Sunday, March 10, 2013

"பரதேசி "பாடல்களும் ..."எரியும் பனிக்காடு" நாவலும்

பாலாவின் "பரதேசி " இன்னும் சில தினங்களில் வெளியாக் இருக்கின்றது. படத்தின் 1st look  இல் ஆரம்பித்து முன்னோட்டம் மற்றும் மேக்கிங் காட்சிகள் என பாலாவின் தனித்துவ முத்திரை தெளிவாய் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் படத்தின் பாடல்களும் வெளியாகியது. எல்லோர் வாயிலும் முனுமுனுக்கும் அளவுக்கு பெரியளவு ஹிட் ஆனது என்று சொல்ல முடியாது இருந்தாலும் பாலா  படம் என்பதால் படத்தின் காட்சிகளோடு அவை வெளிவரும்போது தாக்கம் தரும் என்ற நம்பிக்கை இன்னமும் உண்டு ... பரதேசி படத்தின் கருவாக சொல்லப்படும் red  tea நாவல் (தமிழில் "எரியும் பனிக்காடு ") தந்த விம்மல்களை பரதேசி பாடல்கள் மீள அசைபோட வைத்தது. அந்த பாடல்களும் அது எரியும் பனிக்காடு நாவலில் நினைவு படுத்தும் பகுதிகளையும் இங்கு பதிவிடுகிறேன் .....

1) ஒ...செங்காடே ....

கயத்தாறு கிராமத்தின் பஞ்சத்தினால் வாரக்கணக்கில் நெல்லு உணவு கிடைக்காமல் வாடும் கருப்பன் மற்றும் அவனோடு சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களை அதிகம் கொண்ட கிராமம் . வாட்டும் வறுமையில் இருந்து விமோசனமாக கிடைக்கும் தேயிலை மலை தொழிலை நம்பி கருப்பன் தன மனைவியுடன் கிராமத்தை விட்டு வெளியேறுவான் அந்த காட்சியும் சொந்த மண்ணை விட்டு செல்லும்  போது   அவன் மனம்  வலித்ததையும்   இந்த பாடல் நினைவு படுத்துகின்றது // 

காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங் காடு கடந்து கல்லுதும் மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது 

//கவிப்பேரரசு அவர்கள் 1920 கயத்தாறு வறண்ட பூமியில் வாழ்ந்து விடைபெற்றது போலவே வரிகளை இழைத்திருக்கின்றார் அருமை //

2..)யாத்தே -

கயத்தாறில் இருந்து தோட்ட  தொழிலுக்கு ஆசை வார்த்தை காட்டி கொண்டுவரப்பட்ட கருப்பனும் அவன் மனைவியும் அத்தனையும் பொய் என்பதை கண்டு துவல்கிரார்கள். நரக பசியில் இருந்து உயிர் பிழைக்க வந்த இடமும் கொடூர நரகம் என்பதை உணர்கிறார்கள் ,தினம் தினம் அடி  உதை  என டீ எஸ்டேட்டில் அவர்களும் சக தொழிளார்களும் சக்கையாக பிளியப்படுவர், ஏன் என்று கேட்க முடியாது .தப்பி ஓடவும் முடியாது .ஆடு மாடுகள் போல கொட்டிலுக்குள் சித்திர வதை அனுபவிப்பர் அந்த காட்சியை கண் முன் கொண்டு வரும் வரிகள் //

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை 

3...)அவத்த பையா - .....


பரதேசி பாடல்களில் சிறந்த முறையில் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் பாடல் இது, கயத்தாறு வரட்சியில் ஏழ்மையில், காதலை மற்றும் அது தரும் ஆறுதலை  சொல்லும் பாடலாக எடுக்கலாம் அதுதான் உண்மையும் கூட 

நம்ம பூமி வரண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைந்திருக்கு... 

4..)தன்னை தானே -

தேயிலை தோட்டத்தில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையாக கிறிஸ்துமஸ் பண்டிகை இருக்கும் அந்த நாளில் மட்டும்தான் தொழிலாளர்கள் நிம்மதியாய் இருப்பார் விடிய விடிய கூத்தும் இடம்பெறும் , அந்த காட்சியை நினைவுபடுத்தும் வரிகள் கிருஸ்துவை துதிக்கும் பாடல்


//தன்னை தானே தந்தானை துதிப்போமே
மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போமே
சீரி பாயும் பேரலையை பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம்
ஊற்றேடுத்த ஆற்று மாதின் சாட்சியாக நீ //


மொத்தத்தில் எல்லா பாடல்களுமே எரியும் பனிக்காடு நாவலையும் அது தந்த விம்மல்களையும் அதிர்ச்சிகளையும் மீள நினைவு படுத்தி இன்னும் சில அதிர்ச்சிகளை தந்துவிட்டது எனலாம்.  இதுவரை யாருமே தொடாத தோட்ட தொழிலார்களின் வாழ்கையை சொல்ல துணிந்த பாலாவுக்கு நன்றிகள் ...

//ஆந்தைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெரும் தோலா போச்சே
அது கண்காணி செருப்புக்கு தோதா போச்சே // இது இன்னமும் தோட்டங்களில் மக்கள் படும் அவலம்தான் ....

3 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.... எரியும் பனிக்காடு நாவலினை வாசிக்க ஆவலாக உள்ளது..இந்நாவலின் ஆசிரியர் யார்?

    ReplyDelete
  3. எரியும் பனிக்காடு நாவலோ படமோ, எதயுமே அதிகபடுதிதான் கூருவார்கள்.
    நீங்கள் அனனவரும் இதை பார்வையாளர்களாக பார்கிறீர்கள்./ விமர்சிக்கிர்கள்.

    ஆனால்......

    நான் ஒரு அரசாங்க கல்லூரியில் பேராசிரியராக உள்ளேன்.
    என்னுடய அன்னன் சிங்கபுரில் மென்பொருள் நிருவனததில் பனிபுரிகிரார்.
    இன்னொரு அன்னன் லன்டனில் மருதுவராக உள்ளார்.
    என்னுடய அக்காக்கள் மருதுவர்,பேராசிரியர், தலமையாசிரியர் போன்ற பனிகளில் உள்ளனர்.

    எங்களுடய தாத்தா திரு.தேவசிகமனி அவர்கள், எரியும் பனிக்காடு நாவலில் வரும் வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் 1910 - 1969 வரை பனிபுரிந்தார்.

    வாழவே விடாத சாதி வெறியா ? கடுமையான பனி சூழலா என்பதில் , எங்கள் தாததாவின் சரியான choice எஙகளை முன்னேறியுள்ளது. இது தான் உன்மை.



    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்