி பண்பலையின் அறிவிப்பாளினி சஹோதரி ஓஷியாவும் முக்கியமானவர்கள்

இன்னும் தேர்ச்சியடயாத துளிர்விட முனையும் என் எழுத்துக்கள் என்னும் தளிர்களுக்கு உரமிட்டு இன்னும் இன்னும் மாறுபட்ட பதிவுகளை பதிவிட்டு பதிவுலகில் நானும் ஆழமாய் கால்பதிக்க நட்சதிரவீதிக்கு வரும் அனைவரும் உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களை கண்டிப்பாக பதிவிட வேண்டுகின்றான் என் எழுத்துக்குழந்தை .....நன்றிகளுடன் மீ.ரா.
இனிய புதுவருடம் இதமாய் இனிவருடும்

Sunday, October 3, 2010

இவன் மனதில் இன்று ....

கனவுகளை நான் தொலைத்ததும் இல்லை இதுவரை என் கனவுகளுக்கு முகவரியும் சரியாக புரியவில்லை ..காலம் கற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்த்து ஓரமாய் இருக்கும் பக்குவத்தை உடலோடு ஒட்டவிடாமல் தடுக்கும் என் வயதுக்கு அறிவு சொல்லும் அறிவுரைகளுக்கு மதிப்பும் இல்லை ...

என்ன செய்ய ? விடை காணமுடியாத என் வினாக்களுக்கு விடைகளை காலம் கற்றுகொடுக்கும் போது ,இலவச இணைப்பாக தந்துவிட்டுபோகும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் ,மருந்தை நீயே தேடிக்கொள் என்று சொல்வது காலத்துக்கே மனிதாபிமானம் மறந்துவிட்டதை வேடிக்கைபார்க்க சொல்கிறது உலகத்துக்கு ....... (இன்று அக்டோபர் 3 ஆம் திகதி நீண்ட இடைவேளைக்கு பிறகு விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன் இரவு 11 மணிக்கு என் மனதில் தோன்றிய உணர்வுகள் )

Sunday, September 12, 2010

உறையவைத்து உருகவைத்தவை



இன்னமும் மனம் எனக்கு ஆறவில்லை என் வயதுக்கும் என் ரசனைக்கும் சம்பந்தமே இல்லை என்று என் நண்பர்கள் கேலி செய்வார்கள் பழைய பாடல்கள் மீது எனக்கு இருந்த ஆர்வம்தான் எனக்கு சக்தி fm இல் அந்த நாள் ஞ்சாபகம் நிகழ்ச்சியை பழுதுபடாமல் சில நாட்கள் நடத்த உதவியது , வெளிச்சம் fm இன் மிகப்பிரபலமான பாலும் பழமும் நிகழ்ச்சியும் அப்படியே
இசை என்பது எனக்கு இன்று சில இரவுகளில் நான் மறக்கும் உறக்கத்துக்கும் மாற்றீடு , பல நேரங்களில் பசி என கத்திய என் வயிறுக்கு அமுதசுரபியாக இசை மட்டும்தான்

இதுவரை ஏன் இப்பொழுது எனக்கு தொழிலே அதுதான் ,இந்த பதிவு ஒரு இரங்கல் பதிவு அல்ல ஆனால் மனம் படும் வேதனைகளுக்கு கொஞ்சமும் அளவு கிடையாது , இப்பவும் நிமிடத்துக்கு நிமிடம் தோன்றுவது அந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்பதுதான் வாய்ப்பில்லை என்று தெரிந்தும் இந்த குழந்தை மனம் அந்த இழப்பை தாங்குவதாக இல்லை

ஸ்வர்ணலதா என்ற குயிலின் குரல் எனக்கு நன்கு அறிமுகமாகி என் உறக்கத்தை பறித்தது இன்று நேற்று அல்ல அரை காற்சட்டைக்கு மேல் சட்டை போட்டு வழியும் மூக்கை கரங்களால் துடைத்த அந்த நேரங்களிலேயே என் வை முணுமுணுத்தது அந்த முக்காலா பாடல்தான் ( அவருக்கு உதாரணம் காட்ட இந்த பாடல் பொருத்தம் இல்லை என்றாலும் உண்மை அது தான் ) ஒரு கட்டத்தில் பாடல்கள்தான் எல்லாமே என்று ஆனபோது ஸ்வர்ணலதா அம்மாவை மறந்த இசை இல்லை என்றளவுக்கு நான் அவரின் குரலுக்கு அடிமையாகினேன்

"மாலையில் யாரோ மனதோடு பேச" ,குயில் பாட்டு வந்ததென்ன ,என்னுள்ளே என்னுள்ளே ,என்னை தொட்டு அள்ளிகொண்ட ,போவோமா ஊர்கோலம் என்று , ராஜா தந்த கற்பனைக்கு எட்டாத ஸ்வரங்களின் கோர்வைக்கு இந்த குயிலை தவிர வேறு எந்த குரலை பொருத்தினாலும் எதோ ஒன்று குறையும்

ரஹ்மானின் வருகைக்கு பிறகு அதிகரித்த பாடகர்களின் எண்ணிக்கையில் ,இவர் அடித்து செல்லாமல் நிலைத்து நின்றமைக்கான சான்றுகள் ,எவனோ ஒருவன் ,போறாளே பொன்னுத்தாயி ,காதலெனும் தேர்வெழுதி , என்று நீண்டு செல்லும் , ஹேரிஸ் ஜெயராஜின் இசையில் வந்த ஆரிய உதடுகள் இவரின் உதடுகள் தந்த என்றும் இனியவை

பார்வைக்கு எப்போதுமே எளிமையாக , தான் பெற்ற பெயரை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளாத பெருமை இவருக்கு நான் ஊடகத்துறைக்கு வர முன்னர் கண்ட கனவுகளில் , செவ்வி காண முடியாவிட்டாலும் ஒருமுறை நேரில் பார்த்தாகவேண்டும் என்று ஆசைப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்த குயில் இனி காற்றலையில் குரலாக மட்டுமே இருக்கபோகிறது

இந்த குயிலின் இடத்தை நிரப்ப இனி எந்த குயில் பிறக்குமோ ?

உறையவைத்து உருகவைத்தவை

அடங்கியது குயில் .... "குரல் அல்ல" , போவோமா ஊர்கோலம் பாடிய பொன்னுத்தாய் காலத்தோடு இன்று கரைந்தால் காற்றாக இன்று நான் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சியில் என் உற்சாகத்தை பறித்த அந்த செய்தி பொய்யாக வேண்டும் என்று மனம் பல நொடிகள் ஸ்தம்பித்தது 23 வருடம் திரையிசையில் சகாப்தம் படைத்த ஸ்வர்ணலதா அவர்கள் அகால மரணம் அடைந்தது இசைபித்தன் என்ற வகையில் இன்று என்னை முழுமையாக கலங்க வைத்தது இந்த நாளை வெறுக்கிறேன் என் பார்வையில் என் செவியில் இன்றும் என் பல இரவுகளுக்கு இவர் வள்ளி படத்தில் பாடிய என்னுள்ளே என்னுள்ளே பாடல்தான் துணை

Friday, September 3, 2010

உறையவைத்து உருகவைத்தவை

அண்மையில் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த செய்திகளில் இரண்டு சம்பவங்களின் பால் நான் அதிகமாக ஈர்க்கப்பட்டேன் உண்மையில் இறுதி யுத்தத்தின் பொது செய்திகள் எப்படி என்னிடம் இருந்து என் உறக்கத்தை பரித்துகொண்டதோ , அதே போன்றதொரு உணர்வை இந்த செய்திகள் இரண்டும் ஏற்படுத்தியது

வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்று அந்த சகோதர மொழி பேசும் சகோதரிக்கு நேர்ந்த கொடுமைகள் என் மனதில் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியிருந்தன மத்தியகிழக்கு தேசத்துக்கு வேலை தேடி செல்பவர்கள் இப்படியான கொடுமைகளுக்கு ஆளாவதுபற்றி நாம் கேள்விபட்டது இது முதல் தடவை அல்ல என்றாலும் இது ஒரு புதரகம் ... கேட்கும் போதே மனதுக்கு தோன்றும் வேதனைகள் காட்சிகளைபார்க்கும் போது பீரிட்டு வந்துவிடுகிறது


நம் நாட்டிலிருந்து மத்தியகிழக்கு செல்லும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த நிலைமையா? என்று தேடி பார்த்ததில் உதட்டை மட்டுமே பிதுக்க முடிந்தது ... இன்னும் கொஞ்சம் ஆழமாகப்போனால் பிற நாட்டு பெண்களுக்குத்தான் இந்த நிலைமையா என்றால் அதுவும் இல்லை சில நாட்களுக்கு முன் ஆனந்தவிகடன் சஞ்சிகையின் ஒரு பக்கம் என் இரவை ஆக்கிரமித்திருந்தது ...

ஆப்கானிஸ்தான் தேசத்தில் ஒரு பெண் 12 வது வயதில் பருவம் எய்தும் அவளுக்கு பெயர் ஆயிஷா
14 வது வயதில் ஒருவனுக்கு மனம் முடித்து கொடுக்கபடுகிறாள் ,இலவச இணைப்பாக மாப்பிள்ளைக்கு அவள் உடன் பிறந்த சோதரியும் ... அவன் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவன் ... பாதிநாள் அவனுக்கு காடுகளுக்குல்தான் சரணாகதி .. கணவனை எப்போதாவது பார்க்கும் ஆயிஷாவுக்கு மத்த நாட்கள் அனைத்தும் மாமனார் மாமியாரின் கொடுமைகள் ஏராளமாக , தாங்க முடியாமல் வீட்டிலிருந்து ஓடும் அவளை கந்தகார் பெண்கள் சிறையில் அடைக்கிறது அந்த நாட்டின் சட்டம் ஒருவாறு அங்கிருந்து அவளை அவள் தந்தை மீட்க சில நாட்கள் நிம்மதி , காடுகளுக்குள் கரந்தடி வாழ்க்கை வாழும் அவள் கணவன் வீட்டுக்கு வந்து மனைவியை மிஸ் பண்ண ... வெறி தலைக்கேரியவனாக ஆயிஷாவை தேடி மாமனார் வீட்டுக்கு போக ... தடுக்க முடியாமல் அவள் தந்தை அவனுக்கு வழிவிடும் நொடிகளில் வெறி பிடித்துவரும் அவனிடம் இருந்து தப்பிக்க ஒழிந்து கொள்ளும் அவளை பிடித்து இழுக்கும் அவன் உலகம் வெட்கி தலைகுனியும் அந்த கொடூரத்த்தை நடத்துகிறான் அவள் கதற கதற அவள் மூக்கை துண்டாக அறுத்து எறிகிறான் வலி தாங்க முடியாத அந்த 18 வயது குழந்தை மரண ஓலமிட காதுகள் இரண்டையும் ஓட்ட அறுத்து வெறியை தீர்த்துகொல்கிறான் அவன் "
வாசிக்க எதோ படத்தின் கதை போலதான் எனக்கும் இருந்தது ஆனால் உண்மை அதுவல்ல என்று தெரிந்ததும் , கவலை மறந்து போனது பதிலுக்கு கோபம் மட்டுமே தலைக்கேறியது , தலிபான்களின் சட்டம் எவளவு இறுக்கமானது என்பதும் அது பெண்கள் மீது எப்படி பாய்கிறது என்பது குறித்தும் நான் எழுதித்தான் தெரியவேண்டும் என்று இல்லை ... ஒருபக்கம் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து தலீபான்கள் எப்போதோ வேரருக்கபட்டுவிட்டனர் என்று அமெரிக்க கொக்கரித்தாலும் இன்னமும் அவர்கள் வசம் சில கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன அங்கு அவர்கள் வைப்பதுதான் சட்டம் ...


இதெல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மாகன் முன்னாள் நடக்க அதற்கு ஆறடி பின்னால் பெண் நடக்க வேண்டும் சில வாரங்களுக்கு முன் அங்கு சென்ற செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் ஒருவர் பார்வைக்கு இது மாறி தெரிகின்றது ஒரு இடத்தில் பெண் முன்னாள் நடக்க அதற்கு சில அடிகள் பின்னால் அவள் தடத்தில் ஆண் ஒருவன் அதாவது அவள் கணவன் தொடர்கிறான் .... காட்சியை கண்ட அந்த பெண் சிலிர்த்து போய் அவள் கணவனிடம் கேட்க்க அவன் சொல்கிறான் ஏற்கனவே இங்கு கண்ணிவெடிகள் முழுதாக அகற்றப்படவில்லை அதான் அவளை முன்னே விட்டு ஊர்ஜிதபடுத்திகொண்டு தான் பின்னே செல்கிறேன் என்கிறான் எப்புடி பய புள்ள


இனி ஆயிஷாபற்றி மறுபடி பார்க்கலாம் சில நலன் விரும்பிகள் மூலம் அவள் இப்பொழுது முக மாற்று அருவைசிகிச்சைகாக அமெரிக்கா போய்விட்டால் இனியாவது அவள் வாழ்க்கை நிம்மதியடயட்டும் ஆனால் அவள் கவலைபடுவதேல்லாம் அவள் தங்கை இன்னமும் அந்த கொடூரர்களின் பிடியில் .......



மனிதாபிமானம் இல்லாத இடங்களில் மதங்களுக்கு பிரயோஜனம் கிடையாது ( ஆயிஷா ) இப்படி சொந்த மண்ணிலேயே அதுவும் சொந்த இனத்து பெண்களுக்கே விமோசனம் இல்லாத நாடுகளை நோக்கி நம் ஏழை நாட்டு பெண்கள் படையெடுப்பது வறுமைக்காக மட்டுமே உள்நாட்டில் அவர்களுக்கான சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வக்கில்லாமல் ஒரு கூட்டம் மத்தியகிழக்கு சட்டத்தை சாடிக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறது

மூக்கோடு சேர்ந்து பெண் சுதந்திரம் அறுபட்ட நிலையில் இன்னமும் ஆயிரம் ஆயிஷாக்கள் மத்தியகிழக்கில்

Thursday, September 2, 2010

உறையவைத்து உருகவைத்தவை


இடைவெளிகள் தான் நெருக்கத்தை தீர்மானிக்கின்றன
ஆனால் நெருக்கமற்ற இடைவெளிகள் பிரயோசனமற்றவை

உறையவைத்து உருகவைத்தவை


தவறுதலாய் சோற்றில் ஒரு முடிகிடைந்தமைக்காக
தகப்பன் பிசாசு தருவிக்கும் வசைகளில்
கொச்சை படுத்தப்படும் அம்மாவின் பெண்ணுறவு முழுசாய்

கருவப்புதருக்குள் எச்சில் குவளையில் சாராயத்தை
மல்லாத்தும் போதும்
நோய் கொண்ட வைப்பாட்டியை நெருங்கும்போதும் அப்பன்மார்களுக்கு அவசியப்படுவதில்லை சுத்தம்

Saturday, April 17, 2010

ஊருக்கு போயிருந்தேன் ..........


அப்பா எத்தனை மாதகால ஏக்கம் "பிரசவத்தின் பாதிநாள் அல்லவா? ஆறு மாத கால தவம் "...."முதலிரவுக்கு நாள் தள்ளிப்போகும் புதுமணத்தம்பதிகள் எப்போ? "என்று கேட்கும் வேகத்துடன் காத்திருந்தேன் இந்த இரண்டு நாட்களுக்காக( ஹீ ஹீ...)

ஆறுமாதங்களின் பின் உண்மையான காற்றை சுவாசித்த ஆனந்தம் ,முதல்மார்க் வாங்கிய முன்பல்லிமானவனின் பேரின்பம் பிறந்தமண்ணை இவ்வளவுகாலம் பிரிந்திருந்தது இதுதான் முதல்தடவை ,தலைநகரில் நான் என் பெற்றோரைவிட அதிகமாக இழந்ததாக உணர்ந்தது இந்த மன்னய்த்தான் இருக்காத பின்னே? "இந்த மண்ணுக்குத்தான் என் உயிர் துடிக்கும் ஓசை தெரியும் ,என் கண்ணீரின் உப்பு தெரியும் ,யாவற்றுக்குமேல் என் உண்மைகளும் உண்மையான என்னையும் புரியும் ......"
நுழைவாயிலில் உரசிய மெல்லிய ஜிலு ஜிலு காற்றிலே ..இருபதுவருடகால சரித்திரமும் மணிரத்னம் படத்தொகுப்பு போல மனசில்

எங்கள் ஊருக்கு செல்வதும் அரைகுறையாய் படித்த ஒருவன் வேலைதேடுவதும் ஒன்றுதான் என்னவொன்று அங்கே கால்பிடிப்பது இங்கே பஸ் பிடிப்பது இரண்டுநாள் விடுமுறையில் அரைநாள் பஸ் பிரயாணம் இதில் கடைசி பஸ் யும் விட்டால் இரவுமுழுவதும் பிச்சய்க்காரர்களின் வாழ்கை வரலாற்றை உணரவேண்டியதுதான்

நடுத்தர குடும்பப்பெண் ஒருத்தி அழுவழகத்தில் இருந்து கடைசி பஸ் பிடிப்பதற்கான வேகத்துடனும் பரபரப்புடனும் ஓடிக்கொண்டிருந்தேன் .....மகாராசன் பஸ் வண்டி 15 நிமிடம் தாமதம் ..எனக்கு எப்போதும் பிடித்த கடைசி இருக்கையின் கடைசி இருக்கையில் உலகத்தை வென்ற மகிழ்ச்சியுடன் அமர்ந்தேன் எதேச்சையாக யன்னல் நீராவியில் பெயர் எழுதிப்பார்க்கும் வழக்கமான என் குரங்குதனத்தில் திரும்பிய ஒருநிமிடத்தில் அந்த சம்பவம் நடந்து முடிந்தது

என்ன ஒரு அழகு ...ச்சே chance எ இல்ல இலவம்பஞ்சு என்றால் இதுதானோ? அந்த தோள்கள் ,காஷ்மீர் குளிருக்கு நாம் போடும் கம்பளிகூட இவ்வளவு பரிசுத்தமாக இருக்காது ...........அந்த கண்கள் அந்த கண்கள் அதேதான் ஆஹா யோகநிலையில் இப்படித்தான் பணிந்திருக்குமோ? அந்த அழகில் நான் உறைந்தே போய்விட்டேன்,அந்த கண்களின் அமைதியை கண்டு என்னையே மறந்துவிட்டேன் ....

என்னவொரு தைரியம் ...இந்த இரைச்சல்களை கொஞ்சமும் காதில் வாங்காமல் ,இந்த தெருவோர அங்காடிவிட்பனை பலகையிலா உறங்குவது ,இந்த கொள்ளை அழகுடன் ,பாதுகாப்பைபற்றிய துளி கவலையும் இன்றி இந்த வயதில் வயதுக்கு மீறிய துணிச்சல்தான் ....
பார்வையை திருப்பமுடியாமல் கஷ்டப்பட்டு பஸ் இல் இருந்த மற்றவர்களையும் பார்த்தேன் நான் நினைத்தது சரி என்னைமட்டுமல்ல அங்கிருந்த அத்தனைபெரினுடைய பார்வையையும் வசீகரித்திருந்தது அந்த "நாய்க்குட்டி"

"தன்னை மறந்த முழுமை உறக்கம் அது .......தொப்பி களவு போவது தெரியாத வியாபாரியின் உறக்கம் அது ..........நான் உட்பட எம்மில் பலரும் ஆறுவயதிலேயே தொலைத்துவிட்ட நிஜ உறக்கம் அது ......""ஒரு குழந்தையை கொஞ்ச ஆசைப்படும் தகப்பன் இடத்தில் நின்று அந்த நாய்க்குட்டியை ரசித்துக்கொண்டிருந்த "என் கண்ணுக்கும் அந்த குட்டிக்கும் இடையிலான கோட்டுக்குள் நுழைந்தது ஒரு தாடிக்கார தடிமாடு (மனுஷேதாங்க )
ஒரு அறுபது வயதிருக்கும் ,நல்ல திடகாத்திரமான வயோதிப வாலிபன் ஒருவன்(ர்ர்ர்) அந்த ஐந்தறிவு மழலையை தூக்கி முன்னும் பின்னுமாக திருப்பி எதோ ஆராய முற்பட எங்கிருந்தோ வந்த அதன் தாய் அவன் மீது பாய தடம் தெரியாமல் ஓடிய அவனை கண்டு அந்த பேருந்தே சிரித்தது
"ஆணாதிக்கமும் ,ஆணுக்கே முதலிடம் கொடுக்கும் கேவலங்களும் உங்க ஆறறிவுக்குள்ள இருக்கட்டும் எங்களுக்குள்ளும் அந்த கேவலங்களை புகுத்தினால் இப்படித்தான் நடக்கும் என்பதுபோல் "
விடாமல் குரைத்துக்கொண்டிருந்த அந்த நாயை பார்த்து சின்ன புன்னகையோடு இருந்த என்னோடு பேருந்து ஊர் பாதையில் நகர்ந்தது "ச்சே சூப்பர் குட்டிடா ஆண்குட்டி யா இருந்தா இப்பவே கொண்டு போய்டுவேன்" என்ற என் முன்னிருக்கைகாரனுக்கு ஆறறிவாம்?
Copyright © 2014 நட்சத்திரவீதியில்