Tuesday, January 11, 2011

அகவை 71 இல் தேவதூதன் ...



ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறை முன்னுதாரணமாக கொள்வதென்பது எங்களுக்கு முன்னைய தலைமுறையிலேயே முடிந்துவிட்டதோ என்று சில நேரங்களில் தோன்றும் அது கோமாளித்தனமான எண்ணமாக கூட இருக்கலாம் மறுப்பதற்கில்லை ஆனால் நான் சொன்ன கூற்று உண்மையாகும் பட்சத்தில் அதன் விளைவுகள் நன்மையாகவும் அமையும் தீமையாகவும் அமையும்

ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறை பின்பற்றும்போது புதியன இல்லாமல் போவது தீமை , ஆனால் தலைமுறைகளை தாண்டி மனதை கவர்பவர்கள் சொற்பமாய் இருந்தாலும் பொக்கிஷங்கள். கடந்த 10 ஆம் திகதி அப்படி ஒரு தங்கம் பிறந்தநாளை கொண்டாடியது எல்லோருக்குமே தெரியும் மூன்றாவது தலைமுறையிலும் தன் குரலால் பலரை கட்டிப்போட்டிருக்கும் இந்த மலையாள தேசத்து தேவதூதன் தமிழில் குடிபுகுந்த அல்ல அல்ல தமிழன் மனதில் குடிபுகுந்த அற்புதம்

ஒரு காலகட்டத்தில் மலையாள இசை உலகின் இரும்புக்கதவு இவர்தானாம் தற்போதைய இசைப்புயலின் தந்தை மலையாளத்தில் பாடும் நிலாவையும் இன்னுமிதர பாடகர்களையும் அங்கு அறிமுகப்படுத்த முன்னர் இவர் குரலை மீறி ஒரு குரலுக்கு மலையாள வீடுகளில் அனுமதியே கிடையாதாம் ... இப்பொழுதும் இவர் மலையாளிகளின் வாழ்கையின் ஒரு அங்கம்

தமிழில் விருது என்ற அளவுகோலுக்குள் இவர் அடக்கப்படாமைக்கு என்ன காரணம் என்பதுமட்டும் புரியவில்லை ஆனால் "வெள்ளைப்புறா ஒன்று" பறக்காத வீடுகளும் ,ஈரமான ரோஜாக்கள் பூக்காத தமிழ் தோட்டங்களும்,தூங்காத விழிகளைக்கொண்ட முகங்களையும் , தேடுவதென்பது முடியாத காரியம்தான்
(இவரின் இசை அற்புதங்களுக்கு பல பாடல்கள் உதாரணம் என்றாலும் எனக்கு மிகப்பிடித்தவை என்பதற்காக இவற்றை உதாரணம் காட்டினேன் இசை ரசிகர்கள் பொறுத்தருள்க )

இசைஞானி ஆளுமைக்குள் தமிழிசயுலகம் கட்டுண்டு கிடந்த காலங்களில் பிரபலமான் குரல்களுக்கு நிகரான சில குரல்களை அல்லது ஒத்த குரல்களை அறிமுகப்படுத்தியிருந்தார் இசைஞானி . உதாரணமாக பாடும் நிலாவைப்போன்ற குரலுடைய மனோ ( தற்போதைய மனோ அவர்களின் குரல் தனித்துவமானது )
ஜானகி அம்மாவை ஒத்த குரலுடைய மின்மினியும் முக்கியமானவர்கள் அந்த வரிசையில் ஜேசுதாஸ் அவர்களுடைய குரல் சாயல் அருண் மொழிக்கு இருப்பதை காணலாம் சூரசம்காரம் படத்தில் வரும் நீலக்குயிலே பாடல் உதாரணம் ஆனால் ஜேசுதாஸ் அவர்களின் ராஜாங்கம் தனித்துவம் மிக்க மகத்துவமாய் இன்றும் எல்லோர் மனதிலும் அச்சுபட்டுப்போய் கிடக்கிறது மறக்கமுடியாத மறுத்துவிடமுடியாத இசைத்தடம் அது

நம் தலை முறையில் இசையமைப்பாளர் வித்யாசாகர் ,யுவன் ஆகியோர் அதிகம் நாடும் மதுபாலக்ரிஷ்ணன் ,விஜய் ஜேசுதாஸ் ஆகிய இருவருமே ஜேசுதாஸ் அவர்களின் குரலை முன்னுதாரனமாக கொண்டு வெற்றி ஈட்டி நிற்கின்றனர் ஆகா தலைமுறைகளை பின்பட்ருவதால் யாரும் சோடம் போகப்போவதில்லை (ஹீ .... ஹீ ...)

இன்னும் கால தூரங்களை சரித்து விஞ்சப்போகும் இந்த இசை உலகின் தேவதூதன் பல்லாண்டு வாழ இறையருள் பிரார்த்திப்போம் அன்புடன் அன்பன் கிருஷ்ணா

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்