Sunday, March 3, 2013

"பூரண மதுவிலக்கு- தலைமுறை கடமை"



பூரண மது விலக்கு சாத்தியப்படுமா? கற்பனையில்  கூட அப்படி நினைக்க முடியவில்லை காரணம் ஒரு நாட்டின் வருவாயில் மிகப்பெரிய வருவாய் அதில் தங்கி இருக்கின்றது , இன்னுமொரு பக்கம் பிரதான உணவுகளில் ஒன்றாகவே மது கலந்து போய்  இருக்கின்றது , நேற்று இரவு "சண் தொலைகாட்சி" இது தொடர்பாக ஒரு சிறப்பு விவாத நிகழ்ச்சியை செய்திருந்தது  விவாதத்தில் பங்கு கொண்டவர்களில் ஒரு முகம் என்னை நிகழ்ச்சி பால் ஈர்த்தது    அந்த முகம் எழுத்தாளர் சாருவினுடயது , மனிதன் கண்டிப்பாக விவகாரமாக எதையாவது சொல்வார்  என்ற நம்பிக்கையில் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்தேன் .....

எதிர்பார்த்தது போல சில விவகாரமான கருத்தக்களை  சாறு நிவேதிதா  முன் வைக்க லாவகமாக முகத்தில் கறியை பூசிக்கொண்டார். குடிப்பதற்கும் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக சொல்லி, அதை நிருவப்போய் பலரிடம் மூக்குடைப்பட்டார்,  பதில் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி பிரதிநிதி நல்ல ஆளுமையான கருத்துக்களை முன்வைத்தார், குடி என்பது ஒரு வியாதி எல்லா பாரதூரமான பிரச்சினைகளுக்கும் அடிப்படையில் போதைதான் அமைந்திருக்கின்றது. இது குடிக்கும் ஒவ்வொருத்தருக்கும் தெரியும் ( எனக்கும் தெரியும் ) நாம் செய்யும் காரியத்திற்கு நாமே பொறுப்பு சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைமையை குடி கொண்டு தருகிறது

..இது ஒரு பக்கம்.  ஒரு நாட்டிலோ அல்லது சுயமான ஆட்சியுடைய ஒரு மாநிலத்திலோ பூரண மது விலக்கு  சாத்தியப்படுமா என்றால் அது கண்டிப்பாக கனவுதான் அல்லது ரொம்ப கடினமான வேலை ,ஆனால் ஒன்று மட்டும் உண்மை பூரண மது விலக்கை  தமிழகத்தில் கோருபவர்கள் சொல்லும் "அமுல்படுத்தல் முறை" கண்டிப்பாக ஏற்புடையது. அதேதான் சாருவும் சொல்கிறார்.. ஒரு வழிப்படுத்தல் வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் அதனூடாக பூரணமான மது விலக்கை நோக்கி செல்ல வேண்டும் .

இது விடயத்தில் இலங்கை பல வகையில் முன்னணியில் இருக்கின்றது 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது மற்றும் புகையிலை சார்ந்த எந்த பொருளும்  விற்பனை  செய்வது
பூரணமாக தடை செய்யப்பட்டுள்ளது , பொது இடங்களில் குடித்தாலோ சாராயக்கடை முன்றலில்  குடிப்பதோ , சிகரட் அடிப்பதோ   , குடிக்கும் மற்றும் புகைக்கும் காட்சிகள் ஒளிபரப்பபடுவதோ தடை செய்யப்பட்டுள்ளது ... 9 மணிக்கு மேல் சாராயக்கடைகள் திறக்க முடியாது , பண்டிகை நாட்களில் சாராயக்கடைகள் கண்டிப்பாக மூடப்படும் ...

பூரண மதுவிலக்கு வேண்டுமா? இல்லையா? என்றால் கண்டிப்பாக வேண்டும். காரணம் அது தலைமுறை கடமை குடி என்பதே அந்நியமானதாக நம் அடுத்த தலைமுறை நினைக்க வேண்டும் அல்லது குடி என்று ஒன்றே அவர்களுக்கு தெரியாததாக ஆக்க வேண்டும் எனில் கண்டிப்பாக  மதுவை தடை செய்ய வேண்டும். ஒரு போதைப்பொருளை கண்டு அஞ்சுவது போல் மதுவை கண்டு அஞ்சுமாட்போல் செய்ய கண்டிப்பாக மதுவை தடை செய்ய வேண்டும் அது நம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் கடமை  .....குடிக்க யோசித்த காலம் போய் இப்போ குடிக்குறதுக்கு   யோசனையா? என்று கேட்கும் காலத்தை பார்க்க   பயமாக இருக்கின்றது

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்