மீண்டும் சனத் ஜெயசூரிய
இலங்கை அணியில் மீண்டும் சனத் இணைக்கப்பட்டமை குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது ... பல்வேறுபட்ட இணைய தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் இது தொடர்பான நிறைய சாதக பாதக கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ள இந்த நேரத்தில் நானும் சில கருத்துக்கள் பகிர நினைத்தேன் சாதாரண ஒரு ரசிகனாக சனத்தின் மீள் வருகை நான் மிக நீண்ட காலம் எதிர்பார்த்தது ஒன்று அந்த வகையில் மீண்டும் களத்தில் துடுப்போடு அவரை பார்க்க கிடைத்தது எனக்கு சந்தோசம் ( அடித்தாலும் அடிக்காவிட்டாலும் )"பாதம் தலை என்று எல்லாவற்றையும் சரி செய்துகொண்டு . பந்தை எதிர்கொள்ள சனத் களத்தில் நிற்கும் போது மனதுக்குள் எழும் அச்சம் கலந்த ஆர்வம்" எனக்கு இன்றுவரை வேறு எந்த துடுப்பாட்ட வீரர் ஆடும்போதும் எழுந்ததில்லை
பார்த்துட்டே இருந்தா எப்டி பாஸ் ?... சீக்கிரம் கிளம்புங்க
சனத்தின் தீவிர ரசிகனான எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு கவலை சனத் சரியான முறையில் அணியில் இருந்து உரிய மரியாதைகளுடன் வெளியேறவில்லை "ஒரு விளையாட்டு வீரன் புகழின் உச்சியில் இருக்கும் போதே (போதும் என்றளவு சாதித்து விட்டால் ) இளையவர்களுக்கு இடம் கொடுத்து கௌரவமாய் விலக வேண்டும்" என்று பிரபல கிரிக்கட் விமர்சகரான வெற்றியின் லோஷன் அண்ணா சொல்வது சனத்துக்கு சாலப்பொருந்தும்...
தவிரவும் களத்தில் துடுப்போடு பார்த்த இவரை கையில் மைக்குடன் அரசியல் மேடைகளில் ஐயோ சகிக்கல! சிறந்த அணியாக தன்னை மெருகேற்றிக்கொண்டிருந்த சிம்பாப்வே அணியின் தற்போதைய நிலை இலங்கைக்கும் வந்துவிடுமோ என்று எனக்கு கொஞ்சம் விபரீதமான பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறது பாமரத்தனமான பயமாகவும் இருக்கலாம் ஆனால் இலங்கை அணி சமகாலத்தில் இங்கிலாந்தில் விளையாடும் விதம் அந்த பயத்தை எனக்குள் தோற்றுவித்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை எது எப்படியோ இங்கிலாந்து தொடரில் கௌரவ பாராளமன்ற உறுப்பினர் சனத் அவர்கள் நல்ல இனிங்க்ஸ் ஒன்றுடன் சர்வதேச கிரிக்கட்டுக்கு விடை கொடுத்தால் நல்லது ஒரு வேலை இந்த போட்டியிலும் நல்ல இனிங்க்ஸ் இல்லை என்றால் மறுபடி இன்னுமொரு போட்டியில் விளையாடினாலும் ஆச்சர்யப்படுவதட்கில்லை!!!
0 comments:
Post a Comment