Wednesday, January 26, 2011

கமலின் அங்கலாய்ப்பும் ரசிகனாக என் மனதும்

சில நேரங்களில் புகழ் பணம் தகுதி அத்தனையும் மீறி சில வார்த்தைகள் நம்மை நாமிருக்கும் இடத்திலிருந்து அப்படியே தூக்கி எறிந்துவிடும் ' எம். எஸ் . வீ ., இளையராஜாவுக்கு பிறகு தமிழிசையில் தனியான ஒரு இடம் இன்னமும் யாரும் பெறவில்லை ,அந்த இடம் தேவி ஸ்ரீபிரசாத் க்காக காத்திருக்கிறது' மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டில் கமல் சொன்னது இந்த கருத்து



ரகுமான் மீது அவருக்கு இருக்கும் "காண்டை" இப்படி தீர்க்க முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் .... தமிழ் இசையுலகின் மூன்றாவது தலைமுறையின் கடைசிபகுதியையும் நான்காவது தலைமுறையின் தொடக்கபகுதி தொடங்கி இப்போ வரைக்கும் சந்தேகம் இல்லாமல் ஆட்சி செய்வது இசைப்புயல்தான் என்ற உண்மை சராசரியாக ஒரு பாமரனுக்கும் புரிந்த உண்மை உலகறிந்த மேதை சொல்கிறார் என்பதற்காக அது பொய்யாகுமா என்ன?



உண்மையில் மெல்லிசை மாமன்னர்கள் என்று சொல்லப்படும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் ஆட்சியை மேற்கத்திய பாரம்பரிய இசை வடிவங்களை கிராமத்து இசையோடு இணைத்து தந்த பண்ணை புறத்து புல்லாங்குழல் முடிவுக்கு கொண்டுவந்ததிலும் பார்க்க இசை புயலின் மேற்கத்திய இசை வடிவங்களை கொண்ட இசைபுரட்ச்சி முழுக்க முழுக்க மாறுபட்டது "அன்னக்கிளி உன்னை தேடுது" பாடல் ஏற்படுத்திய புரட்சியின் தாக்கம் தமிழிசை ரசிகர்கள் வீரியத்துடன் உணர்ந்தார்கள் என்றால் "சின்ன சின்ன ஆசை" பாடல் ஏற்படுத்திய தாக்கம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது அன்று தொட்டு இன்று இந்த பதிவிடும் வரை ரகுமான் ஆட்சி சந்தேகம் இன்றி தொடர்கிறது



கமல் என்ற மாமனிதர் இப்படி தன்னுடைய கோபத்தை காள்புனர்ச்சியை சில்லறைத்தனமாக கொட்டுவார் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். மெல்லிசை மாமன்னரையோ, இளையராஜா என்ற மாமேதையய்யோ மலிவான ஒபபிடுதலுக்குள் நான் கொண்டுவர நினைக்கவில்லை அப்படியொரு பாமரத்தனமான கேவலத்தயும் நான் செய்யப்போவதில்லை அவரவர் தலைமுறைக்கு அவரவரால் செய்ய வேண்டியவற்றை சந்தேகமின்றி எட்டாத அளவுக்கு செய்து முடித்திருப்பதைப்போல ரகுமான் அவர்கள் செய்து கொண்டிருக்கு காலம் இது அப்படியானால் கமலின் இந்த கருத்து எப்படியானா ரகத்துக்கள் அடக்கப்படவேண்டும் என்பதை புரிந்துகொள்ளலாம்
இசைப்புயல் ரகுமான் அவர்கள் ஒஸ்கார் வெற்றி பெற்றபோது இந்தியாவின் பிரபல செய்தி சேவை NDTV இப்படி செய்தி சொன்னது ( இன்னமும் நினைவில் இருக்கிறது ) "ரகுமான் ஒஸ்கார் வென்றார் சென்னையில் கொண்டாட்டம்" செய்தியை தொடர்ந்து கமலிடம் செய்தி சேவை தொடர்புகொண்டபோது அவர் சொன்ன கருத்துக்குள் முழுமையாக தெரியும் கமலுக்கு ரஹுமான் மீது இருக்கும் காண்டு , அல்லது ஒவ்வாமை அல்லது பொறாமை .... அதுவரை ஒஸ்கார் என்பது தமிழனுக்கு சாத்தியமானால் அது கமலினால் என்ற கருத்து அவர் வாழ்நாளிலேயே தவிடு பொடியாவதை பொறுத்துக்கொள்ள முடியாத வெறுப்பை அவர் கருத்துக்களில் காணலாம் மேற்படி செவ்வியில் ஒஸ்கார் என்பது உச்சம் அல்ல என்பதில் அவர் அடம்பிடித்திருப்பார் இதே கருத்துதான் அமிதாப்பிடம் இருந்தும்



இனி கமலின் கருத்தை ஆழமாய் பார்ப்போம் அதாவது தேவி ஸ்ரீபிரசாத் என்ற திறமை ரகுமானோடு எந்த வகையிலும் ஒப்பிடமுடியாது ஒப்பிடப்படவும் கூடாது அப்படி ஒப்பிட தேவி ஸ்ரீபிரசாத் செல்லவேண்டிய தூரம் கொஞ்சம் நெஞ்சமல்ல ஒரு பாடலின் சாயல் எந்த வகையிலும் அடுத்தபாடலில் வராமல் பார்த்துக்கொள்வது ரகுமானுக்கே உரிய சிறப்பு அவரின் ஒவ்வொரு பாடலுமே ஒரு புரடச்சி தேவி ஸ்ரீபிரசாத் இதுவரை இசையமைத்த தமிழ் படங்கள் அத்தனையிலும் ஒரு பாடலாவது முதல் பட பாடலை தழுவியிருக்கும் இவ்வளவு ஏன் கமல் அங்கலைத்திருக்கும் மன்மதன் அம்பு பாடல்களிலும் புதுமை எதுவும் இருப்பதாக தெரியவில்லை அவை மக்கள் மத்தியில் பாரியளவு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை "ஹூஸ் தீ ஹீரோ" பாடல் சாயலை கிட்டத்தட்ட தேவி ஸ்ரீபிரசாத் இன் அத்தனை படங்களின் ஏதாவது ஒரு பாடலில் கேட்கலாம் 'உனக்கும் எனக்கும்' படத்தில் வரும் "லப் டப் -லப் டப்" சொல்லும் சம்திங் நல்ல உதாரணம் மன்மதன் அம்பு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவும் இல்லை



கமல் ரகுமானுக்கு உரிய இடத்தை மறுக்க முயற்ச்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது , இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கமலின் இந்த கருத்து தொடர்பாக ஆனந்த விகடன் தமிழ் இசையமைப்பாளர்களிடம் ஒரு கருத்து சேகரிப்பை நடத்தியருந்தது யாருக்குமே ரகுமானின் சிம்மாசனம் தொடர்பாக அக்கறையே இல்லை அல்லது யாருமே கமலுக்கு எதிராக கருத்து கூற தயாரில்லை எல்லாவற்றையும் தாண்டி நான்காவது தலைமுறையின் வெற்றிகளை சுமந்து கொண்டு இன்னும் பல தலைமுறையின் இசை மகுடங்களை சுமக்க அடுத்த ஒஸ்காரின் விளிம்பில் நிற்கிறார் நம் இசைப்புயல் கண்டிப்பாக அவர் மீண்டும் ஒஸ்கார் மேடை ஏறுவார் ஆனால் அப்போதும் நம் தமிழன் அவருக்கு உரிய இடத்தை கொடுப்பார்களா என்பது மட்டும் கேள்விக்குறியே

5 comments :

  1. தமிழன் தமிழன் என்று ஆப்பு அடிபதுதானே
    இப்போ பரவலா நடக்குது ,அதில் .நிங்களும்
    ஒருவரே ..................

    ReplyDelete
  2. முதலில் நான் ரகுமான் ,கமல் இரண்டு பேருக்கும் ரசிகை ஆனால் கமலின் கருத்து எப்படி இருந்தாலும் அதனால்
    ரகுமானுக்கு அவரின் இசை பயணத்துக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது . நீங்கள் கமலை ஒரு மா மனிதராக பார்ப்பதால் தான்
    இவ்வளவும் தோன்றி இருக்கிறது . கமழும் ஒரு சாதாரண மனிதர் தான் . நமக்கு ஒருத்தரை பிடிக்காவிட்டால் அவரை பற்றி அவதூறு
    சொல்வது சாதாரணமா நடக்குறது தான் . ஆனாலும் கமல் ரகுமானை பற்றி அவதூறாக எதுவும் சொல்லல . மாறாக அவரை பாராட்டவும் இல்லை . இது கமலின் தனிப்பட்ட ஒரு கருத்தா இருக்கலாம் . அதற்காக தேவிஸ்ரீ பிரசாத் ஒரு இசை அமைப்பாளரே இல்லை என்ற அளவுக்கு
    பேசுவது வருந்ததக்கது . மீண்டும் சொல்கிறேன் நான் கமல் ,ரகுமான் இருவருக்கும் ரசிகை தான்

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி வைஷ்ணவி ...என் கருத்துக்களின் ஆழத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் அல்லது என் எழுத்துக்கள் அப்படி தவறாக புரியவைத்துள்ளது தேவி ஸ்ரீபிரசத்தை ரகுமான் உடன் ஒப்பிடக்கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர அவரை இசையமைப்பாளரே இல்லை எப்று எங்குமே நான் சொன்னதில்லை ...தவிர கமல் சராசரி மனிதனை தாண்டிய அற்புதம் அவரிடம் இப்படியொரு கரும்புள்ளி இருந்தது என்பதே என் ஆதங்கம் தவிரவும் ரகுமானின் இடத்தை அவர் மறைக்க முற்படுவது வரலாட்ட்று தவறு ஈழத்தில் எங்கள் தமிழர் அடையாளங்களை அழிப்பதுபோன்றது தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும் அபாரஞ்சிக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி சுப்ரா ..நான் தமிழனாக வளராவிட்டாலும் தமிழனாக் பிறந்தவன் அந்த ரத்தம் ஓடும் வரை நித்தம் எழுதுவேன் இது போன்று

    ReplyDelete
  5. அப்படி பார்த்தால் யாரையும் யாருடனும் ஒப்பிடக்கூடாது . காரணம் ஒவ்வொரு மனிதனுமே தனித்துவம் மிக்கவர் தான் .
    ரகுமான் ஒரு திறமை என்றால் தேவிஸ்ரீ பிரசாத் இன்னும் ஒரு வகை . கமல் சாதாரண மனிதரையும் தாண்டியவர் என்ற கருத்தை
    தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது . கமல் ஒரு மாபெரும் நடிகர் . ஆனாலும் அவருக்குள்ளும் எல்லா மனிதருக்கும்
    தோன்றக்கூடிய சாதாரண ஆசா பாசங்கள் , விருப்பு வெறுப்புகள் இருக்கும் தானே ? அதை எந்த ஒரு விதத்திலும் பிழை என்று கூற முடியாது
    அதோடு இங்க அவர் தேவி ஸ்ரீ பிரசாத்தையும் ரகுமானையும் ஒப்பிடவில்லையே . அவரின் கணிப்பில் இளையராஜா . எம் .எஸ் .வி யை தொடர்ந்து நல்ல இசை அமைப்பாளர்கள் இல்லை என்பது கருத்தாகலாம் .ரகுமான் திறமையானவர் என்பது உலகறிந்த விடயம் தானே

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்