Wednesday, July 25, 2012

சிரட்டை

 எங்க ஊரை சுற்றிலும் பல ஊர்கள் மத்தியில்தான் நாங்கள் அதுவும் ஒரு பள்ளத்தாக்கு , ஒரு நேரம் வந்தால் எல்லா ஊர்கள்லயும் திருவிழா கலைகட்டும் ஒரு ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் என்பதால அநேகமா  பள்ளிக்கூடத்துல அந்த ஊர் பசங்கதான் அதிகமா படிப்பாங்க. திருவிழான்னு வந்துட்டா வெறும் மேசைக்குதான் வாத்தி பாடம் நடத்த வேண்டி வரும். ஊரை சுற்றி நாலு ஊர் என்பதால நாலு ஊர்லயும் திருவிழாவுக்கு குழாய் ( ஸ்பீக்கர் )  கட்டி பாட்ட கத்த விட்டுருவாங்க. நாலு பக்கம் இருந்து பாட்டு வந்து நடுவில இருக்க நமக்கு எல்லாம் கலந்து ஒண்ணுமே புரியாமல் ஒரு சத்தம் மட்டும் விடிய விடிய கேட்கும் ,அநேகமாக அந்த பாட்டுகள விரல் விட்டு எண்ணிடலாம் ( செல்லாத்தா செல்ல மாரியாத்தா , கற்பூர நாயகியே , பாட்டுகள் இல்லாமல் திருவிழாவே கெடயாது )

திருவிழாவில கடைசி நாள் ரதம் வரும். விடிய விடிய ரத பவனி அப்படி பல ஊர்கள கடந்து ரதம் எங்க ஊருக்கு வரும் போது எப்டியும் ராத்திரி பத்து மணி ஆகிடும். ரதத்துக்கு முன்னால பல களியாட்டங்கள், கரகாட்டம்தான் சிறப்பு ...எனக்கு அப்போ ஒரு பன்னிரண்டு வயசு, ராத்திரி  ரதத்தின் பின்னால கொஞ்ச தூரம் போக வீட்டுல அனுமதி வாங்கியாச்சு அடம்புடிச்சுதான். என் வீட்டுல இருந்து கொஞ்ச தூரத்துல ஸ்ரீதர் வீடு ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஒரே பள்ளிக்கூடம் அப்புறம் பெரிய பள்ளிக்கூடம் ஒன்னுக்கு போய்ட்டான்... சரி அவனும் திருவிழாக்கு வந்ததால அவன்கூட நானும் சேர்ந்துட்டு பைக்கட் ஐஸ்க்ரீம் இரண்டு வாங்கி சாப்டுட்டே ரதத்துக்கு பின்னால  போயடிருந்தோம்.

ரதத்துக்கு பின்னால  ஒரே பொண்ணுங்க கூட்டம் எவ்ளவோ தேடி பார்த்துட்டேன் என் ஆள் வரல!.... ரதத்துக்கு முன்னால மேல வாத்தியத்துக்கு முன்னால கரகாட்டம். அங்க ஒரே கூட்டம் விசில் சத்தம் பறக்க ஒரு பொண்ணு சும்மா சுழன்று சுழன்று ஆடுறா .... சுத்திவர ஒரே கூட்டம் ஒவ்வொரு தடவை சுழர்ரபோவும் கூட்டத்துல ஏகப்பட்ட கைதட்டல். நானும் ஸ்ரீதரும் அந்த ஜோதியில கலந்துட்டோம் எல்லார் பார்வையும் அந்த பொண்ணு மேல என்ன ஒரு பதினாறு வயசு இருக்கும். பலபேர் அவ மார்பையே வைத்த கண்ணு  வாங்காம பார்திட்டிருக்காங்க  ஆட்டம் நம்ம சங்கிலி அண்ணனுக்கு புடிச்சு போச்சு (ஆட்டம் புடிச்சத விட அய்ட்டம்தான் ரொம்ப பிடிச்சிருக்கனும் ) பத்து ரூபா நோட்டுக்களால ஒரு மாலைய செஞ்சு தள்ளாடி தள்ளாடி போய்  அந்த பொண்ணு கழுத்துல  போட்டுட்டு கூடவே மார்பையும் உரசிட்டு வந்துட்டார்.  அண்ணன் ஊர்ல பெரிய பணக்காரர் சொந்தமா ஒரு பஸ் வச்சிருக்காரு, கூடவே சின்னதா ஒரு மளிகை கடை மாச வருமானம் பத்தாயிரத்தையும் தாண்டும்னு அப்போ எங்க ஊர்ல ஆச்சர்யமா பேசுவாங்க . என் வயசு பையன் ஒருத்தனும், கரகம் ஆடுற பொண்ணு வயசுல ஒரு பொண்ணும் இருக்காங்க மனுஷன் பலான விசயங்கள்ல செம கில்லாடின்னு கேள்விபட்டிருக்கேன் .நல்ல வாட்ட சாட்டமான தோற்றம்தான் இரண்டு வாரம் சவரம் செய்யாத தாடி அந்த பொண்ணும் இவர் உரசினத ரசிச்சா மாதிரிதான் இருந்துச்சு.

அண்ணன் கண்ணு வச்சுடாண்டா .... ஸ்ரீதர் சொன்னான் சும்மா இருடா கேட்டுறபோவுதுன்னு நான் மழுப்ப..... நேரம் பதினொரு மணி இருக்கும்  நாங்க இரண்டு பேரும் அங்க இருந்து அடுத்த பக்கம் போய் பலூன் வாங்கிட்டு ஓடி பிடிச்சு விளையாடிட்டு வந்துட்டம்.  பௌர்ணமிதானே நல்ல வெளிச்சம் ரதம் அதை சூழ வந்த கூட்டம் எல்லாமே தூரத்துக்கு போற சத்தம் கேட்டுச்சு. நானும் ஸ்ரீதரும் வீட்டுக்கு போற வழில சங்கிலி அண்ணன் வீட்ட தாண்டிதான் போகணும் சரியாய் அவர் வீட்ட தாண்டும் போது உள்ள யாரோ அழுற சத்தம் கூடவே சங்கிலி கதைக்கும் சத்தமும் ....மூக்க முட்ட குடிசிருந்தது பேச முடியாம தள்ளாடுனத பார்க்கவே புரிஞ்சுது. அண்ணன் குழைவது பேசுற தொனியிலேயே கேட்டுச்சு டேய் வாடா பார்க்கலாம்னு கூட சொல்லாம ஸ்ரீதர் அந்த வீட்டு கதவு கிட்ட போய் இருந்த   சந்து வழிய பார்க்க ஆரம்பிச்சான். அப்போதான் தெரிஞ்சது கதவு சரியா பூட்டுப்படல

டேய் என்னடா பண்ற ? வீட்டுக்கு போவனும்டானு சொன்னது அவன் காதுல கேக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு ஆர்வமா உள்ள நடக்குறதுகள பார்த்துட்டு என் பக்கம் திரும்பாமலேயே கையாள என்ன வர சொல்லி சைகை காட்டுறான்.  உள்ள சங்கிலி அண்ணன் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் கரகாட்டம் ஆடின அதே பொண்ணு அழுதுட்டு நிக்குறா. சங்கிலி அண்ணன் ஏதேதோ பேசி தொட முயற்சி பண்ண ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்  அந்த பொண்ணு அழுறதா நிறுத்தவே இல்லை. அண்ணன் தள்ளாடி தள்ளாடி எதையோ பேசுறார் அந்த பொண்ணு மசியிரா மாதிரி தெரியல. எங்களுக்கு பின்னால யாரோ வருவது போல இருந்தது அதை பார்க்க திரும்பி இந்த பக்கம் திறும்புறதுக்குள்ள அண்ணன் அந்த பொண்ண கட்டி பிடிசுட்டாறு அவ அந்த பிடில இருந்து விலக திணறுரா... நான் வாய எப்போ திறந்தேன் தெரியல திறந்த வாய் மூடாமலே இருக்கு. ஸ்ரீதர் சிரிக்குறான் கொஞ்ச நேரத்துல அண்ணன் அந்த பொண்ணோட சேலைய எல்லாம் இழுக்க ஆரம்பிச்சுட்டார் அவ கஷ்டப்பட்டு மார்ப மறச்சுக்க முயற்சி பண்றா அப்போவும் சங்கிலி விடுறா மாதிரி தெரியல ஒரு கட்டத்துல இனி தப்ப முடியாதுன்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கணும் மார்புல இருந்த கைய எடுத்துட்டா அலுகுரதையும் நிறுத்திட்டா திடீர்னு ஒருபக்க   மார்பு கழண்டு கீழ விழுந்துடுசுச்சு ஆஆஆஆ அதெப்புடி அத என்ன ஒட்டியா வச்சுருக்காங்க இந்த பொண்ணுங்க கழண்டு விழுது ???????? நானும் ஸ்ரீதரும் ஒருத்தர ஒருத்தர் கேள்வியோட பார்க்குறம் பின்னால யாரோ வர்றது தெளிவா கேட்டுச்சு நானும் அவனும் வீட்ட தாண்டி இந்த பக்கம் வந்துட்டம் நல்ல வேளை பின்னால வந்தது சங்கிலி அண்ணனோட பொண்டாட்டி ரதத்துக்கு பின்னால போய் இப்போதான் வர்றாங்க

வந்தவங்க அப்டியே வீட்டுக்குள்ள போனத நாங்களும் பார்த்தோம் அவ்வளவுதான் வீட்டுக்குள்ள ஏதேதோ உடையுற சத்தம் எல்லாம் கேக்குது நானும் ஸ்ரீதரும் அந்த வீட்டு ஜன்னல் பக்கமா போயிட்டம் சங்கிலி அண்ணனுக்கு தர்ம அடி .... எனக்கு சிரிப்பு தாங்க முடியல அந்த பொண்ணு ஓட ஆரம்பிக்க சங்கில அண்ணனோட பொண்டாட்டி அவள் தலை முடிய பிடிச்சு இழுக்க அதுவும் கழண்டு அவங்க கையோட வந்துடுச்சு .... மயிர் போனாலும் பரவாயில்ல உயிர் தப்பிச்சத பெருசா எடுத்தது மாதிரி  அந்த பொண்ணு  ச்சே ச்சே பொண்ணு வேஷம் போட்டிருந்த பையன் விட்டான் பாருங்க ஓட்டம் ஓடுறப்போ இன்னுமொரு பக்க மார்பும் கழண்டு விழுந்துடுச்சு நானும் ஸ்ரீதரும் அந்த இடத்துக்கு போய் பார்த்தோம் ""சிரட்டை""
சிரிச்சு சிரிச்சு வீடு வரைக்கும் போனதே தெரியல அப்பாவும் சங்கில் அடி வாங்குற சத்தம் நிக்கவே இல்லை அடப்பாவி மனுஷா இரண்டு  தேங்காய் சிரட்டைக்காகவா இந்த அடி வாங்குற'???????? ஹி ஹெஈ

4 comments :

  1. அண்ணா பன்னிரண்டு வயசிலயே உங்க ஆளைத் தேடி பார்த்திங்களே......ஓவரா தெரியல...

    ReplyDelete
  2. சில வேளைகளில் கசப்பான நிஜங்களை விட கற்பனைகளே மேலானவை....

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்