"நீதானே என் பொன் வசந்தம்"-isayin 100
சிறிது காலம் அல்லது நிரந்தரமாகவே எழுதுவதை நிறுத்தி விடலாமா என்றளவுக்கு மிகப்பெரிய சலசலப்பை கடந்த பதிவு ஏற்படுத்திவிட்டது.
( தனிப்பட்ட ரீதியில் ) அதனால் அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டு இனி எழுதுற பொழப்பே வேணாம்னு இருந்தாலும், இதை எழுதாமல் இருப்பது என்பது நான் இந்த வலைப்பதிவையே ஆரம்பித்தமைக்கே அர்த்தம் இல்லாது செய்துவிடும் என்ற ஒரு எண்ணம் இருந்ததாலும். சில பதிவுகளில் பார்த்த விசயங்களினாலும் சரி என்று கணனிக்கு முன் அமர்ந்துவிட்டேன் ... "நீதானே என் பொன் வசந்தம்" கெளதம் படம் என்ற அடையாளமே இசைக்கு எதிர்பார்ப்பை எகிறவைக்க, கூடவே வந்த அந்த மந்திரப்பெயர் தமிழ் ,தெலுங்கு ஆகிய இரண்டு டீசர்களிலும் அந்த பெயரை உச்சரிக்கும் போது அந்த நாயகர்களின் சிலிர்ப்பு என்பன இந்த இசை தொகுப்புக்காக ஏங்கி காக்க வைத்தது .....
முதலாம் திகதி பாடல்களை வெளியிட்டாலும் அதற்கு முதல் வெளியிடப்பட்ட இரண்டு பாடல் பிட்டுக்கள் ஏமாற்றமாகவே இருந்தது , யுவன் குரலில் வரும் சாய்ந்து சாய்ந்து பாடலை ரேடியோ மிர்ச்சியில் கேட்டேன் உதட்டை பிதுக்கவேண்டி ஆயிற்று கூடவே ஒரு கவலையும் வந்தது பாடல்கள் அவ்வளவாக இருக்காதோ என்று. ஆனாலும் ராஜா என்ற மந்திர வார்த்தையின் மீது இருந்த நம்பிக்கையினால் காத்திருந்தேன் , என்னோடு வா வா பாடலை கேட்கும்போதும் அப்படித்தான் " நீ கோபப்பட்டால் நானும் " என்ற தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஒரு மெலடியை நினைவுபடுத்த கடுப்பாகிவிட்டேன். நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் முதலாம் திகதிக்காக எதிர்பார்ப்புடன் காக்க வைத்தது ராஜா என்ற அதே மந்திர வார்த்தை .....
பாடல்களும் வெளியாகின. பித்து பிடித்ததை போல மீண்டும் மீண்டும் கேட்டேன் இதுவரை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது கண்டிப்பாக காதுகள் கேட்கிறது. எல்லா நண்பர்களிடமும் விவாதித்தேன் யாரை கண்டாலும் குறித்த பாடல்கள் எப்படி என்ற கேள்வி என் வார்த்தை கொத்தில் கண்டிப்பாய் இருந்தது ....எனக்கு நூறு வீதம் திருப்தி " இனி அந்த எட்டு பாடல்களை பற்றியும் எனக்கு ஏன் அவை பிடித்தது என்பதை பற்றியும் எழுதுகிறேன் ஆனால் கண்டிப்பாக இது விமர்சனம் அல்ல எனக்கு பிடித்தமைக்கான காரணம் அல்லது பிடிக்காததட்கான காரணம் அவ்வளவுதான் " ஏறு வரிசையில் ......
8 ) பெண்கள் என்றால் -
யுவன் பாடும் பாடல் என்னவோ எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கவில்லை. பின்னணி இசையில் மந்திரம் செய்த இளையராஜாவை தவிர வேறு எதுமே இந்த பாடலில் இல்லை. வரிகளும் ஏஸ் யூஷுவல் , எந்த தரப்படுத்தலிலும் பாடல் இப்போதைக்கு இடம்பிடிக்காது படம் வந்தால் பார்க்கலாம் ...
7) சற்று முன்பு பார்த்த -
காதலனை நினைத்து உருகி உருகி பாடும் பாடல். மிக மெதுவாக நகரும் பாடல் ரம்யாவின் குரலுக்கே பாடல் அழகுதான் இங்குதான் நம்ம மொட்ட பாஸ் விளையாட்டை ஆரம்பிக்கிறார்........ திடீரென ஆரம்பிக்கும் சடார் இசை போக போக பாடல் அமைதியை தழுவுகிறது சிம்போனி ஆர்கெஸ்ட்ரா திடீரென் தாக்குவதும் பின் ரம்யாவின் குரல் நம்மை தூக்குவதும் என்று ஒரு இசை பிரளயமே நடக்கிறது இந்த பாடலில் .....வரிகள் ரசிக்கலாம்
6) புடிக்கல மாமு -
டியூன் செல்லும் விதமே அருமை ... கண்டிப்பாக யூத்துக்கு பிடிக்கும். அனால் படம் காட்சியுடன் பார்க்கும் வரைக்கும் பிடிக்க வாய்ப்பில்லை. பல முறை கேட்டால் இந்த பாடலின் சுவையே தனி "ராக் ஸ்டைலில்" ஆரம்பிக்கும் பாடல் குத்தில் முடிகிறது. இங்கு மறுபடியும் ராஜாவின் மந்திரங்கள் அழகாய் தெரியும் பாடலின் டியூன் எப்படி போய் எங்கு முடியும், எங்கு அறுபடும் என்று அனுமானிக்கவே முடியவில்லை. ஹங்கேரி கலைஞர்கள் கருவிகளில் கொண்டுவரும் ஜீவனும் அழகு .... ஆனால் ஒரு பெரிய குறை பாடலில் இன்னைக்கு யூத்கிட்ட இருக்குற வசனங்கள் வார்த்தைகள் மிஸ்ஸிங் ...
5) வானம் மெல்ல -
ராஜாவின் மந்திர குரல் இந்த படத்தில் ஒலிக்கும் ஒரே இடம் இந்த பாடலில் ஆகத்தான் இருக்கும். " தென்றல் வந்து தீண்டும் போது " பாடல் ஆரம்பிக்கும் போது அந்த கோரஸ் நம்மை வந்து தாக்கும் .அந்த அடியிலேயே பாடல் முடியும் வரை நாம் பாடலுக்குள் இருந்து வெளியே வர முடியாது ... அப்படியான மேஜிக் இந்த பாடலிலும் இருக்கின்றது ... மிக அருமையான அரேஞ்ச்மேன்ட்ஸ்... மீண்டும் மீண்டும் கேட்கலாம் கேட்டு கேட்டு கிரங்கலாம் ..
4) முதல் முறை -
சுனித்தி சௌகான் பாடும் பாடல். முதல் தடவை கேட்கும் போது அவ்வளவாக ஈர்க்கவில்லை சாதாரணமாக போகும் பாடலில் காதுகளை ஈர்க்க ஆரம்பிக்கின்றது "நீதானே என் பொன் வசந்தம்" என்று சுனித்தி சௌகான் உச்சஸ்தாயியில் பாடும் இடம். அங்கிருந்து பாடல் என்னெல்லாமோ வித்தைகள் செய்து பாடலுக்குள் கட்டிபோடுகின்றது !,..... மிக அருமையான அரேஞ்ச்மேன்ட்ஸ்.
3) சாய்ந்து சாய்ந்து -
ஆரம்பம் யுவனின் குரல் மட்டும். அழகான மெலடிதான் ஆனால் ஈர்ப்பு இல்லை. பல்லவி முடிய இண்டர்லூட்டில் ராஜாவின் மந்திரம் அரை செக்கண் அமைதிக்கு பிறகு ஆரம்பிக்கும். அங்கிருந்து பாடலில் இருந்து காதுகளை மீட்டெடுக்கவே முடியாது ரொம்ப அருமையான பாடல். யுவன் சரியான தெரிவு " என் தாயை போல ... என்று நீளும் பாடலின் கணங்கள் மறக்கவே முடியாத போதை ......"
2)காற்றை கொஞ்சம் -
கார்த்திக் பாடும் பாடல். உத்தியோகபூர்வ வெளியீட்டுக்கு முதல் நாள் வெளிவந்த பாடல் ... இந்த இசையை என்னவென்று சொல்லுவதென்று எனக்கு புரியவில்லை. ஆனால் இப்படி ஒரு வித்தியாசமான ஒலியை கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. சாதாரண டீயுன்தான் ஆனால் இந்த பின்னணி இசை என்னவோ செய்கிறது... மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் தந்திரம் என்னவென்று ராஜா வுக்குதான் தெரியும் " சரணத்தில்" வரும் ஒவ்வொரு வரிக்கு பிறகும் அதை அப்படியே மீண்டும் வாசிக்கும் அரேஞ்ச்மென்ட் ராஜாவின் புது அவதாரம் அந்த ஓசைக்காகவே பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ...
1)என்னோடு வா வா -
ஆரம்பத்தில் நான் சொன்ன குற்றச்சாட்டு இந்த மெட்டை ஏற்கனவே கேட்டது என்று . பாடலை முழுதும் கேட்டபோதுதான் என்னை நானே காயப்படுத்தலாம் என்று இருந்தாது அவ்வளவு புது இசை இதுவரை கேட்டதே இல்லாத அரேஞ்ச்மேன்ட்ஸ் ... நீண்ட காலத்துக்கு பின்னர் ராஜாவின் ராஜாங்கம் இந்த பாடலில் கொடி ஏற்றுகின்றது அனைத்து வானொலிகளிலும் இந்த பாடல்தான் நம்பர் one ...
மொத்தத்தில் ராஜா சார் இந்த படத்துக்காக தந்திருக்கும் இசை மிக புதுமையானது ( என அறிவுக்கு எட்டிய வகையில் ) ... படம் வந்த பின்னர் மீண்டும் ஒரு ரௌண்ட் அடிக்க ஆரம்பிக்கும் என்பதும் நம்பிக்கை ....
சூப்பர் அண்ணா... வாழ்த்துக்கள்....
ReplyDeletesuprb..innum niraya eluthunga anna..v r waiting
ReplyDeleteso nc.evarum avar virumbum karuttai veliyiduvathutaan ilakkiya ulagin nirttaadchanyamaana niyati..so pls dnt stop ur writings.
ReplyDelete