பிறந்தநாள்... இன்று ... பிறந்தநாள் ...
அடியேனின் அவதார நாளை ஒட்டி நள்ளிரவிலிருந்து ஏராளமான வாழ்த்துக்கள் எதிர்பாராத வாழ்த்துக்களும் திக்குமுக்காட வைத்துவிட்டது என்னை , குறுந்தகவல் மூலம் ,மின்னஞ்சல் ,தொலைபேசி மூலம் , வதன நூலில் என என் வாழ்க்கையில் அதிக பேரிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டது இதுதான் முதல் தடவை கிழக்குமாகானத்தையே ஸ்தம்பிக்கவைத்திருக்கும் மழையிலும் சில நண்பர்கள் , சகோதரிகள் நினைவு வைத்து வாழ்த்திய அன்பை என்னென்று சொல்ல அதற்கு ஒரு முக்கியமான வெளிப்படையான காரணம் சக்தியும் அது எனக்கு தந்திருக்கும் அறிவிப்பாளன் என்ற அங்கீகாரமும்தான் (முக்கிய குறிப்பு --- நேயர்கள் இன்னமும் என்னை ஒரு அறிவிப்பாளனாக அங்கீகரித்ததாக தெரியவில்லை அதற்காக நான் போராடிக்கொண்டேயிருக்கிறேன் )என்றும் சக்திக்கு நான் கொண்ட கடன் தீரவே தீராது .....
சக்தி கலையகத்தில் நான்
என் பிறந்தநாளை நான் கொண்டாடுவதில்லை என்ற என் தீவிர கொள்கையில் இருந்து இம்முறையும் நான் விடுபடவில்லை என்பது ஆறுதலாகவே உள்ளது எனவே இனிப்பு கொடுத்து என்னை நானே விலை பேசும் ஆங்கிலேய மலிவுகளுக்குள் இருந்து வழக்கம்போல் தப்பித்துக்கொண்டேன் (கடந்த நான்கு வருடங்களாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை இம்முறையும் நான் கொண்டாடவில்லை என்பதை உண்மையுடன் தெரிவிக்கிறேன் )
முக்கியமான விடயம் அண்ணன் ராஜ்மோகன் அவர்கள் எனக்கு தந்த பிறந்தநாள் பரிசு கனவு மெய்ப்படவேண்டும் என்ற வார்த்தையோடு வந்த பரிசுதான் இவ்வாண்டில் என் வழித்துணை , வானொலியில் என்னை இனம் கண்டு வாய்ப்புகொடுத்தவர்களில் முக்கியமானவர் எங்களுக்கெல்லாம் முன்னோடியும் தற்போதைய சக்தி தொலைக்காட்சியின் முகாமையாளருமான ஐ . கஜமுகன் அண்ணாதான் கஜன் அண்ணாவினதும் ராஜ் அண்ணாவினதும் வாழ்த்துக்களில் திக்குமுக்காடியே போய்விட்டேன் ....இதிலென்ன அவ்வளவு சந்தோசம் என்று தோன்றலாம் நியாயம்தான் ஒரு காலத்தில் நேரில் ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா என்று நான் ஆசைப்பட்டவர்கள் அருகில் இருக்கும் சந்தோசத்தை சொல்லவுமா வேண்டும் ......
எல்லாம் சரி அறிவிப்புத்துறைக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் எதையமே சாதிக்கவே இல்லை என்ற வெறுமை மட்டும் என்னை நிமிடம்தோரும் வதைக்கிறது ( அது என் கையாளாகாமயாகவும் இருக்கலாம் ) எது எப்படியோ சக்தியின் வழியில் அது என்னை அழைத்து செல்லும் வரை என் பயணத்தின் மீதும் சேரவேண்டிய இடம் குறித்தும் எந்த சந்தேகமும் இல்லாமல் நடைபோடுகிறேன் ..... வாழ்த்திய அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றிகள் இந்த வருடமாவது உருப்படியாக எதையாவது செய்யப்பார்க்கிறேன்
This comment has been removed by the author.
ReplyDelete