இந்த வருடத்தின் முதல் கவிராத்திரியில் என் கவிதை முழக்கமும் உலகெங்கும் சக்தி கொண்டு சென்றது வாய்ப்பளித்த சக்தியின் பிரதான தயாரிப்பாளர் ராஜ் மோகனுக்கு மற்றும் என் கவிக்குழந்தையை சீராக வளர்க்க பொருப்பெடுத்திருக்கும் அத்தனை சக்தி ரசிகர்களுக்கும் கவிராத்திரியின் அவை முதல்வர் சடாகோபன் ஐயாவுக்கும் நன்றிகள்
கவிராத்திரி ஞாயிறு இரவு 10 மணிக்கு உங்கள் சக்தியில்
காலமே உனது கணக்கை நிறுத்து
காலமே நீ எங்களுக்கு யார் ?
காலம் காலமாய் காலம் ஒதுக்காமல் கேட்கிறேன்
காலமே நீ எங்களுக்கு யார் ?
நியாயம் இன்றி நீதி வழங்குகிறாய்
நயவஞ்சகனா நீ ?
உன்னை கடந்து சிந்தித்தால் தண்டனை பரிசு
உன் கணக்கிலிருந்து
கயவனா நீ ?
எதிலும் நிறைந்திருக்கிறாய்
எங்கும் பரந்திருக்கிறாய்
காற்றிலும் நேற்றிலும் செறிந்திருக்கிறது உன் கணக்கு
எல்லைகள் மீறப்படும் போதும்
தொல்லைகள் விஞ்சப்படும் போதும்
தர்மத்தை அழித்து கோரப்பட்களுடன்
சிரிக்கும் தூய மகராசர்கள்
அதர்மத்தை சிரத்தில் சுமக்கும் போதும்
தன்னம்பிக்கை அற்ற என் பரிதாப மனிதர்கள்
அவர்கணக்கை உன் கணக்கில் கண்ணீருடன் நிலையான வைப்பிளிடுகின்றனர்
அப்படியானால் நீ கடவுளா ?
அல்லது அவன் கணக்கே நீதானா?......
காலமே கடவுளா நீ ?
அல்லது அவன் போடும் கணக்கே நீதானா ?
புரியவில்லை எனக்கு உன் பெயர்
தெரியவில்லை எனக்கு உன் கணக்கு
வந்து போன தடங்களை அழித்து
வெந்த மனிதர் கதைகளை ஒழித்து
கனவுடன் திரிந்தால் முகம் சுழித்து
நெருப்பில் கிடந்தாலும் உனக்கு நெஞ்சம் உருகா
கொடூரனா நீ ...?
நெஞ்சம் உருகா கொடூரனா நீ ?...
பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளையும்
மன வீடு புக நேற்றுதான் தயாரான இழனங்கைகளையும் சித்திரைமாதம் எப்படியும் முகத்திரை காட்டிவிடலாம்
என்று 6 மாதம் குடத்தில் உயிர்காத்த குறை உயிர் சிசுவையும்
விட்டுவைக்காமல்
காலால் மித்தித்து, மார்புகளை வெட்டியும் , வயிற்ரை கிழித்தும் உயிர் பிடுங்கியவனை பார்த்து பொறுமையாக இருக்க சொல்கிறாய்
நீ என்ன பேடி பயலா ...?
காலமே நீ யார் எங்களுக்கு ?
தெரியாமல் கேட்கிறேன்
என்ன செய்திருக்கிறாய் நீ எங்களுக்கு?
எங்களின் எதை நிரப்புவதட்காய் உனக்கொரு கணக்கு ?
நீயாக கூடி வரும்வரி காத்திருந்த என்
பரம்பரையும்
நாளாக நாளாக நோய் கொண்டு மாண்டனர்
உன்னை மீறி உன் கணக்கை உலுக்கி
உனக்காய் காத்திருந்தவரை உயிரோடு மண்ணில் கருக்கி
சிரித்து நிற்பவர்கள் உன் தயவிலேயே மீண்டுக்கொண்டிருக்கின்றனர்
தெரியாமல் கேட்கிறேன்
என்ன செய்திருக்கிறாய் நீ எங்களுக்கு?
எங்களின் எதை நிரப்புவதட்காய் உனக்கொரு கணக்கு ?
ஆயிரம் ஆயிரம் மாந்தர்களும்
இன்று விதவை கோலம் கொண்ட தெய்வங்களும்
உயிர் பெறுமதி வேண்டாம் என்ற தங்கங்களும்
வாழ்த்தென்ன வீழ்ந்தென்ன வெறுமைதானேபரிசாய் தந்தாய்
30 ஆண்டு கடத்தி வெறுமையை தானே
பரிசாய் தந்தாய்
ஏன் என் இனம் உனக்கு ஈனமா?
என் இனப்பிரவிகள் உனக்கு ஊனமா ?
நூறாண்டு என்பது உன் கணக்கு படி
சொற்பமாய் இருக்கலாம்
முப்பதாண்டு என்பது உன் கணக்குப்படி
அற்பமாய் இருக்கலாம்
மாடுகளை அடைக்கும் கொட்டில் போன்றதொரு மடம்
எங்கள் வாழ்விடம்
அகலமாய் கை விரித்து சோம்பல் முறிக்க முடியாது
எங்கள் உறைவிடம்
உடுத்தி உடுத்து கிழிந்துபோன துணியும்
இரும்புப்பெட்டிக்குள் பழைய மனிதர்களின் உருவப்படங்களும்
மாதமானால் சம்பளம் வாங்கும் பட்டியலின் பொலுத்தீன் உரையையும் தவிர
நூறாண்டுகளில் நீ தந்த பொங்கலும் இல்லை
உன் கணக்கு தந்த இனிப்பும் இல்லை
ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து
கொளுந்துபரிக்கும் என் குல மங்கைகள் உன் குரல்வளை நெரிக்க விரைந்துவருகின்றனர்
ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து
நீ ஈனம் என்றெண்ணிய என் இன மாந்தர்கள் வெறியோடு உன்னை எதிர்த்து தீ மிதிப்பார்
நீ ஊனம் என்றெண்ணிய என் இன இனப்பிறவிகள்
ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து
நூறாண்டுகளுக்கு முன்னாள் உன்னை காலால் எட்டி மிதித்த என் மீசைக்கார முப்பாட்டன்
பாரதி மீது ஆணை ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து
very good
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே தொடர்ந்து உங்கள் விமர்சனங்கள் நட்ச்சத்திரவீதியை செப்பனிடும்
ReplyDelete