தாலாட்டு பாடவா
எங்கள் வானொலியில் என்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பல நிகழ்சிகளை நான் அனுபவித்து ரசித்து வழங்குவதுண்டு . நேற்றைய கவிராத்திரி தாலாட்டு பாடவா என்ற தலைப்பில் நகர்ந்தது .வழக்கம் போல சக்தி கவிஞர்கள் தங்கள் பங்குக்கு அசத்த என் பங்குக்கு திடீரென நிணைவுக்கு வந்த சில வரிகளை சிந்திக்க முன் என் மைப்பேனா கிறுக்கியது ....
வலிக்கிறது .....
என்ன என்ன வலிக்கிறது .....
நினைக்க் நினைக்க நெஞ்சு விம்மி வெடிக்கிறது ....
என்ன அவசரம் உனக்கு ...
வெட்டிப்பயளிவன்
வெறும் பயலிவன்
கடைசிவரை அப்படித்தான் என்று நீயாய் முடிவேடுத்தாயோ
இவன் உழைப்பில் எனக்கு உப்பிடுவான் என்று
ஊரெல்லாம் பேசிவைத்துவிட்டு ..
என் உதிரத்தில் உப்பில்லாமல் ஆக்கிவிட்டு
எங்கே கரைந்து போனாயோ
தகப்பன் மட்டுமா நீ எனக்கு
தங்கத்தின் தங்கம் அல்லவே
அப்பன் அல்ல நீ எனக்கு அதையும் தாண்டி..
பொன்னல்லவே நீ ?
தந்தை பெயர் மட்டுமா சுமந்தாய்
மனதில் குழந்தையாய் சுமந்த தாய் அன்றோ ?
உதவியாய் ஒன்று உன்னிடம்
எனக்கொரு குழந்தையாய் நீ வர உனக்கொரு தந்தையாய்
நான் தாலாட்டு பாடவா ?
மருஜென்மத்திலேனும் நான் தாலாட்டுப்பாட வா ....
"உதவியாய் ஒன்று உன்னிடம்
ReplyDeleteஎனக்கொரு குழந்தையாய் நீ வர உனக்கொரு தந்தையாய்
நான் தாலாட்டு பாடவா ?
மருஜென்மத்திலேனும் நான் தாலாட்டுப்பாட வா ...."
Anna heart touchable line.....