"தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே "
ஆவணப்படம் பார்த்து அதிர்ந்த பலரில் நானும் ஒருவன் , பாதிக்கு மேல் உடல் நடுக்கம் எடுக்கவே நிறுத்திவிட்டேன் (நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல்தான் ) மறுநாள் வெற்றியின் லோஷன் அண்ணாவின் பதிவில் ஆவணப்படம் பார்த்த அவரின் உணர்வை கவிதையாக தீட்டியிருந்தார் , அதுவும் அதன் பங்குக்கு என் சட்டையை பிடித்து கேள்வி கேட்க எல்லாமே நாம் வாழும் காலத்தில் தானே நடந்திருக்கிறது என்றால் நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல் தானே ?, கையாலாகாத பேடிப்பயல்தானே ? அனால் ஒன்று மட்டும் உண்மை இரண்டாயிரம் வருடங்கள் மூத்தகுடியின் அடக்கப்பட்ட ஓசையை பறை ஓசை சாற்றுவது போல் இனி என் தமிழனுக்கு இப்பேற்பட்ட அவலம் எந்த யுகத்திலும் வராது என்றளவுக்கு அந்த காட்சிகள் எங்கள் அழு ஓலங்களை உலகம் முழுக்க சத்தமிட்டிருக்கிறது !
இதற்கு மேல் இதை பற்றி பேசும் எழுதும் தைரியம் இருந்தால் நான் ஏன் காட்சிகளை பாதியிலேயே நிறுத்த போகிறேன் ?
0 comments:
Post a Comment