Saturday, April 30, 2011

அம்மி மித்தித்து !

உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க ... வேல்சின் இளவரசர் திருமணம் நடந்து முடிந்தது ... இந்த வேல்சின் பட்டத்திற்குரிய இளவரசர் ... மன்னர் ... மகாராணி இதெல்லாம் ரொம்ப பழைய விஷயம் ... ஆனால் ஒரு சின்னமாக இன்னமும் இந்த பதவிகளை வைத்திருக்கும் பிரித்தானியன் பிரித்தாநியன்தான் ....
இந்த மேற்கத்திய சமாச்சாரங்களில் எனக்கு எப்போதும் துழியளவும் இஷ்டம் கிடையாது ஆனால் யதார்த்தவாதி வெகுசன விரோதி என்பதுபோல என் நிலைமையும் ஆகிவிடும் என்று பயந்து ஊரோடு ஓடுகிறேன் .... அனால் பழமை போற்றுவதில் எப்போது பிரித்தானியர்கள் முதலிடம்தான் ... ஒட்டு மொத்த பிரித்தானியாவிலும் அன்றைய தினம் விடுமுறை ... அத்தனை மக்கள் சேவைகளும் இலவசமாக ... இப்படி ஒட்டு மொத்த பிரித்தானியாவின் ஆசிகளுடன் இந்த திருமணம் நடந்தது இத்தனைக்கும் இந்த வேல்ஸ் அரச வம்சத்திற்கு அங்கு எந்த அதிகாரமும் ஆட்சியில் கிடையாது !



கல்யாண வீட்டுக்கு போய் இருக்கீங்களா ? போய் எத்தனை நாள் இருந்து இருக்கீங்க? ... நான் பிறப்பிலேயே சுத்த கிராமத்தான் என்பதால் உண்மை திருமண வைபவம் என்பது என் கண்களுக்குள் எப்போதும் நிழலாடும் ... பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து ... அழைப்பிதல் அடித்து ...ஒரு சொந்தம் விடாமல் ஒரு நண்பன் விடாமல் ,,, பார்த்து பார்த்து அத்தனை பேருக்கும் கையிலேயே கொண்டுபோய் வைத்து "ஒரு வாரம் முன்னாடியே வந்துடுங்கப்பா " என்று அன்பாக கட்டளை இட்டு விட்டு ... மீண்டும்

வந்து திருமணத்துக்கு தேவையான அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு வந்து நிற்பவர்களையும் குறைவின்றி கவனித்துக்கொண்டு திருமண நாள் நெருங்கும் சந்தோசமான நேரத்தில் ஒரு பிரச்சினை வரும் " தாய் மாமன் நான் நான்... உயிரோட இருக்கேன் எவண்டி உன் கழுத்துல தாலி கட்டுவான் நானும் பார்துடுறேன் ...சுத்தி தேடி பார்த்தா குரல் கொடுத்தவர் சொந்தத்தின் சொந்தத்துக்கு தெரிந்த வகையில் தெரிந்த சொந்தமாக இருக்கும் அவனையும் சமாதானப்படுத்தி சிரிக்க வைத்து முறைத்தால் அவனுக்கும் பயந்து ....

முன்கூட்டியே ஒரு வாரம் முன்னாள் அத்தனை நெருங்கிய சொந்தங்களும் பந்தங்களும் ஒரே இடத்தில் கூடி செம ரகளையா இருக்கும் எப்போதாவது ஒரு தடவை இந்த மாதிரி விசேசங்களில் மட்டுமே காணக்கூடிய உறவுகள் தங்கள் பழைய நினைவுகளை மீட்டுப்பார்ப்பதும் கூடவே புதிதாய் அறிமுகமாகும் சின்ன குழந்தைகளின் ஆட்டம் பாட்டம் வீட்டையே அதிர வைக்க உறக்கம் வந்தால் தானே தூக்கம் திருமண நாளுக்கு முன்னாடியே மண்டபத்தை அலங்காரம் செய்து விட்டு .. இரவிரவாக வேலை செய்து .... ( முன்னாடியே ஒரு வாரம் தூக்கம் இருக்காது ......)



மணவறையில் உட்காரவைக்க மணமகளை தயார் படுத்த ஒரு தோழிமார் கூட்டம் .... மாப்பிள்ளையை தயார் படுத்த ஒரு நண்பர் கூட்டம் கூட்டம் ...( சில நேரங்களில் இந்த இரு தரப்பிலும் யாருக்காவது காதல் பத்திக்கொண்டு அது அடுத்த திருமணமாகவும் அமையும் அது வேறு கதை ) அத்தனை சடங்குகளும் முடியும் மட்டும் பொறுமையாக இருந்து ... அத்தனை உறவுகள் கண்பார்க்க தன் வாழ்க்கைத்துணையை பரஸ்பரம் கைபிடிப்பர்

இது எல்லாவற்றுக்கும் மேல் திருமண மண்டபத்திற்கு வரும் உறவுகள் அத்தனை போரையும் சரி விகிதத்தில் கவனிக்க வேண்டும் யாரையாவது கொஞ்சம் முறைத்தாலும் போதும் ..( டேய் என்ன எவேண்டா மதிக்கிறீங்க ? ... டேய் வாடி இனி ஒரு நிமிசமும் இங்க இருக்க வேணாம் என்று ஒரு பட்டாலத்தியே கூட்டிக்கொண்டு கிளப்பிடுவாங்க ... அட நான் சொல்லறத கேளுங்க மச்சான் இங்க வாங்க என்று அவனை சமாதானப்படுத்த முன் போதும் போதும் என்றாகிடும் ...

சாப்பிடும் போது வருமே அதுதான் உச்சகட்டம் சமைத்த சாம்பாரை கூட சரி அளவில் போடணும் இல்லனா "டேய் எனக்கு அதிகமா சாம்பார் போடலடா டேய் எனக்கு இங்க மரியாத இல்லடா என்று அங்கும் ஒரு பிரச்சினை" ..... சாந்தி முகூர்த்தத்துக்கு அன்றே நாள் சிறந்தது என்றால் பரவாயில்லை கொஞ்சம் தள்ளிப்போனாலும் நாள் குறிக்கும் வரை புது ஜோடி படும் பாடு இருக்குமே ஹையோ ......


இப்படி பல இன்பமான தொல்லைகளுடன் ஒரு திருமண வைபவம் முடிய ஒரு மாதம் ஆகிவிடும் .....இப்போ அப்டி எல்லாம் இருக்கா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை கல்யாணத்துக்கே பொண்ணு மாப்ள அரை நாள் லீவு போட்டுட்டுதான் வர்றாங்க...... உண்மையில் இப்படி நாள் போக போக கட்டிக்காக்க வேண்டிய பழமையோடு மனிதத்துக்கு தேவையான மனித நெருக்கங்களும் கரைவதில் எனக்கு உடன்பாடு இல்லை .... காரணமாக உலகத்தின் வேகம் சொல்லப்படுகிறது பொருளாதாரம் சொல்லப்படுகிறது ..நாகரிகமும் சொல்லப்படுகிறது .. இவை அனைத்துமே சப்பைக்கட்டுத்தான் திருமண வைபவம் என்பது ஒரு சமூகத்தின் அடயாளம் .... அடயாளத்தை தொலைத்து விட்டு ஒரு சமூகம் இருந்தென்ன இல்லாமல் என்ன? ராயல் திருமணத்தை உலகம் முழுதும் ரசித்ததே ஒழிய அந்த வைபவத்தில் அச்சு அசலாக பேணப்பட்ட பழமையை மட்டும் கவனித்ததாக தெரியவில்லை

எங்கள் மத்தியில் மேற்கத்திய கலாச்சாரமும் நா நுனியில் ஆங்கிலமும் இருக்கின்றதே ஒழிய மேலைதேசத்தவர்கள் இப்போதும் அவர்களாகவே இருக்கிறார்கள் சிந்திக்க வேண்டும் ( இப்படி ஒரு திருமணம்தான் எனக்கும் தேவை ... நடந்தால் நான் அதிஷ்டசாலி )

1 comment :

  1. சாந்தி முகூர்த்தத்துக்கு அன்றே நாள் சிறந்தது என்றால் பரவாயில்லை கொஞ்சம் தள்ளிப்போனாலும் நாள் குறிக்கும் வரை புது ஜோடி படும் பாடு இருக்குமே ஹையோ ...... //

    ஹா ஹா ஹா ஹா செம........!!!

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்