Saturday, June 11, 2011

"தமிழக முதல்வரும் நம்மவர் தீர்மானங்களும் "



அடுத்தடுத்து அதிரடியாய் அடிதடியாய் நகர்கிறார் அம்மையார் முதுகெளும்புடைந்துபோன கருணாநிதியின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது! அதே சமயம் கடந்த கருணாநிதி ஆட்சியின் தடங்களை அழிப்பதில் மும்முரமாகவும் ஈடுபட்டிருப்பதனால் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நம்மவர்கள் தொடர்பாக முதல்வர் அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தைரியமான ஆச்சர்யமான தீர்மானங்களின் நீடிப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்பாக எனக்குள் சில கேள்விகளை எழுப்புகின்றன நான் இப்படி சொல்வதில் அர்த்தம் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் கடந்த வரலாறு முழுக்க பார்த்தால் தெரியும் கருணாநிதி எதை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதை அவருக்கு நேரெதிர் செய்பவர்தான் தமிழகத்தின் தற்போதய முதலவர் எனவே கருணாநிதி நம்மவர்கள் தொடர்பாக நடந்துகொண்ட விதத்தின் மறுபக்கத்தை அம்மையார் செய்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை அம்மையாரின் இந்த அடி தமிழரின் மூத்த தலைவன் என்று கொக்கரிக்கும் கருணாநிதியின் வாழ்கையில் வாங்கிய மரண அடி நல்ல பாடம்



ஆனால் ஜெயலலிதா அவர்களின் அவதாரத்தினால் இந்திய மத்தி கூட ஆடிப்போய்விட்டத்தை மட்டும் புறக்கணிக்கமுடியாது மறுபக்கம் இந்திய காங்கிரஸ் கட்சியினர் அடுத்த தேர்தலில் ஜெயலிதாவுடன் இணையவேண்டும் என்ற அழுத்தங்களை காங்கிரஸ் கட்சியின் உள்ளுக்குள்ளேயே உள்ளவர்கள் கொடுத்துவருவதாக சில நாளிதழ்களில் நான் படித்தேன் எனவே தமிழகமுதல்வரின் காங்கிரஸ் எதிர்ப்பு போக்கு எவ்வளவு காலம் என்பதை இப்போதைக்கு ஊகிக்கமுடியாதுள்ளது எது எப்படியோ தற்போதைக்கு ஜெயலலிதா அவர்களின் போக்கு தமிழரின் நம்பிக்கை !

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்