Monday, July 23, 2012

நட்சத்திர வீதியில் என் மனதின் பிரதிபலிப்பு



சினிமாவில் நான் அதிக ஆர்வம் கொண்டு பேசுவதாகவும் அதிகம் அதை பற்றி எழுதுவதாகவும் பலர் என்னிடம் குறைபட்டிருக்கின்றார்கள். சில நண்பர்கள் திட்டியும் இருக்கின்றார்கள்.  என்னை பொறுத்த மட்டில் சினிமா என்பது மட்டும்தான் என் பொழுது போக்கு அதை நான் ஆழமாய் நேசிக்கின்றேன், வலுவாய் காதலிக்கிறேன். அஜித் பற்றி நான் அதிகம் அலட்டுவதாகவும் பலர் திடியிருக்கின்றார்கள் அஜித் என்ற மனிதனையும் நடிகனையும் நான் நேசிக்கிறேன் அவரவர் தம்மை வளர்த்துக்கொள்ள முன்னுதாரணமாய் பலரை எடுக்கின்றார்கள், நான் அஜித்தின் உழைப்பை நேசிக்கிறேன், அந்த அடங்காமையை விரும்புகின்றேன். இதில் என்ன தவறு இருக்கின்றது என எனக்கு புரியவில்லை. சாப்பிட கோட காசு இல்லாமல் இருக்க படத்துக்காக பணத்தை செலவழிக்கும் கோமாளி அல்ல நான். என்னை அடுத்த வேலைக்காக தயார்படுத்தும் ஒரு இடமாகவே படங்களை பார்க்கின்றேன் .  "குடித்து கும்மாளம் அடிப்பதும் , நண்பர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை செலவழிப்பதும், குட்டி உஷார் பண்ணி ஊர் சுத்துவதும் தப்பில்லை என்றானபோது" ஒரு நடிகனுக்காக நான் எழுதுவதில் என்ன தவறு இருக்கின்றது? புரியவில்லை , இன்னுமொன்று நான் ஒரு நடிகனுக்காக எப்போதும் பிற நடிகர்களையோ அல்லது மனிதர்களையோ தாழ்த்தியதும் இல்லை, தேவை இல்லாமல் உயர்த்தியதும் இல்லை இந்த வலைப்பூவை நான் என் மன உணர்வை பிரதி பலிக்கும் ஒரு இடமாகவே கருதுகின்றேன். கிட்டத்தட்ட நட்சத்திர வீதியில் என்பது என் நாட் குறிப்பு போன்றதே என்ன ஒன்று அந்த நாட்குறிப்பை பொதுவாக யாரும் படிக்கக்கூடியதாய் வைத்திருக்கின்றேன்  எந்த ஒழிவு மறைவும் இல்லாமல்  அஜித் படத்தை பார்த்து என்னை நான் ஒய்வாக்கிக்கொள்கிறேன். மூன்று மணித்தியாலங்கள் சந்தோசப்படுகின்றேன் இதில் என்ன தவறு இருக்கின்றது ?

3 comments :

  1. "குடித்து கும்மாளம் அடிப்பதும் , நண்பர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை செலவழிப்பதும், குட்டி உஷார் பண்ணி ஊர் சுத்துவதும் தப்பில்லை என்று யார் சொன்னது?

    ReplyDelete
  2. எல்லோருக்கும் பிடிக்கும் இடத்தில் நீ இல்லை என்றால் வாழ்க்கையை சரியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்......

    ReplyDelete
  3. miss anything for ur best life but don't miss ur best life for anything

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்