Tuesday, July 17, 2012

பில்லா 2

.
அஜித் என்ற மனிதன் மீது வைத்திருக்கும் அர்த்தமே தெரியாத ஈர்ப்பினால் பில்லா இரண்டாம் பாகத்துக்காக காத்திருந்து, முதல் நாள் முதல் ஷோவுக்கு கொழும்பு கான்கார்ட் திரையரங்கத்துக்கு சென்று, அடித்து பிடித்து டிக்கட் வாங்கி கூச்சலும் கும்மாளமுமாக படத்தை பார்த்து, விசில் பறக்க ரகளை பண்ணியது எனக்கு புது அனுபவம் . படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் எதோ ஒரு குறை என்று ஒருத்தன் கமன்ட் அடிக்க நல்லா பாரு மச்சான் படத்துல கதைதான் குறை என்று இன்னொருத்தன் சொல்ல தியட்டரில் விசில் மலை.
கதை

அல்பற்சிநோவின் பழைய படத்தின் கதையை பில்லாவின் முதல் கட்ட வாழ்க்கையாக சொல்லியிருக்கின்றார்கள். படம் sarukkiya இடமே கதை தான். ஆரம்பிக்க போகிறது என்று பார்த்தால் படம் முடிகிறது இன்னுமொன்று எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி இருக்கின்றார்கள். அல்லது சென்சாரில் படத்தின் பாதி குதரப்பட்டிருக்கின்றது அப்படி என்றால் சக்ரியை மன்னிக்கலாம்

அஜித் 


முரட்டுத்தனமான உழைப்பு, நேர்த்தியான நடிப்பு ,பார்வையிலேயே பேசுகிறார் அத்திப்படியை தொலைத்து பக்கம் பக்கமாக பேசியதை விட இரண்டே வரிகளில் திருக்குறள் போல பேசி கைதட்டல்களை அள்ளுகிறார். பில்லாவின் இளைய பருவம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதளவு குண்டாக இருப்பது குறை ,ஆனால் அதை மறைக்கும் விதம் சண்டை காட்சிகள் , அனால் காலை தூக்க சிரமப்படுவது தெரிகிறது. தமிழ் சினிமாவின் மிக அழகான நடிகர் ஸ்டைலிஷான நடிகர் என்றால் அது அஜித் தான் மீண்டும் நிரூபித்திருக்கின்றார்.


 விஜய் உச்சத்தில் இருக்கும்போது அவர் செய்த தவறு திருமலையில் கிடைத்த மாஸ் அங்கீகாரத்தை அப்படியே எல்லா படத்திலும் பிரயோகித்தது.
 ( திருமலை திருப்பாச்சி கில்லி சிவகாசி ஆதி வேட்டைக்காரன் ..........) ஆனால் வெற்றிக்குரிய சமன்பாட்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. அதனால் சறுக்கினார் அஜித் பில்லாவில் கிடைத்த ஸ்டைலிஷ் இமேஜ்ஜை தொடர்ந்து பயன்படுத்தினால் அவருக்கும் சறுக்கல் நிச்சையம் அதை மாற்ற முடியாது மக்கள் வித்தியாசத்தை விரும்புவதை   தல புரிஞ்சிக்கணம்  .ஸ்டான்ட் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும் வான் சண்டை என தல நடிப்பில் அடுத்த லெவலுக்கு போய்ட்டாருங்க தல தல தல .

இசை

யுவன் ஷங்கர் ராஜ இசை
என்றதும்  திரையரங்கம் அதிரும் ஆனால் பில்லா ஒன்றில் இருந்த மேஜிக் இங்கு இல்லை மங்காத்தாவில் இருந்த அசத்தல் இங்கு இல்லை ஏமாற்றிட்டார் .

வசனம்


இரா முருகன் தன அடையாளத்தை பதித்து விட்டார் ஒவ்வொரு வசனமும் ரொம்ப கூர்மை
( ஆசை இல்ல அண்ணாச்சி பசி )

கதாநாயகிகள் 


இரண்டு பேராம் பார்வதியை விட ப்ருணா க்கு வாய்ப்பு அதிகம். கலக்கல் அடிக்கடி நீச்சல் உடையில் வந்தாலும் சூடேறினா மாறி தெரியல, பல இடங்களில் முகம் சுளிக்க வைத்ததனால் கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி ஆபாசம் என்ற எல்லைக்குள் போய்ட்டாங்க சோ......... சாட் .

இயக்கம்

சக்ரி மீது ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. ஆனால் அது எல்லாவற்றையும் சரி பாதியாக முறியடித்திருக்கிறார் அவரிடம் நல்ல திறமை இருப்பது தெரிகிறது. படம் ஆங்கில படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கின்றது. அதன் கலர் டோன் உட்பட அத்தனையும் பார்த்து பார்த்து செதுக்கிய சக்ரி திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் மற்றப்படி சக்ரி தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குனர்.


"மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து ஏமாற்றிய படங்கள் வரிசையில் பில்லா இரண்டாம் பாகத்தையும் அடக்க வேண்டி வரும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் நிஜத்தை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும் ?லாஜிக் பார்த்தால் உலகத்தில் சினிமாவை ரசிக்கவே முடியாது படம் என்பது சந்தோஷப்பட பொழுதை போக்க அவ்வளவுதான் என்பவர்களின் வரிசையில் நானும் ஒருவன் என்பதால் பில்லா எனக்கு பிடித்திருக்கிறது. காரணம் அஜித் என்ற நடிகன் மீது அளவுகடந்த பிரியம் எனக்குண்டு அல்லவா அதுவாகவும் இருக்கலாம் . ஆனால் அஜித் தன திரையுலக வாழ்வில் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்து செய்யும் ஒரு தவறை இங்கேயும் செய்துவிட்டார்.
இன்னமும் தொடர்ந்து செய்கிறார்.படத்தின் கதை தேர்வில் அஜித் இன்னமும் பக்குவம் அடைந்ததாக தெரியவில்லை ,இதனால்தான் அவருக்கு கிடைக்கும் பல பெரிய வெற்றிகளை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

பில்லாவில் மறு அவதாரம் எடுத்த அஜித் ஏகன் , அசல் என்று கதை தேர்வில் சொதப்பி தோல்விபெற மங்காத்த அவரை ரஜினிக்கு அடுத்து என்ற இடத்தில் அசால்ட்டாக உட்கார வைத்தது ஆனால் அந்த வெற்றியையும் அவரால் தக்க வைக்க முடியாமல் போகுமோ என்பதுதான் கவலை."


"மொத்தத்தில் பில்லா இருக்கு  கொஞ்சம் நல்லா அனால் நான்கு நாட்களிலேயே தியட்டர்கள் இல்ல புல்லா........"

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்