Thursday, April 11, 2013

எழுதி கிழித்த நூறு


 நட்சத்திர வீதியில் பயணிப்பவர்களுக்கு எதை கொடுப்பது என்பதில் இருக்கும் கவனம். கூடவே மிதமிஞ்சிய சோம்பேறித்தனம், கொஞ்சமாய் அதிகம் இருக்கும் தொழில், வார்த்தை வரட்சி  கூடவே கற்பனை வரட்சி    என்று 3 வருடங்களில் 100 தான் எழுதி கிழிக்க முடிந்தது. உண்மையில்  இது வெட்கப்பட வேண்டிய ஒன்று பெருமையடிக்க இதில் ஒன்றும் இல்லை , ஆனால் நூறு என்பதை எதற்காக கொண்டாட வேண்டும் என்பதை அறியாமலேயே கொண்டாடும் ஒருவனாக  அதையும் போகிற போக்கில் நினைவுபடுத்த ஒரு முயற்சி அவ்வளவே.

  எழுத்து   என்பது படிக்க படிக்க கொடுக்கும் சுவை என்ன என்பதை அறிந்திருந்தேன். ஆனால் நாமே எழுதவேண்டும் என்ற எண்ணமே எவ்வளவு பெரிய விபரீதமான எண்ணம் என்பதை உணர நட்சத்திரவீதியில் எனக்கு   கைகொடுத்திருக்கின்றது என்பதை ஆணவம் இல்லாமல் சொல்லலாம்.  இன்னும் நிறைய எழுத எழுத்தில் மூத்தவர்கள் அறிவில்  பெற்றிருக்கும் அனுபவத்தின் சில துளிகளாவது ஆயுளுக்குள்  எனக்கும் கொடு என்று இறைவனிடம் இந்த நூறாவது பதிவில் யாசிக்கிறேன்.

சில  வருடங்களுக்கு முதல் வலையுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திவைத்த அருமை நண்பன் பஹத் a . மஜீத்துக்கு (fahath a  majeeth ) முதல் நன்றி ,  எழுத்துக்களை அறிமுகப்படுத்தி    வைத்த அண்ணன் ராஜ் மோகன் (சென்னை )அவர்களுக்கும் , blog  சம்பந்தமாக பல விடயங்களை அறிமுகப்படுத்தி தந்த சகோதரி ஹோஷியா ( சக்தி fm ) அவர்களுக்கும் நன்றி. பிற்பட்ட காலத்தில் அடிக்கடி  பதிவுகளை பார்த்துவிட்டு பல்வேறுபட்ட  விமர்சனங்களையும் கருத்துக்களையும் சொல்லிவரும் வலையுலக நண்பர்களுக்கும் facebook நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் இனியாவது உருப்படியாக எழுதி கிழிக்க முயல்கின்றேன் !!!!



 

1 comment :

  1. அண்ணா இது எழுதியவை,கிழித்தவை அல்ல......எழுத்து என்பது படிக்க படிக்க கொடுக்கும் சுவை என்பதை நானும் அறிவேன்...
    உங்கள் பதிவுகளை சுவாரசியமாக வாசித்து உள்ளேன் என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்......100வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.......

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்