Saturday, June 11, 2011

ரஜினி ரஜினிதான்

"ரஜினிகாந்த அவர்கள் நலம் பெற உலகம் முழுவது நடந்த பிரார்த்தனைகள் கைகொடுத்துள்ளது விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார் ரஜினி நான் அதிகம் படிக்கும் ஒரு இணையதளமான என் வழி இணையத்தில் எனக்கு ரொம்ப பிடித்த ஒரு ஆக்கத்தை இங்கு உங்களுக்காய் தருகிறேன் வெளி உலகத்திற்கு நல்லவர்களாய் காட்டிக்கொள்ளும் பலர் யோசிக்காமல் பட்டென சொல்லும் பதில்கள் அவர்களின் உண்மையை காட்டிவிடும் இந்த செவ்வியில் ரஜினி அவர்கள் சட்டென சொல்லும் பதில்களிலும் அவரின் நிதானத்தை பாருங்கள் உண்மையிலேயே ரஜினியை பலர் வழிகாட்டியாக ஏற்றுகொண்டதில் தவறேதும் சொல்வதற்கில்லை"


இதுவும் ஒரு ஃப்ளாஷ்பேக்தான்… 1981- பிப்ரவரி மாதம், திருமணமான புதிதில், கணவர் ரஜினியை மனைவி லதா பேட்டி எடுப்பதுபோல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது.

ஒருபேட்டி எடுக்கப் போய்தான், ரஜினியின் மனதைக் கவர்ந்து மனைவியானார் லதா என்பதால், திருமணத்துக்குப் பின் இன்னொரு பேட்டி எடுக்க வைத்தார்கள் போலிருக்கிறது.

ரஜினி, லதா இருவருமே இதற்கு உற்சாகமாக சம்மதித்தனர்.

அப்போது, லதா கேட்ட கேள்விகளும் ரஜினி அளித்த பதில்களும் இதோ:

லதா: நீங்கள் எனக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகையை மணந்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்?

ரஜினி: சினிமா நடிகையும் ஒரு பெண்தானே!

லதா: படப்பிடிப்புக்குப் போய்விட்டு வீடு திரும்பும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

ரஜினி: எனக்கு என்ன தோன்றும் என்று உனக்குத்தான் தெரியுமே! எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?” (‘வேண்டாம்’ என்றார், லதா வெட்கத்தோடு)

லதா: ‘ஏன் கல்யாணம் செய்து கொண்டோம். பிரம்மச்சாரியாக இருந்திருக்கக்கூடாதா’ என்று எண்ணியதுண்டா?

ரஜினி: உன்னோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும்போது, கல்யாணத்தை எவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று வருத்தப்படத்தான் தோன்றுகிறது.

லதா: வசதியான வீடு, மனத்திற்கேற்ற மனைவி, சினிமாப்புகழ் இந்த மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?

ரஜினி: என் தனித்தன்மையை.

லதா: என்னிடம் இதுவரை சொல்லாத ரகசியமோ, மறைத்து வைத்த விஷயமோ உண்டா? இருந்தால் ஏன் சொல்லவில்லை?

ரஜினி: என்னிடம் எந்த ரகசியமும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட நீயே இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே, நியாயமா?

லதா: ஒரு மனைவியின் முதல் குழந்தை கணவன் என்கிறார்களே, அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

ரஜினி: என்னைப் பொறுத்தவரை ஒப்புக்கொள்கிறேன்.

லதா: குடும்ப வாழ்க்கையில் என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எது அடையாளம்?

ரஜினி: நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதுதான் அடையாளம்.

லதா: ஒரு பிரபல நடிகரின் மனைவியாகிய எனக்கு, உண்மையான மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது?

ரஜினி: என்னுடைய மகிழ்ச்சியில்.

லதா: என்னைப் போலவே யாராவது டெலிபோனில், ‘நான்தான் லதா பேசுகிறேன்’ என்று சொன்னால் நீங்கள் நம்பிவிடுவீர்களா?

ரஜினி: என் ஜில்லுவின் குரல் எனக்குத் தெரியாதா என்ன?

லதா: மனம் விட்டுச் சொல்லுங்கள். என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எது?

ரஜினி: முன்பின் தெரியாமல் எல்லோரிடமும் கருணை காட்டுவது!


-நன்றி என் வழி குழுவினர் மற்றும் திரு. வினோ -

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்