Wednesday, January 26, 2011

கமலின் அங்கலாய்ப்பும் ரசிகனாக என் மனதும்

சில நேரங்களில் புகழ் பணம் தகுதி அத்தனையும் மீறி சில வார்த்தைகள் நம்மை நாமிருக்கும் இடத்திலிருந்து அப்படியே தூக்கி எறிந்துவிடும் ' எம். எஸ் . வீ ., இளையராஜாவுக்கு பிறகு தமிழிசையில் தனியான ஒரு இடம் இன்னமும் யாரும் பெறவில்லை ,அந்த இடம் தேவி ஸ்ரீபிரசாத் க்காக காத்திருக்கிறது' மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டில் கமல் சொன்னது இந்த கருத்துரகுமான் மீது அவருக்கு இருக்கும் "காண்டை" இப்படி தீர்க்க முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் .... தமிழ் இசையுலகின் மூன்றாவது தலைமுறையின் கடைசிபகுதியையும் நான்காவது தலைமுறையின் தொடக்கபகுதி தொடங்கி இப்போ வரைக்கும் சந்தேகம் இல்லாமல் ஆட்சி செய்வது இசைப்புயல்தான் என்ற உண்மை சராசரியாக ஒரு பாமரனுக்கும் புரிந்த உண்மை உலகறிந்த மேதை சொல்கிறார் என்பதற்காக அது பொய்யாகுமா என்ன?உண்மையில் மெல்லிசை மாமன்னர்கள் என்று சொல்லப்படும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் ஆட்சியை மேற்கத்திய பாரம்பரிய இசை வடிவங்களை கிராமத்து இசையோடு இணைத்து தந்த பண்ணை புறத்து புல்லாங்குழல் முடிவுக்கு கொண்டுவந்ததிலும் பார்க்க இசை புயலின் மேற்கத்திய இசை வடிவங்களை கொண்ட இசைபுரட்ச்சி முழுக்க முழுக்க மாறுபட்டது "அன்னக்கிளி உன்னை தேடுது" பாடல் ஏற்படுத்திய புரட்சியின் தாக்கம் தமிழிசை ரசிகர்கள் வீரியத்துடன் உணர்ந்தார்கள் என்றால் "சின்ன சின்ன ஆசை" பாடல் ஏற்படுத்திய தாக்கம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது அன்று தொட்டு இன்று இந்த பதிவிடும் வரை ரகுமான் ஆட்சி சந்தேகம் இன்றி தொடர்கிறதுகமல் என்ற மாமனிதர் இப்படி தன்னுடைய கோபத்தை காள்புனர்ச்சியை சில்லறைத்தனமாக கொட்டுவார் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். மெல்லிசை மாமன்னரையோ, இளையராஜா என்ற மாமேதையய்யோ மலிவான ஒபபிடுதலுக்குள் நான் கொண்டுவர நினைக்கவில்லை அப்படியொரு பாமரத்தனமான கேவலத்தயும் நான் செய்யப்போவதில்லை அவரவர் தலைமுறைக்கு அவரவரால் செய்ய வேண்டியவற்றை சந்தேகமின்றி எட்டாத அளவுக்கு செய்து முடித்திருப்பதைப்போல ரகுமான் அவர்கள் செய்து கொண்டிருக்கு காலம் இது அப்படியானால் கமலின் இந்த கருத்து எப்படியானா ரகத்துக்கள் அடக்கப்படவேண்டும் என்பதை புரிந்துகொள்ளலாம்
இசைப்புயல் ரகுமான் அவர்கள் ஒஸ்கார் வெற்றி பெற்றபோது இந்தியாவின் பிரபல செய்தி சேவை NDTV இப்படி செய்தி சொன்னது ( இன்னமும் நினைவில் இருக்கிறது ) "ரகுமான் ஒஸ்கார் வென்றார் சென்னையில் கொண்டாட்டம்" செய்தியை தொடர்ந்து கமலிடம் செய்தி சேவை தொடர்புகொண்டபோது அவர் சொன்ன கருத்துக்குள் முழுமையாக தெரியும் கமலுக்கு ரஹுமான் மீது இருக்கும் காண்டு , அல்லது ஒவ்வாமை அல்லது பொறாமை .... அதுவரை ஒஸ்கார் என்பது தமிழனுக்கு சாத்தியமானால் அது கமலினால் என்ற கருத்து அவர் வாழ்நாளிலேயே தவிடு பொடியாவதை பொறுத்துக்கொள்ள முடியாத வெறுப்பை அவர் கருத்துக்களில் காணலாம் மேற்படி செவ்வியில் ஒஸ்கார் என்பது உச்சம் அல்ல என்பதில் அவர் அடம்பிடித்திருப்பார் இதே கருத்துதான் அமிதாப்பிடம் இருந்தும்இனி கமலின் கருத்தை ஆழமாய் பார்ப்போம் அதாவது தேவி ஸ்ரீபிரசாத் என்ற திறமை ரகுமானோடு எந்த வகையிலும் ஒப்பிடமுடியாது ஒப்பிடப்படவும் கூடாது அப்படி ஒப்பிட தேவி ஸ்ரீபிரசாத் செல்லவேண்டிய தூரம் கொஞ்சம் நெஞ்சமல்ல ஒரு பாடலின் சாயல் எந்த வகையிலும் அடுத்தபாடலில் வராமல் பார்த்துக்கொள்வது ரகுமானுக்கே உரிய சிறப்பு அவரின் ஒவ்வொரு பாடலுமே ஒரு புரடச்சி தேவி ஸ்ரீபிரசாத் இதுவரை இசையமைத்த தமிழ் படங்கள் அத்தனையிலும் ஒரு பாடலாவது முதல் பட பாடலை தழுவியிருக்கும் இவ்வளவு ஏன் கமல் அங்கலைத்திருக்கும் மன்மதன் அம்பு பாடல்களிலும் புதுமை எதுவும் இருப்பதாக தெரியவில்லை அவை மக்கள் மத்தியில் பாரியளவு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை "ஹூஸ் தீ ஹீரோ" பாடல் சாயலை கிட்டத்தட்ட தேவி ஸ்ரீபிரசாத் இன் அத்தனை படங்களின் ஏதாவது ஒரு பாடலில் கேட்கலாம் 'உனக்கும் எனக்கும்' படத்தில் வரும் "லப் டப் -லப் டப்" சொல்லும் சம்திங் நல்ல உதாரணம் மன்மதன் அம்பு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவும் இல்லைகமல் ரகுமானுக்கு உரிய இடத்தை மறுக்க முயற்ச்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது , இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கமலின் இந்த கருத்து தொடர்பாக ஆனந்த விகடன் தமிழ் இசையமைப்பாளர்களிடம் ஒரு கருத்து சேகரிப்பை நடத்தியருந்தது யாருக்குமே ரகுமானின் சிம்மாசனம் தொடர்பாக அக்கறையே இல்லை அல்லது யாருமே கமலுக்கு எதிராக கருத்து கூற தயாரில்லை எல்லாவற்றையும் தாண்டி நான்காவது தலைமுறையின் வெற்றிகளை சுமந்து கொண்டு இன்னும் பல தலைமுறையின் இசை மகுடங்களை சுமக்க அடுத்த ஒஸ்காரின் விளிம்பில் நிற்கிறார் நம் இசைப்புயல் கண்டிப்பாக அவர் மீண்டும் ஒஸ்கார் மேடை ஏறுவார் ஆனால் அப்போதும் நம் தமிழன் அவருக்கு உரிய இடத்தை கொடுப்பார்களா என்பது மட்டும் கேள்விக்குறியே

Thursday, January 20, 2011

நான் ஒரு விபச்சாரி

"நேற்றுவரை இரவிரவாக படுக்கையில் பக்கம் பக்கமாக தன்னை உரித்து என்னை அனுபவித்த புரட்சியாளன் சேகுவேராவின் வரலாறு போய் இன்று என் படுக்கையில் பிடல் கேஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாறு .. நாளை கல்பனா சாவ்லா ,நாளை மறுதினம் வேறு யாரோ நூல்களை பொருத்தமட்டில் நானும் ஒரு விபச்சாரிதான் ....

சுழியம்

சுழியத்தை பற்றி சொல்ல வேண்டும் சக்தி fm இன் பணிப்பாளராக திரு. காண்டீபன் அண்ணாவின் வருகைக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களில் என்னாலும் நண்பர் பிரசாந்தினாலும் முன்வைக்கப்பட்ட யோசனை தான் இந்த "சுழியம்" காண்டீபன் அண்ணாவின் முழுமனதான ஏற்புடன் "சுழியம்" என்ற பெயர் அடியேனால் வைக்கப்பட்டது விடைதெரியா "வினாக்கள் சுழலும் வரை" என திரைப்படங்களில் வரும் tag lines அதாவது அடிக்குறிப்பு போன்றதொன்று அடியேனால் உருவாக்கப்பட்டது மறக்க முடியாதுமுதல் நிகழ்ச்சி கடந்த மாதம் பௌர்ணமியில் பல்வேறுபட்ட சுவாரஷ்யமான ரகளைகளுடன் ஒலியேற்றபட்டு நல்ல ஆரம்பம் என "மூத்தோர்களாலும்", "நேயர்களாலும்" வரவேற்கப்பட்டது அதனைத்தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சி நல்ல முன்னேற்றத்துடன் கூடிய படைப்பு என விமர்சனங்கள் வந்துள்ளன நேற்றைய சுழியத்திட்கு ஏராளமான வரவேற்புகளும் இல்லாமல் இல்லை குறிப்பாக ராஜ் அண்ணாவின் விவரணம் , பிரஜீவ் அண்ணாவின் ஒலிகலவை 100 வீதம் என பேசப்பட்டது ( அதில் ஆச்சரியம் இல்லை ) எனது படைப்புக்கு உருவம் தந்த அத்தனை சக்தி நிகழ்ச்சி பிரிவு நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

Wednesday, January 19, 2011

சுழியம் ..முழுக்க முழுக்க எனது கற்பனையில் உருவான மர்மங்களின் விவரணம் ஒன்று அலைவெளிக்கு செல்ல இருக்கிறது... " சுழியம்" இன்று இரவு 9.30. க்கு சக்தி f.m வானொலியில் ஒலிபரப்பாகிறது ...ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதி இது .... கேட்பவர்கள் யாராவது இருந்தால் விமர்சனங்களை தரவும்

Monday, January 17, 2011

சரித்திரத்தின் உயிர்ப்பு ( எம் ஜி ஆரின் பிறந்தநாள் )


கும்பகோணம் யானயடிப்பள்ளி - வறுமையில் கழிந்த வால்டேக்ஸ் ரோடு -முகம் பார்க்க முடியாமல் முதல் மனைவியின் மரணம் -எப்போதாவது படவுலகில் அவ்வப்போது சின்ன சின்ன வாய்ப்பு - ஒரே ஒரு நெறுக்க காட்சி தரக்கூடாதா என்று மூத்த இயக்குனர்களிடம் முறையீடு - கதருக்குள் இருந்துகொண்டு கலைஞர் மீது காதல் - வந்து சேர்ந்த வாய்ப்புகளை சிதறாமல் பயன்படுத்திய செம்மை - முப்பது வயதுக்கு மேல் வாழ்கையில் சந்திரோதயம் - நாற்பதுக்கு மேல் வாழ்கையில் சூர்யோதயம் - பட படவென்று வளர்ச்சி - மனித நேயம் என்னும் மாட்சி - காட்சியிலிருந்து கட்சி - கட்சியிலிருந்து ஆட்சி அப்பப்பா என்ன ஒரு வளர்ச்சி

அயல்வீட்டுக்காரனுக்கு அறிமுகமில்லாமல் ஒரு வாழ்க்கையோடு தொடங்கி அரசாங்க மரியாதையோடு அடக்கம் ஆணீர்களே

m g r கே மரணமா எனக்கு முதன் முதலில் மரண பயம் வந்தது காற்று - சமுத்திரம் - வானம் இவைகள் எல்லாமே மரணிக்க முடியாத சமாச்சாரங்கள் என்று கிராமத்து மக்களை போல நானும் நம்பிக்கிடந்தேன் அந்த நான்காவது நம்பிக்கை சரிந்துவிட்டது

இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் தொகுப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய வார்த்தைகள் இவை

Sunday, January 16, 2011

"சூப்பெர்டா chance எ இல்ல "

அழகியல் வர்ணனைகளும் சொல்லினால் ஒரு விடயத்தை அனுபவிப்பதும் தனி சுகம் ஆனால் எனக்கொரு சின்ன கவலை தற்போதெல்லாம் எல்லோரிடமும் புகைப்படதொ{ல்}லைபேசிகள் கையோடும் பொய்யோடும் உறவாடுவதால் அழகானவற்றை சொற்களால் ரசிக்கும் அந்த மோன சுகத்தை அறவே இல்லாமல் செய்துவிட்டதுஎந்த அழகான் இடத்தை கண்டாலும் "க்ளிக் " {camera சத்தம் } டேய் மச்சான் chance எ இல்லடா என்பதோடு வார்த்தைகள் வரண்டுவிடுகிறது இது அத்தனையும் தாண்டி அழகை கவியாக்குபவன் அதிசயம்தான்

Friday, January 14, 2011

இதுவும் இன்னொரு நாள்

(இந்த பதிவை நான் இடும் சமநேரத்தில் "3.30am" இதுவரை 60 அழைப்புகள் கிட்டத்தட்ட எங்கள் அழுவலக தொலைபேசிக்கு வந்துவிட்டது அம்பாறை மாவட்டம் குறிப்பாக நிந்தவூர் கல்முனை மற்றும் பொத்துவில் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதான செய்தியொன்று தீவிரமாக பரவியுள்ளமை உணர முடிகிறது தகவல்களை என்னால் இதுவரை உறுதிப்படுத்தமுடியவில்லை கேட்டவரை அது ஒரு வதந்தியாகவே சொல்லபடுகின்றது )

நிற்க ...

ஒருவாறு லேசாக மழை விடும் அறிகுறி தெரிகிறது வெள்ள நீரும் வடிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்க ஆரம்பித்திருக்கிறது ஆனால் அழிவுகள் ஜீரணிக்க தக்கதாக அமையவில்லை கிழக்கு மாகாணம் முழுவதும் முழுமையாக பாதிக்கபட்டிருப்பது உடமைகளை பொருத்தமட்டில் இது சுனாமியை விட பாரிய அழிவு என்பதை கண்டிப்பாக உரியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் ... நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் என்று நாடு முழுவதும் பொருட்கள் சேர்க்கபடுகின்றன உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறேன் கடவுளை ,,,இது இவ்வாறிருக்க வழக்கம் போல அத்தனை தமிழ் ஊடகங்களும் கிழக்கை நோக்கி படையெடுத்து நான் முந்தி நீ முந்தி என்று உதவிக்கரங்களை நீட்டுவது மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது அதிலும் நான் சார்ந்த ஷக்தி ஊடக வலையமைப்பு வழக்கமான வீரியத்துடன் களமிறங்கியுள்ளது

நீண்ட இடைவேளைக்குப்பின் அல்லது எனக்கு விவரம் அறிந்த வரை கொழும்பில் இப்படி ஒரு கடுமையான குளிரை கண்டதில்லை இயல்பாகவே குளிரில் வளர்ந்த என்னால் கூட கொழும்பின் தற்போதைய குளிரை தாங்கவே முடியவில்லை சீரற்ற காலநிலையின் வீரியம் நாடு முழுவதும் ஏதாவது ஒரு வடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் தைத்திருநாளையும் வரவேற்கவேண்டிய கடமை நமக்குயுத்தம் என்ற மனிதன் உருவாக்கிய சாத்தான் ஒருமுறை அடிக்க ஆழியின் உயர் கரங்கள் எங்களை மனிதாபிமானம் இன்றி நசுக்க ....இயற்கையும் தன்பங்குக்கு கைவரிசை காட்ட இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சாபக்கேடுகளில் தத்தளிக்கபோகிறோமோ என்ற வினாவுடன் தை மகள் வந்திருக்கிறாள் தையாவது பங்குனியாவது என்னைபொருத்தவறைக்கும் இதுவும் இன்னொரு நாள் அவ்வளவுதான் ... என்று என் இனம் தலையில் சுமைகளின்றி முழுமயடைகிறதோ அன்று வரட்டுக்கும் இந்த அத்தனை (தை மாசி பங்குனி) அக்காக்களும்

Wednesday, January 12, 2011

பிறந்தநாள்... இன்று ... பிறந்தநாள் ...

அடியேனின் அவதார நாளை ஒட்டி நள்ளிரவிலிருந்து ஏராளமான வாழ்த்துக்கள் எதிர்பாராத வாழ்த்துக்களும் திக்குமுக்காட வைத்துவிட்டது என்னை , குறுந்தகவல் மூலம் ,மின்னஞ்சல் ,தொலைபேசி மூலம் , வதன நூலில் என என் வாழ்க்கையில் அதிக பேரிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டது இதுதான் முதல் தடவை கிழக்குமாகானத்தையே ஸ்தம்பிக்கவைத்திருக்கும் மழையிலும் சில நண்பர்கள் , சகோதரிகள் நினைவு வைத்து வாழ்த்திய அன்பை என்னென்று சொல்ல அதற்கு ஒரு முக்கியமான வெளிப்படையான காரணம் சக்தியும் அது எனக்கு தந்திருக்கும் அறிவிப்பாளன் என்ற அங்கீகாரமும்தான் (முக்கிய குறிப்பு --- நேயர்கள் இன்னமும் என்னை ஒரு அறிவிப்பாளனாக அங்கீகரித்ததாக தெரியவில்லை அதற்காக நான் போராடிக்கொண்டேயிருக்கிறேன் )
என்றும் சக்திக்கு நான் கொண்ட கடன் தீரவே தீராது .....சக்தி கலையகத்தில் நான்

என் பிறந்தநாளை நான் கொண்டாடுவதில்லை என்ற என் தீவிர கொள்கையில் இருந்து இம்முறையும் நான் விடுபடவில்லை என்பது ஆறுதலாகவே உள்ளது எனவே இனிப்பு கொடுத்து என்னை நானே விலை பேசும் ஆங்கிலேய மலிவுகளுக்குள் இருந்து வழக்கம்போல் தப்பித்துக்கொண்டேன் (கடந்த நான்கு வருடங்களாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை இம்முறையும் நான் கொண்டாடவில்லை என்பதை உண்மையுடன் தெரிவிக்கிறேன் )

முக்கியமான விடயம் அண்ணன் ராஜ்மோகன் அவர்கள் எனக்கு தந்த பிறந்தநாள் பரிசு கனவு மெய்ப்படவேண்டும் என்ற வார்த்தையோடு வந்த பரிசுதான் இவ்வாண்டில் என் வழித்துணை , வானொலியில் என்னை இனம் கண்டு வாய்ப்புகொடுத்தவர்களில் முக்கியமானவர் எங்களுக்கெல்லாம் முன்னோடியும் தற்போதைய சக்தி தொலைக்காட்சியின் முகாமையாளருமான ஐ . கஜமுகன் அண்ணாதான் கஜன் அண்ணாவினதும் ராஜ் அண்ணாவினதும் வாழ்த்துக்களில் திக்குமுக்காடியே போய்விட்டேன் ....இதிலென்ன அவ்வளவு சந்தோசம் என்று தோன்றலாம் நியாயம்தான் ஒரு காலத்தில் நேரில் ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா என்று நான் ஆசைப்பட்டவர்கள் அருகில் இருக்கும் சந்தோசத்தை சொல்லவுமா வேண்டும் ......

எல்லாம் சரி அறிவிப்புத்துறைக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் எதையமே சாதிக்கவே இல்லை என்ற வெறுமை மட்டும் என்னை நிமிடம்தோரும் வதைக்கிறது ( அது என் கையாளாகாமயாகவும் இருக்கலாம் ) எது எப்படியோ சக்தியின் வழியில் அது என்னை அழைத்து செல்லும் வரை என் பயணத்தின் மீதும் சேரவேண்டிய இடம் குறித்தும் எந்த சந்தேகமும் இல்லாமல் நடைபோடுகிறேன் ..... வாழ்த்திய அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றிகள் இந்த வருடமாவது உருப்படியாக எதையாவது செய்யப்பார்க்கிறேன்

Tuesday, January 11, 2011

அகவை 71 இல் தேவதூதன் ...ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறை முன்னுதாரணமாக கொள்வதென்பது எங்களுக்கு முன்னைய தலைமுறையிலேயே முடிந்துவிட்டதோ என்று சில நேரங்களில் தோன்றும் அது கோமாளித்தனமான எண்ணமாக கூட இருக்கலாம் மறுப்பதற்கில்லை ஆனால் நான் சொன்ன கூற்று உண்மையாகும் பட்சத்தில் அதன் விளைவுகள் நன்மையாகவும் அமையும் தீமையாகவும் அமையும்

ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறை பின்பற்றும்போது புதியன இல்லாமல் போவது தீமை , ஆனால் தலைமுறைகளை தாண்டி மனதை கவர்பவர்கள் சொற்பமாய் இருந்தாலும் பொக்கிஷங்கள். கடந்த 10 ஆம் திகதி அப்படி ஒரு தங்கம் பிறந்தநாளை கொண்டாடியது எல்லோருக்குமே தெரியும் மூன்றாவது தலைமுறையிலும் தன் குரலால் பலரை கட்டிப்போட்டிருக்கும் இந்த மலையாள தேசத்து தேவதூதன் தமிழில் குடிபுகுந்த அல்ல அல்ல தமிழன் மனதில் குடிபுகுந்த அற்புதம்

ஒரு காலகட்டத்தில் மலையாள இசை உலகின் இரும்புக்கதவு இவர்தானாம் தற்போதைய இசைப்புயலின் தந்தை மலையாளத்தில் பாடும் நிலாவையும் இன்னுமிதர பாடகர்களையும் அங்கு அறிமுகப்படுத்த முன்னர் இவர் குரலை மீறி ஒரு குரலுக்கு மலையாள வீடுகளில் அனுமதியே கிடையாதாம் ... இப்பொழுதும் இவர் மலையாளிகளின் வாழ்கையின் ஒரு அங்கம்

தமிழில் விருது என்ற அளவுகோலுக்குள் இவர் அடக்கப்படாமைக்கு என்ன காரணம் என்பதுமட்டும் புரியவில்லை ஆனால் "வெள்ளைப்புறா ஒன்று" பறக்காத வீடுகளும் ,ஈரமான ரோஜாக்கள் பூக்காத தமிழ் தோட்டங்களும்,தூங்காத விழிகளைக்கொண்ட முகங்களையும் , தேடுவதென்பது முடியாத காரியம்தான்
(இவரின் இசை அற்புதங்களுக்கு பல பாடல்கள் உதாரணம் என்றாலும் எனக்கு மிகப்பிடித்தவை என்பதற்காக இவற்றை உதாரணம் காட்டினேன் இசை ரசிகர்கள் பொறுத்தருள்க )

இசைஞானி ஆளுமைக்குள் தமிழிசயுலகம் கட்டுண்டு கிடந்த காலங்களில் பிரபலமான் குரல்களுக்கு நிகரான சில குரல்களை அல்லது ஒத்த குரல்களை அறிமுகப்படுத்தியிருந்தார் இசைஞானி . உதாரணமாக பாடும் நிலாவைப்போன்ற குரலுடைய மனோ ( தற்போதைய மனோ அவர்களின் குரல் தனித்துவமானது )
ஜானகி அம்மாவை ஒத்த குரலுடைய மின்மினியும் முக்கியமானவர்கள் அந்த வரிசையில் ஜேசுதாஸ் அவர்களுடைய குரல் சாயல் அருண் மொழிக்கு இருப்பதை காணலாம் சூரசம்காரம் படத்தில் வரும் நீலக்குயிலே பாடல் உதாரணம் ஆனால் ஜேசுதாஸ் அவர்களின் ராஜாங்கம் தனித்துவம் மிக்க மகத்துவமாய் இன்றும் எல்லோர் மனதிலும் அச்சுபட்டுப்போய் கிடக்கிறது மறக்கமுடியாத மறுத்துவிடமுடியாத இசைத்தடம் அது

நம் தலை முறையில் இசையமைப்பாளர் வித்யாசாகர் ,யுவன் ஆகியோர் அதிகம் நாடும் மதுபாலக்ரிஷ்ணன் ,விஜய் ஜேசுதாஸ் ஆகிய இருவருமே ஜேசுதாஸ் அவர்களின் குரலை முன்னுதாரனமாக கொண்டு வெற்றி ஈட்டி நிற்கின்றனர் ஆகா தலைமுறைகளை பின்பட்ருவதால் யாரும் சோடம் போகப்போவதில்லை (ஹீ .... ஹீ ...)

இன்னும் கால தூரங்களை சரித்து விஞ்சப்போகும் இந்த இசை உலகின் தேவதூதன் பல்லாண்டு வாழ இறையருள் பிரார்த்திப்போம் அன்புடன் அன்பன் கிருஷ்ணா

Sunday, January 9, 2011

நாளை விடுதலை

கடந்த 19 ஆம் திகதி சக்தி பண்பலையில் ஒலிபரப்பான கவிராத்திரிக்கென நான் புனைந்த வரிகள் உங்கள் பார்வைக்கு வழக்கம் போல என்னை வழி நடத்தும் கவி ராத்திரியின் தயாரிப்பாளர் மற்றும் சக்தி வானொலியின் பிரதம தயாரிப்பாளர் திரு .ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி ...அன்புடன் அன்பன் ...கிருஷ்ணா


என்னையும் கவிதை எழுதச்சொன்னார்கள்
என் இரவுகளின் கருமையை மையாக்கினேன்
என் தனிமைகளின் வெறுமையை சொல்லாக்கினேன்
சிரம் சுமந்த வறுமையும் முறுவல் மறந்த முகங்களும்
அவல பொட்டலங்களுடன் அல்லாடும் மனிதர்களின் அடிப்படையும் தெரிந்ததனால்
நானும் எழுதினேன்
விடுதலை நாளை தேடி நாளை விடுதலை என்ற நம்பிக்கையில்

மழை கொண்டு வருகிறது சமதர்ம மேகம்
பஞ்சமில்லை எங்களுக்கு
வழி வழியாக தொடர்கிறது இந்த உழைப்பின் மோகம்
சோம்பல் இல்லை எங்களுக்கு
அளந்து அளந்து உணவை அளந்து
வளைந்து வளைந்து உழைப்பை சுமந்து
நெளிந்து நெளிந்து கூச்சம் மறந்து
இழந்து இழந்து அனைத்தும் மறந்து
நாங்கள் கொட்டிய உழைப்பில்தான்
கொடி கட்டி பறந்தது இந்து சமுத்திரத்தின் முத்து

இலை கூட கருகும் மார்கழி பனியிலும்
சுள்ளென்று சுடும் கோடை வெயிலிலும்
ஆளையே அல்லும் மாரி மழையிலும்
மலையை விட்டிரங்காத என் முப்பாட்டனின் உதிரம்தான்
இந்த மண்ணின் சிகப்பில் தெரிகிறது

உழைப்புக்கேட்ட்ற ஊதியம் இன்றி
பிழைக்க வேறு நாதியும் இன்றி
மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் ஒடுக்கப்பட்ட உடமைகளுக்கும்
சத்தமிடத்தெம்பில்லாத என் முப்பாட்டனின் வியர்வைதான் இந்த மண்ணில் செறிந்திருக்கிறது

எங்கள் முதுகெலும்புகள் ஒவ்வொன்றும் இந்த நாடிட்காகவே தேய்ந்த கதை தெரியுமா
எங்கள் அங்கங்கள் ஒவ்வொன்றும் அந்நிய செலாவனிக்காகவே காய்ந்த கதை தெரியுமா
வந்தவன் போனவன் எல்லாம் பணத்தில் மிதக்க
கண்டவன் நின்றவன் எல்லாம் சுகத்தில் திளைக்க
எங்கள் சுயத்தை கூட மறந்து நிற்க நாம் என்ன தெருவில் கிடக்கும் குப்பை நிரப்பும்
முச்சந்தி தொட்டிகளா

பன்னெடுங்கால சுதந்திரம் ,
பறை சாற்றும் ஜனநாயகம்
நாம் வெகுண்டெழுந்த போதெல்லாம்
கட்டியணைத்த தந்திரம்
இறுக்கத்தை தளர்த்தியபோது முதுகில் ரத்தம்
வழிந்தபோது தெரிந்தது எங்கள் இனத்தின் ஏமாற்றம்

அயலில் ஆறு கோடி பேர் என்பர்
எங்கள் தந்தை நாடென்பர்
வந்தால் வாழவைக்கும் மூத்தகுடி என்பர்

அது சரி .....
ரத்தம் இங்கு சிந்திய போதே
திரையில் முத்தம் சிந்தியவர்களுக்கு வீடேழுப்பியவர்களிடம்
மத்தியில் நாம் அநாதரவாய் நிற்பதை சொன்னால்
பதை பதித்து ஓடிவந்துவிடப்போகிறார்கள்

என் சகோதரனே
நீ உனக்காக சிந்திக்கிறாய்
நான் எனக்காக சிந்திக்கிறேன்
நாம் நமக்காக சிந்திப்பதில்லை
உன் விடுதலை உன்னிடம்
என் விடுதலை என்னிடம்
நம் விடுதலை நம்மிடம்புகையிருட்டுக்குள் தொலைந்துகொண்டிருக்கும்
உன் பருவங்களை துலக்கு
வெற்றுபோதைக்குள் தோற்றுபோகும்
உன் விடலைபருவத்தை தட்டிஎழுப்பு
கூவி அழைக்கும் புதிய அலைகளின்
உரிமைசுவடுகளின் பின்னால் நட
முறுவல் சிந்த வேண்டிய முகத்தில்
முனகலிடும் வாயை கிழித்துவிடு

எங்கள் நெருப்பில் குளிர் காய்பவரிடம்
எங்கள் உவர்ப்பில் உணவுன்பவரிடம்
எங்கள் நிழலில் இளைப்பாருபவரிடம்
எங்களுக்கானதை கேள்
மறுத்தால் கொடுப்பதை நிறுத்து
கெடுபபதுதானே தவறு கொடுப்பதை நிறுத்துவதில் இல்லையே

நம்பிக்கயோடு கைகோர்ப்போம்
புரட்சி வீதியில் சேர்ந்து நடப்போம்
விடுதலை நாளை தேடி நாளை விடுதலை என்ற நம்பிக்கையில்

Sunday, January 2, 2011

இந்த வருடத்தின் முதல் கவிராத்திரியில் என் கவிதை முழக்கமும் உலகெங்கும் சக்தி கொண்டு சென்றது வாய்ப்பளித்த சக்தியின் பிரதான தயாரிப்பாளர் ராஜ் மோகனுக்கு மற்றும் என் கவிக்குழந்தையை சீராக வளர்க்க பொருப்பெடுத்திருக்கும் அத்தனை சக்தி ரசிகர்களுக்கும் கவிராத்திரியின் அவை முதல்வர் சடாகோபன் ஐயாவுக்கும் நன்றிகள்
கவிராத்திரி ஞாயிறு இரவு 10 மணிக்கு உங்கள் சக்தியில்


காலமே உனது கணக்கை நிறுத்து

காலமே நீ எங்களுக்கு யார் ?
காலம் காலமாய் காலம் ஒதுக்காமல் கேட்கிறேன்
காலமே நீ எங்களுக்கு யார் ?

நியாயம் இன்றி நீதி வழங்குகிறாய்
நயவஞ்சகனா நீ ?
உன்னை கடந்து சிந்தித்தால் தண்டனை பரிசு
உன் கணக்கிலிருந்து
கயவனா நீ ?

எதிலும் நிறைந்திருக்கிறாய்
எங்கும் பரந்திருக்கிறாய்
காற்றிலும் நேற்றிலும் செறிந்திருக்கிறது உன் கணக்கு

எல்லைகள் மீறப்படும் போதும்
தொல்லைகள் விஞ்சப்படும் போதும்
தர்மத்தை அழித்து கோரப்பட்களுடன்
சிரிக்கும் தூய மகராசர்கள்
அதர்மத்தை சிரத்தில் சுமக்கும் போதும்
தன்னம்பிக்கை அற்ற என் பரிதாப மனிதர்கள்
அவர்கணக்கை உன் கணக்கில் கண்ணீருடன் நிலையான வைப்பிளிடுகின்றனர்
அப்படியானால் நீ கடவுளா ?
அல்லது அவன் கணக்கே நீதானா?......
காலமே கடவுளா நீ ?
அல்லது அவன் போடும் கணக்கே நீதானா ?

புரியவில்லை எனக்கு உன் பெயர்
தெரியவில்லை எனக்கு உன் கணக்கு

வந்து போன தடங்களை அழித்து
வெந்த மனிதர் கதைகளை ஒழித்து
கனவுடன் திரிந்தால் முகம் சுழித்து
நெருப்பில் கிடந்தாலும் உனக்கு நெஞ்சம் உருகா
கொடூரனா நீ ...?
நெஞ்சம் உருகா கொடூரனா நீ ?...

பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளையும்
மன வீடு புக நேற்றுதான் தயாரான இழனங்கைகளையும் சித்திரைமாதம் எப்படியும் முகத்திரை காட்டிவிடலாம்
என்று 6 மாதம் குடத்தில் உயிர்காத்த குறை உயிர் சிசுவையும்
விட்டுவைக்காமல்

காலால் மித்தித்து, மார்புகளை வெட்டியும் , வயிற்ரை கிழித்தும் உயிர் பிடுங்கியவனை பார்த்து பொறுமையாக இருக்க சொல்கிறாய்
நீ என்ன பேடி பயலா ...?

காலமே நீ யார் எங்களுக்கு ?

தெரியாமல் கேட்கிறேன்
என்ன செய்திருக்கிறாய் நீ எங்களுக்கு?
எங்களின் எதை நிரப்புவதட்காய் உனக்கொரு கணக்கு ?

நீயாக கூடி வரும்வரி காத்திருந்த என்
பரம்பரையும்
நாளாக நாளாக நோய் கொண்டு மாண்டனர்

உன்னை மீறி உன் கணக்கை உலுக்கி
உனக்காய் காத்திருந்தவரை உயிரோடு மண்ணில் கருக்கி
சிரித்து நிற்பவர்கள் உன் தயவிலேயே மீண்டுக்கொண்டிருக்கின்றனர்

தெரியாமல் கேட்கிறேன்
என்ன செய்திருக்கிறாய் நீ எங்களுக்கு?
எங்களின் எதை நிரப்புவதட்காய் உனக்கொரு கணக்கு ?

ஆயிரம் ஆயிரம் மாந்தர்களும்

இன்று விதவை கோலம் கொண்ட தெய்வங்களும்

உயிர் பெறுமதி வேண்டாம் என்ற தங்கங்களும்

வாழ்த்தென்ன வீழ்ந்தென்ன வெறுமைதானே
பரிசாய் தந்தாய்
30 ஆண்டு கடத்தி வெறுமையை தானே
பரிசாய் தந்தாய்

ஏன் என் இனம் உனக்கு ஈனமா?
என் இனப்பிரவிகள் உனக்கு ஊனமா ?

நூறாண்டு என்பது உன் கணக்கு படி
சொற்பமாய் இருக்கலாம்
முப்பதாண்டு என்பது உன் கணக்குப்படி
அற்பமாய் இருக்கலாம்

மாடுகளை அடைக்கும் கொட்டில் போன்றதொரு மடம்
எங்கள் வாழ்விடம்
அகலமாய் கை விரித்து சோம்பல் முறிக்க முடியாது
எங்கள் உறைவிடம்
உடுத்தி உடுத்து கிழிந்துபோன துணியும்
இரும்புப்பெட்டிக்குள் பழைய மனிதர்களின் உருவப்படங்களும்
மாதமானால் சம்பளம் வாங்கும் பட்டியலின் பொலுத்தீன் உரையையும் தவிர
நூறாண்டுகளில் நீ தந்த பொங்கலும் இல்லை
உன் கணக்கு தந்த இனிப்பும் இல்லை

ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து
கொளுந்துபரிக்கும் என் குல மங்கைகள் உன் குரல்வளை நெரிக்க விரைந்துவருகின்றனர்
ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து

நீ ஈனம் என்றெண்ணிய என் இன மாந்தர்கள் வெறியோடு உன்னை எதிர்த்து தீ மிதிப்பார்
நீ ஊனம் என்றெண்ணிய என் இன இனப்பிறவிகள்
ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து

நூறாண்டுகளுக்கு முன்னாள் உன்னை காலால் எட்டி மிதித்த என் மீசைக்கார முப்பாட்டன்
பாரதி மீது ஆணை ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து


Copyright © 2014 நட்சத்திரவீதியில்