Wednesday, November 21, 2012

கிளிநொச்சி


கிளிநொச்சி வயல் வெளிகளும் கண்ணீர் ததும்ப ததும்ப மூக்கிலிருந்து நீர் வழிய வழிய சாப்பிட்ட நாட்டு கோழியும்,காலை  இளம் வெயிலில்  தோகை  மயிலும் , யுத்தம் விட்டுசென்ற தடயங்களையும் அதை நம் மக்கள் மிக இயல்பான ஒன்றாக திரும்பி பார்பதையும் என்னவென்று சொல்ல? யாழ் சென்றது மூன்றாவது முறை அனால் கிளிநொச்சி மண்ணில் அதிக நேரம் செலவிட்டது இதுதான் முதல் முறை ( நன்றி கிருஷாந்தன் ) .

"செல்வந்த வீடாத்தான் இருந்துச்சுது தம்பி 
செல் வந்ததால இப்படி ஆயிட்டுது "  என்று ஒரு பெரியவர் சொல்லி  குமுறி குமுறி சிரித்தார் !!!
என்னால் சிரிக்க முடியவில்லை ...

யுத்த நேரத்தில் விழுந்த செல்களின் மிச்ச இரும்புகளில் பூக்களை வளர்த்து நீரூற்றுகிரார்கள். 
உயிர் பறிக்க வந்த இரும்பில்   ஒரு உயிரை "பூக்க வைக்க"  என் மக்களுக்கு  யாரும் கற்றுக்கொடுக்கவில்லை அது ரத்தத்தில் ஊறியிருக்கின்றது. 

யுத்தத்தையும் அது பல தலைமுறைகளுக்கு நினைவாக விட்டு சென்றுள்ள  ரணங்களை கூட நம் மக்கள் எவ்வளவு இயல்பாக நகைச்சுவை உணர்வோடு மீட்டு பார்கின்றார்கள் .....



( (கிளிநொச்சியில் நண்பர்களுடன் சுட்டது )

3 comments :

  1. Your feeling?
    ut you write nice anna.
    Yathusha
    Jaffna

    ReplyDelete
    Replies
    1. wishes to write more.
      Yathusha
      Jaffna

      Delete
  2. ’உயிர் பறிக்க வந்த இரும்பில் ஒரு உயிரை "பூக்க வைக்க" என் மக்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை அது ரத்தத்தில் ஊறியிருக்கின்றது.’
    மிகவும் சிறந்த வரிகள் அண்ணா........எம் உயிரைப் பறிப்பவனைக் கூட உபசரிப்பவர்கள் தான் எம் மக்கள்.........அதில் சந்தேகம் இல்லை......

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்