Friday, July 27, 2012

வழக்கு எண் 18/9

படம் வந்து பல காலம் ஆகிய பிறகு அண்மையில்தான் இந்த படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. ஒரு நாள் இந்த படத்தை பற்றி என் நண்பன் ஒருவன் சொன்னான் படத்தை பார்த்த இயக்குனர் பாலுமகேந்த்ரா இந்த படத்தை பார்க்கத்தான் இவ்வளவு நாள் உயிருடன் இருந்தேனா ? என்று ரொம்ப உருகி சொன்னாராம். அவர் கருத்து தப்பே இல்லை அவ்வளவு நேர்த்தியான படம்தான் . பார்க்கும்போதே தெரிகிறது குறுகியகாலத்தில் படமாக்கப்பட்டாலும் நீண்டகால உழைப்பை படத்தின் உருவாக்கத்திற்கு செலவிட்டு நிறைய உழைத்திருக்கிறார் இயக்குனர் காதலில் கிடைத்த நல்ல இயக்குனர் என்ற பெயரை "கல்லூரி படத்திலும் தக்க வைத்தாலும் வர்த்தக ரீதியில் கல்லூரி தோல்விப்படம் அதை இந்த படத்தில் ஈடுகட்டியிருக்கின்றார் பாலாஜி சக்திவேல் ( நல்ல திறமைசாலிகள் இக்காலத்தில் தோற்கக்கூடாது என மனப்பூர்வமாய் விரும்புவதால் அவரின் இந்த பட வெற்றி ஏதோ என் வெற்றி போலவே மனம் சொல்கின்றது ) விளிம்பு நிலை மனிதர்களின் வாழக்கை மாற்றங்களை அனுமானிக்கவே முடியாது "நடைபாதை உறக்கம்" , 'பல நாள் பட்டினி" என அனைத்தையும் அப்படியே சொல்லியிருப்பது அருமை அதை கனா காணும் காலங்கள் புகழ் ஸ்ரீ அப்படியே கொண்டு வந்திருக்கிறார் ( சில நாட்களுக்கு முன் கொழும்புக்கு வெறும் கனவோடு வந்து நான் பார்த்த பல விடயங்கள் ) . அவரின் நண்பனாக வரும் அந்த சின்ன பையன் கதாபாத்திரம் மிக அருமை. இந்த சின்ன வயசில் பையன் அமோகமா நடித்திருக்கிறான். சினிமா கனவை ஸ்ரீ தூண்டிவிட அதனை மறுத்து பேசி தன் கருத்தின் நியாயத்தை சொல்ல பேசும் வசனங்களும் அருமை. படம் முடியும் வரை கூட வரும் கதாபாத்திரம் அவனுடையது. கலக்கமே இல்லாமல் கொஞ்சமும் நடிப்பு பயம் இல்லாமலே அசால்ட்டாக பின்னியிருக்கும் அந்த பையனை உச்சி முகரலாம். கதை ஓட்டத்தில் சில விசயங்களை பாதியிலேயே அனுமானித்துவிட்டேன். முக்கியமாக அப்பாவி ஸ்ரீயை போலீஸ் பிடித்து, திருப்பமாக உண்மை குற்றவாளியும் பிடிபட , பிடிபட்ட குற்றவாளி பெரிய இடம் என்று வரும்போது அடுத்த கட்டம் தெரிந்துவிட்டது. ஆனால் முடிவில்தான் இயக்குனர் தான் யார் என்பதை காட்டியிருக்கின்றார் ..சபாஷ் ....... ஹீரோயின்கள் ரெண்டு பேருமே ரொம்ப அருமை. நீண்ட நாட்களுக்கு பிறகு பெண் கதாபாத்திரங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த தமிழ் படம் இதுதான். ( என் நினைவு சரி என்றால் பருத்தி வீரனுக்கு பிறகு நடிகைகள் நடிச்ச ஒரே படம் இதுதான் ) , பல நல்ல கதைகள் பாத்திரப்படைப்புகளினால் தோல்வி அடைந்திருக்கின்றன, இந்த படம் ஒரு போதும் தோல்வி அடைந்திராமல் இருக்க ஒரு நூல் அளவு தவறு கூட வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குனரும் அவரோடு பணி புரிந்த அணைவருமே கவனமாய் இருந்திருக்கின்றனர் அது நிறைவேறியும் இருக்கின்றது ......

2 comments :

  1. "நல்ல திறமைசாலிகள் இக்காலத்தில் தோற்கக்கூடாது என மனப்பூர்வமாய் விரும்புவதால் அவரின் இந்த பட வெற்றி ஏதோ என் வெற்றி போலவே மனம் சொல்கின்றது" அருமை

    ReplyDelete
  2. itu varaikkum ittiraipadam paarkavillai..ungal vimarsanam paarkka toondugiratu..kandippaai paarka vendiya oru vaalkai

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்