வருடம் சொன்ன செய்தி
இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் 2010 ஆம் வருடத்திற்கு கை அசைக்க தயாராகும் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு இந்த கடந்த வருடம் திருப்பு முனையாக அமைந்தது என்பதை விட சில செய்திகளை எனக்கு மிகத்தெளிவாக சொன்ன ஒரு வருடமாகும் நான் எதிர்பாராத பல ஆச்சர்யங்களை கண்கூடாக கண்டுகொண்ட ஒரு வருடமாகும் ..........அதிலும் கடைசி மாதம் நான் எதிர்பாராத பல சந்தோசங்களை எனக்கு தந்திருக்கின்றது நான் சார்ந்த சக்தி fm இன் நிகழ்ச்சி மாற்றங்களின் பின்னால் எனக்கும் சில பெறுமதியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன அவற்றில் என் பன்முக திறன்களை நான் என்னால் முடிந்தவரை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன் மறக்க முடியாதது எனக்குள் இருந்த எழுத்து கோர்வையை கவிதைகள் என்ற பெயரில் மூத்தோர்கள் நிறைந்த கவியரங்கத்தில் என்னால் முழங்க முடிந்தது
ஞாயிறு இரவு நடக்கும் கவியரங்கத்திட்காக என் கவிதைகளும் இணைத்துக்கொள்ளப்பட்டு மக்களிடம் இருந்தும் சக நண்பர்களிடம் இருந்தும் மற்றும் கவியரங்க நண்பர்களிடம் இருந்தும் சுமாரான "கவிதை"
என்ற பெயர் கிடைத்தது எனக்கான முதல் அங்கீகாரம் என கருதுகிறேன்
இலங்கையின் எழுத்து துறை முன்னோடி கவிஞர் திரு இரா சடாகோபன் அய்யா அவர்களின் தலைமையில் மேடையேறிய என் கவியரங்க வரிகளை அடுத்த அடுத்த பதிவுகளில் பதிவிடுகிறேன் உங்கள் பின்னூட்டங்களை பதிவிடுங்கள் தயவு செய்து
அதே நேரம் ஊடகத்துறை சார்ந்த மற்றும் தென் இந்திய திரை உலகம் சார்ந்த பலரிடம் நேரடியாக நான் எடுத்த செவ்விகளையும் எழுத்துருவில் பதிவிட தயாராகிறேன்
கடந்து முடிந்த வருடம் எனக்கு சொன்ன செய்தி மட்டும் இப்போதும் என் காதுகளுக்குள் கேட்டுகொண்டே இருக்கிறது அது "கவனம் இந்த வாழ்க்கை அவ்வளவு சாதாரணம் இல்லை "கவனமாய் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் நம்பிக்கைகளுடன் அடுத்த ஆண்டில் நான் மீரா .......
0 comments:
Post a Comment