Thursday, April 14, 2011

பயணம் (break down)



ராதா மோகன்
என்ற இயக்குனர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு ... அழகிய தீயே ..மொழி.. அபியும் நானும் என்று அவர் படங்கள் நானும் அப்பாவும் விரும்பி பார்ப்போம்( அப்பா மகன் சேர்ந்து பார்க்குற படம் ரொம்ப குறைவு இல்ல அதனால சொன்னேன் ) ... அந்த வரிசையில் பயணத்தை ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன் ... எதிர்பார்த்தது போலவே நல்ல படம்தான் ஆனால் அபாரமான படைப்பு கிடையாது ... மொழி , அழகியதீயே , அபியும் நானும் .. வரிசையில் இந்த படம் நான்காவது இடம்தான்

தெரிந்தெடுத்த களம் சிறப்பு ஹாலிவுட் தரத்தை தொட்டிருக்கிறது .. ஆனால் நம் இயக்குனர்கள் (ஷங்கர் உட்பட ) வழி வழியாக விடும் பெரிய தவறை இந்த படத்திலும் காணலாம் ( தயவுடன் அதிக பிர்சங்கிதனாமாக எடுக்க வேண்டாம் ) களத்தை ஹாலிவுட் தரத்துக்கு தெரிவு செய்துவிட்டு நம் ஊர் கார சார மசாலாக்களை கலந்தால் எப்படி? .. கிழவிக்கு குமரி உடை அணிவித்தது போலாகிவிடாதா ?

ராதாமோகனும் அதைத்தான் முயற்சி செய்திருக்கிறார் கதை பக்கா திரில்லர் ...ஓட்டம் விறுவிறுப்பானது என்பதெல்லாம் உண்மையே .. ஆனால் விமானத்துக்குள் நடக்கும் சில கூத்துகள் படத்துடன் ஒட்டவில்லை என்பதே வருத்தம் தருகிறது , மொழி மாதிரியான அற்புத சினிமாவை தந்த ராதாமோகன் , பிரகாஷராஜ் ஜோடிக்கு இந்த படத்தின் ஓட்டைகளை அடைக்க தெரியாமல் போனது புதினம்



5 தீவிரவாதிகளால் கடத்தப்படும் விமானத்தையும் , கடத்தலையும் , மீட்க போராடும் படலமுமே கதை ..... சில இடங்கள் பெரிய விறுவிறுப்பு , நகம் கடிக்கும் அளவிற்கு போகிறது ... அதே சில காட்சிகள் படு மொக்கை .. குறிப்பாக கடத்தப்பட்ட விமானத்துக்குள் இருக்கும் பாத்திரங்களை நகர்த்தியதில் சாமர்த்தியம் இல்லை கடத்தப்பட்ட விமானத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு சில பாத்திரப்படைப்புகளில் இல்லவே இல்லை படத்திற்கு பிரவீன் மணி இசையாம் சொன்னால்தான் தெரிகிறது சிறப்பு என்று இசையில் எதுவுமே இல்லை


த்ரில்லர் கதையில் நகைச்சுவையை சேர்த்துவிட்டிருப்பது புதுமை குறிப்பாக ... இரும்பு கோட்டை முரட்டுசிங்கத்தில் வருவாரே பாலாஜி அவர் ... ப்ருதுவிராஜ்ஜுடன் செய்யும் ரகளைகளை ... என்னை மறந்து ரசித்தேன் ..... அதே படத்தின் உச்சகட்ட விறுவிறுப்பு இருக்கும் காட்சியில் விமானத்துக்குள் ஒருவர் மிமிக்ரி செய்து சிரிக்க வைப்பது உச்சகட்ட மொக்கை



படங்களில் நடிகர்கள் செய்வது போன்று நிஜ வாழ்க்கையில் இல்லை என்ற தெரிந்த அதே தத்துவத்தை பிருதிவிராஜ் போன்ற நல்ல நடிகரை வைத்து மீண்டும் காட்டியிருப்பதில் புதுமை இல்லை ... மெலிதான புன்னகை மட்டுமே வருகிறது ... எம் எஸ் பாஸ்கர் பாதிரியாராக வருகிறார் சரியான தேர்வுதான் ஆனால் அதிலும் அநியாய சென்டிமன்ட் ,... ஜோசியராக வரும் மனோபாலாவும் .. அவரருகில் இருப்பவரும் ( பேர் தெரியலைங்க )அடுத்த சென்டிமன்ட் ..

ஹோலிவூட் கதைகளை யதார்த்தம் மீரமால் எடுக்கும் ஆற்றல் தமிழில் சிலருக்குதான் உண்டு அதில் மிஷ்கின் முதன்மையானவர் ... நந்தலாலா ஒரு ஜப்பானிய திரைப்படமாக இருந்தாலும் அழகாக எடுத்திருப்பார் .. ராதாமோகனுக்கு அது கொஞ்சம் வரவில்லை ஆனால் ராதாமோகன் வழக்கம் போல தன் அடையாளத்தை விட்டுக்கொடுக்கவில்லை டப்பாங் குத்து , ஐட்டம் டான்சு , ஆபாச வார்த்தைகள் ... படுக்கையறை ஆபாசம் ,, கவர்ச்சி பெயரில் காட்டப்படும் ஆபாசம் ... எதிலுமே மனுஷன் இன்னமும் சிக்காமல் இருப்பது புதுமை ... அவரிடம் இருந்து ஆரோக்யமான தமிழ் சினிமா இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது ,, அந்த எதிர்பார்ப்பை அவரால் கண்டிப்பாக நிறைவேற்ற முடியும் என்பதற்கு இந்த கதை களம் நல்ல உதாரணம் ,

ஆனால் ராதாமோகனால் இந்த கதையை இன்னும் நன்றாக சொல்லியிருக்க முடியும்

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்