Thursday, May 31, 2012

வித்தக கவிஞன் "பா.விஜய்" அவர்களுடன்
அமரத்துவம் மிக்க இரண்டு நாட்கள்


இரண்டு முக்கிய நிகழ்வுகளை அண்மையில் சந்தித்தேன்.
 முதலாவது சந்தோசமானது ,இரண்டாவது கொஞ்சம் கவலை
தரக்கூடியது. முதலாவதுசந்திப்பு இரண்டாவது பிரிவு ஆனால்
இரண்டுமே வேறு வேறு மனிதர்களால்.


சந்திப்பு


வித்தக  கவிஞன்  பா விஜய் அவர்கள் எங்கள் வானொலிக்கு வந்திருந்தார். ராஜ ராஜ சோழன் சரித்திர தொடரில் நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பல மாத முயற்சியின் பின்னர் பா விஜய் அவர்களை அழைத்து வந்தவர் அண்ணன் ராஜ்மோகன் அவர்கள். ( இதற்காக அவர் போராடாத போராட்டமே கிடையாது அதை பற்றி பேசுவது
 உசிதம் அல்ல ) ஆனால் முழுமையாக பா விஜய் அவர்களுடன் இரண்டு நாட்கள் நேரத்தை செலவழிக்க கிடைத்தது.
என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நொடிகள் அவை அமரத்துவமான நிமிடங்கள் அவை நீண்ட நாட்களுக்கு பின்னர் பயனுள்ள சில மணித்தியாலங்கள் அவை . ரொம்ப இயல்பாக எளிமையாக அவர் பழகிய விதம் எல்லோரையும் கவர்ந்தது அவருடன் நடித்த    ஈழத்து மூத்த நாடக கலைஞர்கள் எல்லோருடனும் அவர் பழகிய விதம் ரொம்ப எளிமை.   


அவ்வளவு பெரிய இமேஜ் உள்ள ஒரு கலைஞன் எவ்வளவு எளிமையாக பழகியது ஆச்சர்யமாக இருந்தாலும் அவர் ஏன்
 இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தார் என்பதற்கு அவரின் 
எளிமையே பதில்.
(ஏற்கனவே எனக்கு பிடித்த இரண்டு பாடகர்கள் தென்னகத்தில் இருந்து  எமது கலையகம் வந்திருந்தனர் அதன் பின்னர் அவர்களின் பாடல்களே பிடிக்காமல் போனது அவ்வளவு அடம்  ) நிறைகுடம் எப்போதும்  தளம்பாது
  அவரிடம் பேச கிடைத்த சந்தர்ப்பத்தில் என்ன  எல்லாம் கேட்கலாம் என்று   மனதில்  நினைத்தேனோ அத்தனையும் மறந்துவிட்டு என்னெல்லாமோ கேட்டுவிட்டேன். ஆனால் தேவையான அளவு படங்கள் மட்டும் மாறி மாறி எடுத்துக்கொண்டேன் இனி அதை நான் என் வாழ்க்கை முழுவதும் பொக்கிஷமாய் வைத்திருக்கப்போவதாயிற்றே. ( படங்கள் நன்றி- அகிலா ) எங்கள் வானொலியின்
இசை அமைப்பு பணிகள் செய்பவரும் இசையமைப்பாளருமான பிரஜீவ் இன் மெட்டை கேட்கும்போதே வரிகளை எழுதிக்கொடுத்தார் ( பொட்டபுள்ள பொட்டபுள்ள பொசுக்குனு போறியே  ... என்ற  ஆரம்ப வரிகள் ) அதை அவர் எழுதிய வேகம் மெய் சிலிர்க்க வைத்தது. வாழ்வில் மறக்கவே முடியாத பொழுதுகளை தந்த மதிப்பிற்குரிய திரு பா விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
  



1 comment :

  1. ரொம்ப கவலையாக இருக்கிறது அண்ணா,”வாழ்க”கூட சொல்ல வாய்ப்பு தரவில்லையே என்று சொன்னது...ஆனால் உங்களின் ஏக்கத்திற்கு ஒரு முடிவு நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் இருங்கள் அண்ணா..இனியாவது ஒரு வாய்ப்பு வரும். எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்