"விருப்பமில்லா இரவுகளின் நீளம் கொடுமையானது "
"என் வாழ்நாளில் நான் போக கூடாத உயிரே போனாலும் போகவே கூடாத ஒரு இடமாய் எப்போதும் கருதுவது வைத்தியசாலைதான் மருந்து வாடை .நோயாளர்களின் முனகல் ., நர்சுகளின் அலட்டல் , டாக்டர்களின் முகம் , கொடூர முதுமை அல்லது முதுமையை கொடூரமாக்கிக்கொண்டவர்கள் , மரணத்துக்காய் காத்திருக்கும் மனிதர்களின் விரக்தி புன்னகை, , ஊசி வலிக்காய் அண்டம் சிதற கத்தும் குழந்தைகளின் அழுகை என்று வைத்தியசாலை அநியாயத்துக்கு மிரட்டுகிறது என்னை (இவை எனக்கு எப்போதும் ஒட்டாது என்று ஆரம்பத்திலேயே தெரிந்ததலோ என்னவோ அப்பாவின் ஆசைப்படி வைத்தியர் ஆக எனக்கு ஒரு பொறி அளவு எண்ணம் கூட வரவில்லை)பல முறை அப்பாவுக்கு துணையாய் கொழும்பு ஆதார வைத்தியசாலையில் என் இரவுகளை நான் கழித்திருக்கிறேன் ... வாழ்நாள் முழுதும் மருந்தே உணவாகிப்போன அவருக்கு வைத்தியசாலை ஒன்றும் புதிதல்ல ஆனால் அங்கிருந்த ஒவ்வொரு நொடியையும் பல்லை கடித்துக்கொண்டு (அப்பாவுக்காக ) நான் சகித்துக்கொண்ட நாட்கள் இனிதிரும்பவே கூடாது என்றும் யாருக்கும் வரக்கூடாது என்றும் தினம் இரவுகளில் நினைப்பதுண்டு
உண்மையில் இப்போதெல்லாம் நேரம் நகரும் வேகம் கற்பனைக்கும் எட்டுதில்லை .... எப்படி நேரமானது என்றுகூட ஸ்தம்பிக்கிறேன் ஆனால் வைத்தியசாலைகளில் நான் கழித்த நொடிகள் மட்டும் ஏன் அவ்வளவு நீளமாய் இருந்தது ????
இன்றளவு வாழ்க்கையில் குறைந்த வேகத்தில் நேரத்தின் பயணம் அந்த வைத்தியசாலைகளில் தான் நான் உணர்ந்திருக்கிறேன் "
உண்மையிலேயே அதிக நாட்கள் மருத்துவ மனையில் பொழுதை கழிப்பது நரக வேதனைதான்...
ReplyDeleteanna nanum hospital valkaiyai verukkuren....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete"என் வாழ்நாளில் நான் போக கூடாத உயிரே போனாலும் போகவே கூடாத ஒரு இடமாய் எப்போதும் கருதுவது வைத்தியசாலைதான்"
ReplyDeleteஒவ்வொரு நொடியையும் பல்லை கடித்துக்கொண்டு (அப்பாவுக்காக ) நான் சகித்துக்கொண்ட நாட்கள்