இதுவும் இன்னொரு நாள்
(இந்த பதிவை நான் இடும் சமநேரத்தில் "3.30am" இதுவரை 60 அழைப்புகள் கிட்டத்தட்ட எங்கள் அழுவலக தொலைபேசிக்கு வந்துவிட்டது அம்பாறை மாவட்டம் குறிப்பாக நிந்தவூர் கல்முனை மற்றும் பொத்துவில் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதான செய்தியொன்று தீவிரமாக பரவியுள்ளமை உணர முடிகிறது தகவல்களை என்னால் இதுவரை உறுதிப்படுத்தமுடியவில்லை கேட்டவரை அது ஒரு வதந்தியாகவே சொல்லபடுகின்றது )நிற்க ...
ஒருவாறு லேசாக மழை விடும் அறிகுறி தெரிகிறது வெள்ள நீரும் வடிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்க ஆரம்பித்திருக்கிறது ஆனால் அழிவுகள் ஜீரணிக்க தக்கதாக அமையவில்லை கிழக்கு மாகாணம் முழுவதும் முழுமையாக பாதிக்கபட்டிருப்பது உடமைகளை பொருத்தமட்டில் இது சுனாமியை விட பாரிய அழிவு என்பதை கண்டிப்பாக உரியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் ... நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் என்று நாடு முழுவதும் பொருட்கள் சேர்க்கபடுகின்றன உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறேன் கடவுளை ,,,
இது இவ்வாறிருக்க வழக்கம் போல அத்தனை தமிழ் ஊடகங்களும் கிழக்கை நோக்கி படையெடுத்து நான் முந்தி நீ முந்தி என்று உதவிக்கரங்களை நீட்டுவது மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது அதிலும் நான் சார்ந்த ஷக்தி ஊடக வலையமைப்பு வழக்கமான வீரியத்துடன் களமிறங்கியுள்ளது
நீண்ட இடைவேளைக்குப்பின் அல்லது எனக்கு விவரம் அறிந்த வரை கொழும்பில் இப்படி ஒரு கடுமையான குளிரை கண்டதில்லை இயல்பாகவே குளிரில் வளர்ந்த என்னால் கூட கொழும்பின் தற்போதைய குளிரை தாங்கவே முடியவில்லை சீரற்ற காலநிலையின் வீரியம் நாடு முழுவதும் ஏதாவது ஒரு வடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் தைத்திருநாளையும் வரவேற்கவேண்டிய கடமை நமக்கு
யுத்தம் என்ற மனிதன் உருவாக்கிய சாத்தான் ஒருமுறை அடிக்க ஆழியின் உயர் கரங்கள் எங்களை மனிதாபிமானம் இன்றி நசுக்க ....இயற்கையும் தன்பங்குக்கு கைவரிசை காட்ட இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சாபக்கேடுகளில் தத்தளிக்கபோகிறோமோ என்ற வினாவுடன் தை மகள் வந்திருக்கிறாள் தையாவது பங்குனியாவது என்னைபொருத்தவறைக்கும் இதுவும் இன்னொரு நாள் அவ்வளவுதான் ... என்று என் இனம் தலையில் சுமைகளின்றி முழுமயடைகிறதோ அன்று வரட்டுக்கும் இந்த அத்தனை (தை மாசி பங்குனி) அக்காக்களும்
0 comments:
Post a Comment