Saturday, April 30, 2011

அம்மி மித்தித்து !

உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க ... வேல்சின் இளவரசர் திருமணம் நடந்து முடிந்தது ... இந்த வேல்சின் பட்டத்திற்குரிய இளவரசர் ... மன்னர் ... மகாராணி இதெல்லாம் ரொம்ப பழைய விஷயம் ... ஆனால் ஒரு சின்னமாக இன்னமும் இந்த பதவிகளை வைத்திருக்கும் பிரித்தானியன் பிரித்தாநியன்தான் ....
இந்த மேற்கத்திய சமாச்சாரங்களில் எனக்கு எப்போதும் துழியளவும் இஷ்டம் கிடையாது ஆனால் யதார்த்தவாதி வெகுசன விரோதி என்பதுபோல என் நிலைமையும் ஆகிவிடும் என்று பயந்து ஊரோடு ஓடுகிறேன் .... அனால் பழமை போற்றுவதில் எப்போது பிரித்தானியர்கள் முதலிடம்தான் ... ஒட்டு மொத்த பிரித்தானியாவிலும் அன்றைய தினம் விடுமுறை ... அத்தனை மக்கள் சேவைகளும் இலவசமாக ... இப்படி ஒட்டு மொத்த பிரித்தானியாவின் ஆசிகளுடன் இந்த திருமணம் நடந்தது இத்தனைக்கும் இந்த வேல்ஸ் அரச வம்சத்திற்கு அங்கு எந்த அதிகாரமும் ஆட்சியில் கிடையாது !



கல்யாண வீட்டுக்கு போய் இருக்கீங்களா ? போய் எத்தனை நாள் இருந்து இருக்கீங்க? ... நான் பிறப்பிலேயே சுத்த கிராமத்தான் என்பதால் உண்மை திருமண வைபவம் என்பது என் கண்களுக்குள் எப்போதும் நிழலாடும் ... பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து ... அழைப்பிதல் அடித்து ...ஒரு சொந்தம் விடாமல் ஒரு நண்பன் விடாமல் ,,, பார்த்து பார்த்து அத்தனை பேருக்கும் கையிலேயே கொண்டுபோய் வைத்து "ஒரு வாரம் முன்னாடியே வந்துடுங்கப்பா " என்று அன்பாக கட்டளை இட்டு விட்டு ... மீண்டும்

வந்து திருமணத்துக்கு தேவையான அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு வந்து நிற்பவர்களையும் குறைவின்றி கவனித்துக்கொண்டு திருமண நாள் நெருங்கும் சந்தோசமான நேரத்தில் ஒரு பிரச்சினை வரும் " தாய் மாமன் நான் நான்... உயிரோட இருக்கேன் எவண்டி உன் கழுத்துல தாலி கட்டுவான் நானும் பார்துடுறேன் ...சுத்தி தேடி பார்த்தா குரல் கொடுத்தவர் சொந்தத்தின் சொந்தத்துக்கு தெரிந்த வகையில் தெரிந்த சொந்தமாக இருக்கும் அவனையும் சமாதானப்படுத்தி சிரிக்க வைத்து முறைத்தால் அவனுக்கும் பயந்து ....

முன்கூட்டியே ஒரு வாரம் முன்னாள் அத்தனை நெருங்கிய சொந்தங்களும் பந்தங்களும் ஒரே இடத்தில் கூடி செம ரகளையா இருக்கும் எப்போதாவது ஒரு தடவை இந்த மாதிரி விசேசங்களில் மட்டுமே காணக்கூடிய உறவுகள் தங்கள் பழைய நினைவுகளை மீட்டுப்பார்ப்பதும் கூடவே புதிதாய் அறிமுகமாகும் சின்ன குழந்தைகளின் ஆட்டம் பாட்டம் வீட்டையே அதிர வைக்க உறக்கம் வந்தால் தானே தூக்கம் திருமண நாளுக்கு முன்னாடியே மண்டபத்தை அலங்காரம் செய்து விட்டு .. இரவிரவாக வேலை செய்து .... ( முன்னாடியே ஒரு வாரம் தூக்கம் இருக்காது ......)



மணவறையில் உட்காரவைக்க மணமகளை தயார் படுத்த ஒரு தோழிமார் கூட்டம் .... மாப்பிள்ளையை தயார் படுத்த ஒரு நண்பர் கூட்டம் கூட்டம் ...( சில நேரங்களில் இந்த இரு தரப்பிலும் யாருக்காவது காதல் பத்திக்கொண்டு அது அடுத்த திருமணமாகவும் அமையும் அது வேறு கதை ) அத்தனை சடங்குகளும் முடியும் மட்டும் பொறுமையாக இருந்து ... அத்தனை உறவுகள் கண்பார்க்க தன் வாழ்க்கைத்துணையை பரஸ்பரம் கைபிடிப்பர்

இது எல்லாவற்றுக்கும் மேல் திருமண மண்டபத்திற்கு வரும் உறவுகள் அத்தனை போரையும் சரி விகிதத்தில் கவனிக்க வேண்டும் யாரையாவது கொஞ்சம் முறைத்தாலும் போதும் ..( டேய் என்ன எவேண்டா மதிக்கிறீங்க ? ... டேய் வாடி இனி ஒரு நிமிசமும் இங்க இருக்க வேணாம் என்று ஒரு பட்டாலத்தியே கூட்டிக்கொண்டு கிளப்பிடுவாங்க ... அட நான் சொல்லறத கேளுங்க மச்சான் இங்க வாங்க என்று அவனை சமாதானப்படுத்த முன் போதும் போதும் என்றாகிடும் ...

சாப்பிடும் போது வருமே அதுதான் உச்சகட்டம் சமைத்த சாம்பாரை கூட சரி அளவில் போடணும் இல்லனா "டேய் எனக்கு அதிகமா சாம்பார் போடலடா டேய் எனக்கு இங்க மரியாத இல்லடா என்று அங்கும் ஒரு பிரச்சினை" ..... சாந்தி முகூர்த்தத்துக்கு அன்றே நாள் சிறந்தது என்றால் பரவாயில்லை கொஞ்சம் தள்ளிப்போனாலும் நாள் குறிக்கும் வரை புது ஜோடி படும் பாடு இருக்குமே ஹையோ ......


இப்படி பல இன்பமான தொல்லைகளுடன் ஒரு திருமண வைபவம் முடிய ஒரு மாதம் ஆகிவிடும் .....இப்போ அப்டி எல்லாம் இருக்கா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை கல்யாணத்துக்கே பொண்ணு மாப்ள அரை நாள் லீவு போட்டுட்டுதான் வர்றாங்க...... உண்மையில் இப்படி நாள் போக போக கட்டிக்காக்க வேண்டிய பழமையோடு மனிதத்துக்கு தேவையான மனித நெருக்கங்களும் கரைவதில் எனக்கு உடன்பாடு இல்லை .... காரணமாக உலகத்தின் வேகம் சொல்லப்படுகிறது பொருளாதாரம் சொல்லப்படுகிறது ..நாகரிகமும் சொல்லப்படுகிறது .. இவை அனைத்துமே சப்பைக்கட்டுத்தான் திருமண வைபவம் என்பது ஒரு சமூகத்தின் அடயாளம் .... அடயாளத்தை தொலைத்து விட்டு ஒரு சமூகம் இருந்தென்ன இல்லாமல் என்ன? ராயல் திருமணத்தை உலகம் முழுதும் ரசித்ததே ஒழிய அந்த வைபவத்தில் அச்சு அசலாக பேணப்பட்ட பழமையை மட்டும் கவனித்ததாக தெரியவில்லை

எங்கள் மத்தியில் மேற்கத்திய கலாச்சாரமும் நா நுனியில் ஆங்கிலமும் இருக்கின்றதே ஒழிய மேலைதேசத்தவர்கள் இப்போதும் அவர்களாகவே இருக்கிறார்கள் சிந்திக்க வேண்டும் ( இப்படி ஒரு திருமணம்தான் எனக்கும் தேவை ... நடந்தால் நான் அதிஷ்டசாலி )

Monday, April 18, 2011

எனக்கு ஏன் அஜித் (தல ) பிடிக்கும் ?

எனக்கு எப்போதும் அஜித்குமாரை ரொம்ப பிடிக்கும்  மிக இயல்பான இவரின் நடவடிக்கைகள் வெளியுலகிற்கு இவர் தோன்றும் விதம் போராடும் குணம் , வெளிப்படையான பேச்சு ... எல்லாவற்றையும் தாண்டி தனித்துவமான இவர் நடிப்பு எல்லாவற்றையும் ரொம்ப ரசிப்பேன்



இப்படியெல்லாம் நான் ரசிக்கும் நம்ம தல கடைசியாக நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில் நடந்துகொண்ட விதம் உண்மையிலேயே ஆச்சர்யத்தை தருகிறது ... பல திரை நட்சத்திரங்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேட்ற வந்த இடத்தில் நடந்துகொண்ட விதம் பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகிய நிலையில் அனைவரின் பார்வையும் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டார் நம்ம தல வாக்களிக்க வந்த இடத்தில் எந்த சலனமும் அவசரமும் இல்லாமல் சிரித்த முகத்துடன் மக்களோடு மக்களாக வரிசையில் நின்றிருந்து எல்லோரையும் ஆச்சர்யப்படவைத்து விட்டார்



மேக்கப் இல்லாமல் கழிவறைக்கு கூட போக அடம்பிடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் அஜித் அஜித்தான்



என்னதான் இருந்தாலும் இந்த வேகாத வெயிலில எப்டிதான் இந்த கோர்ட் போடுறாரோ



கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரம் மக்களோடு மக்களாக !





இப்படிப்பட்ட ஒரு இயல்பான மனிதனை ரசிப்பதில் என்ன தவறு இருக்கிறது?
(படங்கள்- நன்றி indiaglitzz )

Saturday, April 16, 2011

நடு நிசி நாய்கள் (மனிதர்களுக்கு அல்ல)



அழுக்கில் கிடக்கும் நெல்மணியை பொருக்கி திண்ண முடியுமா?

தின்னச்சொல்கிறார் நம்ம கெளதம் மேனன் ... ஒன்னும் இல்ல நடு நிசிநாய்கள் படம் பார்த்தேன் ( தவறிகூட பார்திடாதிங்கப்பா ) ஒட்டுமொத்த வக்குரத்தையும் ஒன்னா சேர்த்து நல்லதா எடுத்துகோங்கனு சொல்லியிருக்கார் ... ( எப்டிங்க முடியும் ) இந்த படத்தை கவர்ச்சியானது , மோசமானது , குழந்தைகளுக்கு ஒவ்வாது , அட மோசமானது ஆபாசமானது என்றுகூட அடக்கிவிடமுடியாது ... இது ஒரு முழுநீள வக்கிரம் கொடூரம் .....

அப்பாவால் பாலியல் ரீதியில் சீரழிக்கப்படும் மகன் , மகனால் சீரழிக்கப்படும் வளர்ப்புத்தாய் , மன நிலை பாதிக்கப்படும் ஒருவனால் கிராமமாக சீரழிக்கப்படும் பெண்கள் ...இப்படி ஒரு கதையில் நல்லதை எப்படி பொருக்கி கொள்வது ( இப்படியானா சமூக சீர்கேடுகள் நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை ஆனால் நம் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு இதை கண்டிப்பாக காட்டவேண்டிய தேவை இல்லை ).சினிமா என்பது பொழுதுபோக்குக்கானது எல்லாவற்றையும் மறந்து ஒரு 3 மணித்தியாலம் ரசிக்கிறோம் அதிலிருந்து நல்லது கிடைக்கிறதோ இல்லையோ கெட்டது கிடைத்துவிடக்கூடாது



காட்சிக்கு காட்சி குமட்டல் வருகிறது .. வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் சைக்கோ கொலைகாரர்கள் கதை இருக்கிறதே அந்த கதையை கமல் பார்வையில் இல்லாமல் , கொலைகாரர்களின் பார்வையில் யோசித்து இருக்கிறார் கெளதம் .... என்னதான் கதையை குறை கூறினாலும் இசையால் சொல்லவேண்டிய காட்சிகளை கூட கமராவால் கொண்டுவந்து அசத்தியிருக்கிறார் ... இசையே இல்லாமல் வெறும் கமரா சூப்பர் ...அதிலும் புதுமுகம் வீரா நடிப்பிலும் பாஸ் ... ( மச்சக்கார நடிகர் ! )



கடைசியில் படத்தில் ஒரு message ... மன நோயாளிகளை ஒதுக்கிவிடக்கூடாது ( ஏம்ப்பா இத சொல்ல வந்துதான் அவ்ளோ குப்பய காட்டிநீங்கலாக்கும் ) என் தயவான கருத்து தயவு செய்து இந்த படத்தை பார்துவிடவேண்டாம் மீறி பார்த்தால் பத்தே நிமிடத்தில் குமட்டும் நான் உத்தரவாதம் .....

Thursday, April 14, 2011

பயணம் (break down)



ராதா மோகன்
என்ற இயக்குனர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு ... அழகிய தீயே ..மொழி.. அபியும் நானும் என்று அவர் படங்கள் நானும் அப்பாவும் விரும்பி பார்ப்போம்( அப்பா மகன் சேர்ந்து பார்க்குற படம் ரொம்ப குறைவு இல்ல அதனால சொன்னேன் ) ... அந்த வரிசையில் பயணத்தை ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன் ... எதிர்பார்த்தது போலவே நல்ல படம்தான் ஆனால் அபாரமான படைப்பு கிடையாது ... மொழி , அழகியதீயே , அபியும் நானும் .. வரிசையில் இந்த படம் நான்காவது இடம்தான்

தெரிந்தெடுத்த களம் சிறப்பு ஹாலிவுட் தரத்தை தொட்டிருக்கிறது .. ஆனால் நம் இயக்குனர்கள் (ஷங்கர் உட்பட ) வழி வழியாக விடும் பெரிய தவறை இந்த படத்திலும் காணலாம் ( தயவுடன் அதிக பிர்சங்கிதனாமாக எடுக்க வேண்டாம் ) களத்தை ஹாலிவுட் தரத்துக்கு தெரிவு செய்துவிட்டு நம் ஊர் கார சார மசாலாக்களை கலந்தால் எப்படி? .. கிழவிக்கு குமரி உடை அணிவித்தது போலாகிவிடாதா ?

ராதாமோகனும் அதைத்தான் முயற்சி செய்திருக்கிறார் கதை பக்கா திரில்லர் ...ஓட்டம் விறுவிறுப்பானது என்பதெல்லாம் உண்மையே .. ஆனால் விமானத்துக்குள் நடக்கும் சில கூத்துகள் படத்துடன் ஒட்டவில்லை என்பதே வருத்தம் தருகிறது , மொழி மாதிரியான அற்புத சினிமாவை தந்த ராதாமோகன் , பிரகாஷராஜ் ஜோடிக்கு இந்த படத்தின் ஓட்டைகளை அடைக்க தெரியாமல் போனது புதினம்



5 தீவிரவாதிகளால் கடத்தப்படும் விமானத்தையும் , கடத்தலையும் , மீட்க போராடும் படலமுமே கதை ..... சில இடங்கள் பெரிய விறுவிறுப்பு , நகம் கடிக்கும் அளவிற்கு போகிறது ... அதே சில காட்சிகள் படு மொக்கை .. குறிப்பாக கடத்தப்பட்ட விமானத்துக்குள் இருக்கும் பாத்திரங்களை நகர்த்தியதில் சாமர்த்தியம் இல்லை கடத்தப்பட்ட விமானத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு சில பாத்திரப்படைப்புகளில் இல்லவே இல்லை படத்திற்கு பிரவீன் மணி இசையாம் சொன்னால்தான் தெரிகிறது சிறப்பு என்று இசையில் எதுவுமே இல்லை


த்ரில்லர் கதையில் நகைச்சுவையை சேர்த்துவிட்டிருப்பது புதுமை குறிப்பாக ... இரும்பு கோட்டை முரட்டுசிங்கத்தில் வருவாரே பாலாஜி அவர் ... ப்ருதுவிராஜ்ஜுடன் செய்யும் ரகளைகளை ... என்னை மறந்து ரசித்தேன் ..... அதே படத்தின் உச்சகட்ட விறுவிறுப்பு இருக்கும் காட்சியில் விமானத்துக்குள் ஒருவர் மிமிக்ரி செய்து சிரிக்க வைப்பது உச்சகட்ட மொக்கை



படங்களில் நடிகர்கள் செய்வது போன்று நிஜ வாழ்க்கையில் இல்லை என்ற தெரிந்த அதே தத்துவத்தை பிருதிவிராஜ் போன்ற நல்ல நடிகரை வைத்து மீண்டும் காட்டியிருப்பதில் புதுமை இல்லை ... மெலிதான புன்னகை மட்டுமே வருகிறது ... எம் எஸ் பாஸ்கர் பாதிரியாராக வருகிறார் சரியான தேர்வுதான் ஆனால் அதிலும் அநியாய சென்டிமன்ட் ,... ஜோசியராக வரும் மனோபாலாவும் .. அவரருகில் இருப்பவரும் ( பேர் தெரியலைங்க )அடுத்த சென்டிமன்ட் ..

ஹோலிவூட் கதைகளை யதார்த்தம் மீரமால் எடுக்கும் ஆற்றல் தமிழில் சிலருக்குதான் உண்டு அதில் மிஷ்கின் முதன்மையானவர் ... நந்தலாலா ஒரு ஜப்பானிய திரைப்படமாக இருந்தாலும் அழகாக எடுத்திருப்பார் .. ராதாமோகனுக்கு அது கொஞ்சம் வரவில்லை ஆனால் ராதாமோகன் வழக்கம் போல தன் அடையாளத்தை விட்டுக்கொடுக்கவில்லை டப்பாங் குத்து , ஐட்டம் டான்சு , ஆபாச வார்த்தைகள் ... படுக்கையறை ஆபாசம் ,, கவர்ச்சி பெயரில் காட்டப்படும் ஆபாசம் ... எதிலுமே மனுஷன் இன்னமும் சிக்காமல் இருப்பது புதுமை ... அவரிடம் இருந்து ஆரோக்யமான தமிழ் சினிமா இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது ,, அந்த எதிர்பார்ப்பை அவரால் கண்டிப்பாக நிறைவேற்ற முடியும் என்பதற்கு இந்த கதை களம் நல்ல உதாரணம் ,

ஆனால் ராதாமோகனால் இந்த கதையை இன்னும் நன்றாக சொல்லியிருக்க முடியும்

Tuesday, April 12, 2011

படிச்சு பாருங்க என் மொழிகள் -பகுதி 1

பழமொழிகள் , முது மொழிகள் , புதுமொழிகள் என்று நிறைய இவை என் மொழிகள் முழுக்க முழுக்க என்னால் உருவாக்கப்பட்டவை




ஓடும் நதிக்கு தேக்கம் கிடையாது ஊக்கம்தான் உண்டு

வெற்றி என்பது இமயத்தில் அல்ல உன் இமைப்புள்ளியில் இருக்கிறது வெற்றி

வேகம் எடுப்பது உடலுக்கு நல்லது
விவேகம் எடுப்பது உள்ளத்துக்கு நல்லது

எல்லா கலைகளும் பயிற்ச்சியினால் வரும்
வெற்றிக்கலை மட்டும் முயற்சியினால் வரும்..


ஏட்டுக்கல்வி உயரத்தை தரும்
அனுபவக்கல்வி உரத்தை தரும்

Monday, April 11, 2011

குமார் சங்ககாரவுடன் சில நிமிடங்கள்

உலகக்கிண்ணம் ஆரம்பிக்க ஒரு வாரத்திற்கு முன்னாள் நடந்தது அந்த சந்திப்பு பார்த்த உடனேயே மனிதர் அடையாளம் கண்டு கொண்டுவிட்டார் அட பரவாயில்லையே இவருக்கு என்னையம் தெரிந்திருக்கின்றதே எண்டு பெருமைபொங்க hello sir என்றேன் பதிலுக்கு அவரோ ஹல்லோ mr. கிருஷ்ணா how r u என்றார் ..... அட பேர் கூட தெரிந்திருக்கிறதே இவருக்கு என்று மனதுக்குள்ளேயே பெருமைபட்டுக்கொண்டு ... தொடர்ந்து பேசினேன் .. ( சிங்களத்தில்..) அப்புறம் சொல்லுங்க சார் வீட்ல எல்லாரும் சௌக்கியமா ?

ம்ம்ம் எல்லாரும் நலம் அவங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ..உங்க தில்லு முள்ளு விடாம கேப்பாங்க சார் ஒவ்வொரு நாளும் பகல் 3pm ஆகிட்ட தொல்ல தாங்க முடியாது... சொன்னா நம்ப மாட்டிங்க கிரீஸ் ..தில்லு முள்ளு கேட்ட பிறகுதான் வீட்ல சாப்பாடே போடுறாங்க என்று செல்லமாக கோபித்துகொண்டார் சங்கா ஆ அ அது என்ன நிகழ்ச்சி ஹா இதயம் என்ன சார் உங்க vice la அப்டி ஒரு லவ் chaance ஏ இல்ல ...என் phone ring tone ஏ உங்க இதயம் நிகழ்ச்சிதான் சார் என்று வேற சொல்லிட்டார் ...எனக்கு உற்சாகம் தாழ முடியவில்லை ...அவரோ விட மாட்டேன் என்கிறார் எனக்கு நிகழ்ச்சிக்கு தாமதம் ஆகிறது என்றேன் அவர் ..விடுவதாக இல்லை ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் mr. கிருஷ்ணா ... என்றார் சரி சரி உலகமே போற்றும் ஒரு கிரிக்கட் தலைவர் கேட்கிறாரே என்பதட்காக தலையை மட்டும் ஆட்டினேன் ... அப்படி எடுத்த படம் தான் இது........




ஹயி ஜாலி ... ரொம்ப நாளுக்கு பிறகு மொக்கை போட்டுட்டேன்...

இப்போ உண்மைக்கு வருவோம் ... எங்கள் கலையகத்துக்கு வந்திருந்தார் சங்கா பார்த்த கணத்தில் நான் என்னையே மறந்துவிட்டேன் என் கண்ணை என்னாலே நம்பமுடியவில்லை gentleman இன்றுதான் நேரில் பார்க்கிறேன்.. உடனே hello sir என்றேன் ..அவரும் பதிலுக்கு ஹலோ என்றார் ..இப்போ நினைத்தாலும் பூரிக்கிறது உடலெங்கும் சிலிர்க்கிறது ... ஒரு நிமிடம் என் ஆச்சர்யத்தை அவர் புரிந்துகொண்டார் போலும் cool man ......என்று என் தோலில் தட்டிவிட்டு கிளம்பிவிட்டார் போகும்போது சொன்னேன்.. world cup ekka apitama genna .... என்று ( உலகக்கிண்ணத்தை எங்களுக்கே கொண்டுவாங்க சார் என்று சிங்களத்தில் ) sure ... endru simple ஆக சொல்லி விட்டு போய்விட்டார் ...அப்புறம் இந்த படத்திற்காக அரை மணித்தியாலம் காத்திருந்ததெல்லாம் பெரிய கதை ஆனால் அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் பரவசம் உலகம் வியக்கும் ஒரு உச்ச கிரிக்கட் நட்சத்திரம் என் அருகில் ... நின்ற கணங்கள் அல்லவா அவை ... தவிர நான் சங்காவின் பெரிய ரசிகன் ...

உலகக்கிண்ணம் 2011



மூச்சுவிட முடியாத பரபரப்போடு முடிந்தது 2011 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் இந்த உலகக்கிண்ண இறுதி போட்டியில் பலரின் கனவுகளில் ஓட்டை விழுந்திருக்கலாம் ஆனால் எனக்கு பதவி உயர்வு கிடைத்தது போன்று பெரிய வெற்றி.. காரணம் சக்தி வானொலியில் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் சிறப்பு ஒலிபரப்பின் முழுப்பொறுப்பும் என்னிடமே வழங்கப்பட்டிருந்தது நினைக்க நினைக்க .... நெஞ்சுக்குள் தேன் ஊறுகிறது ...இருக்காதா எத்தனை வருடகால கனவு நேரத்திற்கு மயூரன் அண்ணாவின் மட்டக்களப்பு பயணத்திற்கும் நன்றிகள்...ஹீ ஹீ .......


இனி விடயத்திற்கு வருவோம் ...என் இந்த வயது வரை ...கிட்டத்தட்ட 5 உலகக்கிண்ண இறுதி போட்டிகளை பார்த்துவிட்டேன் ...1996 உலகக்கிண இறுதிப்போட்டியில் , அதே சமயம் கடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் கூட இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு இந்தமுறை எகிறியது என்றே சொல்லலாம் ... கொழும்பின் சகல வீடுகளிலும் தொலைக்காட்சிகள் வேலை செய்து கொண்டிருந்தது ... மிக சிறிய அளவிலான மைதானங்களில் கூட பெரிய திரைகளில் போட்டியை பார்க்க மக்கள் முன்டியடித்துகொண்டிருந்தனர் .... சில வீடுகளில் பொது நலம் கருதி வீட்டுக்கு வெளியே தொலைக்காட்சி பாதையில் செல்பவர்களுக்காக ஒளிஎற்றப்பட்டிருந்தது.... ஒரு veel park குக்கு ஒரு தொலைகாட்சி ... குளிர்பானம் ...அன்னதானம் என்று கொழும்பு நகரமே அமர்க்களப்பட்டிருந்தது .... மட்டக்களப்பில் நான் சார்ந்த சக்தி fm வானொலி நடத்திய உலகக்கிண்ண சிறப்பு நிகழ்ச்சியின் ஒளிபரப்பை காண கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை வந்திருந்தனர் .... இப்படி உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் ...அத்தனையும் ஒரே எதிர்பார்புக்காக ..ஒரே இலட்சியத்திற்காக ...அது சங்கா கையில் உலகக்கிண்ணத்தை சுமக்கவேண்டும் என்பதற்காக



அத்தனையும் தகர்ந்து போனதை இப்போ வரைக்கும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை .... என்ன நடந்தது இலங்கை அணிக்கு ..( இந்த வினா உலகக்கிண்ணத்தை இலங்கை தவறவிட்ட நேரத்தை விட அதன் பிறகு நடந்த சம்பவங்களின்போதுதான் அதிகம் எதிரொலித்தது அது பற்றி பிறகு பாப்போம் ) ...இறுதியாட்டத்தில் இலங்கை அணியின் போராட்டகுணம் எங்கு போனது என்று கொஞ்சமும் புரியவில்லை மிக முக்கியமாக களத்தடுப்பில் விட்ட தவறுகள் நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது பலரின் பார்வைக்கு இலங்கை உலகக்கிண்ணத்தை திறமையின்மை அல்லது இந்திய அணியை விட திறமை குறைவினால் தவறவிட்டது என்று சிந்திக்க சொல்லவில்லை அவர்களில் நானும் ஒருவன் அதற்கு சில காரணங்களை சொல்லலாம்

உண்மையில் போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை அணியின் வேகம் எப்போதும் போல வெறித்தனமாகத்தான் இருந்தது ஆரம்ப விக்கட்டுகள் இழக்கப்பட்டாலும் இணைப்பாட்டங்கள் சராசரியாக நன்றாகத்தான் இருந்தது .....மகேலவின் அதிரடி சதத்துடன் நுவான் குலசேகர , திசர பெரேராவின் தேவயரிந்த வேகமான துடுப்பெடுத்தாடளினால் இலங்கை அணி அடைந்த 270 என்ற ஓட்டப்பெருமானம் மும்பை வேங்கட மைதானத்தில் இரவில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு அவ்வளவு இலகுவான பெறுமானம் அல்ல ... இருந்தும் இலங்கை அணியினால் போதிய அழுத்தம் கொடுக்கமுடியாமல் போனது உண்மையில் ஆச்சர்யம்தான் .... போட்டியை கூர்ந்து கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் போட்டி நிறைவடைய 8 or 9 ஓவர்கள் இருக்கும் போதே சங்ககார போட்டியை கைவிட்டுவிட்டார் .... இப்படி சொல்ல சில காரணிகளை நான் முன்வைக்கிறேன் மலிங்க வழமையாக இரண்டு sesion கள் பந்து வீச அழைக்கப்படுவார் ...ஆனால் இறுதி போட்டியின் பொது மலிங்கவை சங்ககாரா உடைத்து உடைத்தே பயன்படுத்தினார் ( இறுதிப்போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மலிங்கவை சிறப்பாக கையாண்டனர் என்பதும் உண்மை ....) இணைப்பாட்டத்தை முறியடிக்க இருக்கலாம் என்று கருதுவதில் எந்த உண்மையும் இல்லை .... சங்கா போன்ற மிக சிறந்த தலைவருக்கு அது நன்கு தெரியும் ...அதே சமயம் .. திசர பெரேராவை முழுமையாக பயன்படுத்தவேண்டிய எந்த தேவையும் இருந்ததாக தெரியவில்லை அடி விழுகிறது என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவரே அழைக்கப்பட்டார் ஏன்? டில்சானுக்கு 5 overs மீதம் இருந்தது ... முரளிக்கு 3 overs மீதம் இருந்தது பயன்படுத்தியிருக்கலாமே ?...



இப்படி நிறைய காரணிகளை அடுக்கலாம் .... போட்டி இருகும் சூழ்நிலையில் இலங்கை அணி மூர்க்கமாக போராடும் ஆனால் அந்த குணத்தை அன்று காணவில்லை .....இப்போ இந்த பதிவை இடும் நேரத்தில் இலங்கை கிரிக்கட்டில் பல்வேறுபட்ட மாற்றங்களை காண முடிகிறது ( எதுவும் ஆரோக்கியமாக இல்லை )... சங்கா உலக கிரிக்கட் பதினொருவர் அணிக்கு தலைமையேற்றவர் ... அவரின் ராஜினாமாவை ஏற்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ....



இது இவ்வாறிருக்க தனது இருபத்தெட்டு வருடகால ஏக்கத்தை தீர்த்து வைத்த டோனி தலைமையிலான இந்திய அணியை இந்திய ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது இவர்களா இந்திய அணி தோல்வியடையும் போது கல்லடிக்கிரார்கள் என்ற கேள்வியை நானே கேட்டுக்கொள்ளவேண்டியுள்ளது ( வெளிய சொன்னா கல் எனக்கு வந்துடும் இல்ல) ... இனி இலங்கை அணிக்கு இப்படியான ஒரு வாய்ப்பு எப்போ அமயும் என்பது கேள்வியே .....விடு மச்சி cup 32 km மட்டும்தான் அந்தபக்கம் என்று சொன்ன என் நண்பனை நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்


தோனி கடைசியாக வெற்றிக்காக அடித்த அந்த சிக்ஸர் இப்போதும் மனதில் நிழலாடுகிறது

உடைந்துபோன கனவுகளில் உயிர்க்கவேண்டிய எதிகாலம்

வலைப்பதிவிடலின் சீரான வேகத்தை கொஞ்சமாக தடுத்து நிறுத்தவேண்டிய நிலைமைக்கும் காரணமாய் அமைந்தது என் தந்தையின் எதிர்பாராத இழப்புதான் ....கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கிட்டத்தட்ட வாழ்வதற்கான முழு பிடிப்பையும் இயற்கை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டுவிட்டது என்றே உணர்ந்தேன் (வாழ்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு முறையாவது இந்த உணர்வு வருமாம் ) இன்றுவரை உடைந்துபோன என் கனவுகளும் ஆசைகளும் புத்துயிர்பெராமலேயே இருக்கிறது....விடியும் ஒவ்வொரு பொழுதுக்கும் அர்த்தம் இல்லாத வெறுமை மனதை மோசமாக தாக்குகிறது .....அவரிடம் இருந்த அந்த அன்பு ..கண்டிப்பு ... என் மீது அவருக்கிருந்த பாசம் என்று அணு அணுவாக நினைவுகள் பின்னோக்கிசெல்லும்போது வரும் அழுகையை தாண்டிய விரக்தி ...சொல்லில் அடக்கும் அளவுக்கு திறமை என்னிடம் இல்லை

என்னால் அவருக்கு கடைசிவரை ஒரு முத்தம் கூட கொடுக்கமுடியாமல் செய்த இந்த காலத்தை வெறுக்கும் நான் .... ஊடகத்துறையில் நான் பெற்ற அற்ப சொற்ப வளர்ச்சியை கூட ...இமாலய வளர்ச்சியாக அவருக்கு காட்டியதற்காக ... நேசிக்கிறேன் ( காலத்தை )

நிற்க

என் அப்பாவின் இருதிக்கிரியைகளிலும் ..... என் குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்த அத்தனை பேருக்கும் என் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் .... மிக முக்கியமாக ...திரு.பாலேந்துரன் காண்டீபன் ( சக்தி வானொலியின் சமகால பணிப்பாளர் )...தலைமையிலான் ராஜ் மோகன் அண்ணா உள்ளிட்ட ஒட்டுமொத்த சக்தி நிகழ்ச்சி குடும்பத்திற்கும் என் ஆழமான நன்றிகளை தெரிவிக்கிறேன்

வரிவரியாக வடிக்குமளவிட்கு என் தந்தையின் வாழ்க்கை சாதனைகளால் நிரம்பாமல் இருக்கலாம் ஆனால் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது இரண்டையும் வாழ்ந்து எனக்கு உணர்த்தியவர் அவர்தான் உடைந்து நொறுங்கியிருக்கும் என் கனவுகளில் இருந்து எதிர்கால்த்திட்கான உயிர்ப்பை தேடுகிறேன் கிடைக்கும் வரை அன்புடன் அன்பன் ...கிருஷ்ணா
Copyright © 2014 நட்சத்திரவீதியில்