Friday, February 11, 2011

நந்தலாலா



நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வு கண்மூடி தியானம் செய்தது போன்றிருந்தது படம் முடியும் போது. பல இடங்களில் அனாயசமாக சமூகத்தை சட்டை பிடித்து கேள்வி கேட்கும் மிஷ்கின் தமிழ் சினிமாவின் வருங்காலம் ..... நமக்கு தெரிந்த வாழ்க்கையின் நியதிகள் நம்மாலேயே உருவாக்கப்பட்டவை என்றாலும் சேர்க்கப்பட்ட வரம்புகளை மீறமுடியாத மடமைகளுக்கான தீர்வும் எம்மிடமே இருக்கின்றது தாய்மைக்குள்ளும் கபடம் இருக்கின்றது என்று நான் சொன்னால் காரி உமிலப்படுவேன் என்பது எனக்கு தெரியும் ...தெரிந்தும் சொல்லியிருக்கும் மிஷ்கினின் தைரியம் தைரியம்தான்

நிற்க ...

தப்பான ஒரு பெண் இருக்கலாம் தப்பான ஒரு தாய் இருக்கமுடியாது ஒரு சமூகத்தில் காதல் படம் தோற்கலாம் , அடிதடி படம் தோற்கலாம் , நகைச்சுவை படம் தோற்கலாம் .... தாய்மையை மையப்படுத்திய படம் தோட்ககூடாது தோற்றால் அந்த சமூகம் மோசமான நிலையில் இருப்பதையே அது உணர்த்தும்

நந்தலாலா தாய்மையை மையப்படுத்திய தோல்விப்படம்

2 comments :

  1. //நந்தலாலா தாய்மையை மையப்படுத்திய தோல்விப்படம் //

    என்னையா சொல்றீங்க படம் நல்லா இருக்குன்னு சொன்னாங்களே....

    ReplyDelete
  2. 'வருகைக்கு நன்றி தொடர்ந்து உங்கள் கருத்துக்கள் நட்சதிரவீதியை செப்பனிடும் ' ... படம் கவனமாக செதுக்கப்பட்ட அழகான சிட்பத்திட்கே ஒப்பிடலாம் அவ்வளவு அருமை வணிக ரீதியில் தோல்வி என்றேன் ... சமூகம் மோசமான நிலையில் இருக்கிறது என்றேன்

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்