Monday, April 11, 2011

உடைந்துபோன கனவுகளில் உயிர்க்கவேண்டிய எதிகாலம்

வலைப்பதிவிடலின் சீரான வேகத்தை கொஞ்சமாக தடுத்து நிறுத்தவேண்டிய நிலைமைக்கும் காரணமாய் அமைந்தது என் தந்தையின் எதிர்பாராத இழப்புதான் ....கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கிட்டத்தட்ட வாழ்வதற்கான முழு பிடிப்பையும் இயற்கை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டுவிட்டது என்றே உணர்ந்தேன் (வாழ்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு முறையாவது இந்த உணர்வு வருமாம் ) இன்றுவரை உடைந்துபோன என் கனவுகளும் ஆசைகளும் புத்துயிர்பெராமலேயே இருக்கிறது....விடியும் ஒவ்வொரு பொழுதுக்கும் அர்த்தம் இல்லாத வெறுமை மனதை மோசமாக தாக்குகிறது .....அவரிடம் இருந்த அந்த அன்பு ..கண்டிப்பு ... என் மீது அவருக்கிருந்த பாசம் என்று அணு அணுவாக நினைவுகள் பின்னோக்கிசெல்லும்போது வரும் அழுகையை தாண்டிய விரக்தி ...சொல்லில் அடக்கும் அளவுக்கு திறமை என்னிடம் இல்லை

என்னால் அவருக்கு கடைசிவரை ஒரு முத்தம் கூட கொடுக்கமுடியாமல் செய்த இந்த காலத்தை வெறுக்கும் நான் .... ஊடகத்துறையில் நான் பெற்ற அற்ப சொற்ப வளர்ச்சியை கூட ...இமாலய வளர்ச்சியாக அவருக்கு காட்டியதற்காக ... நேசிக்கிறேன் ( காலத்தை )

நிற்க

என் அப்பாவின் இருதிக்கிரியைகளிலும் ..... என் குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்த அத்தனை பேருக்கும் என் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் .... மிக முக்கியமாக ...திரு.பாலேந்துரன் காண்டீபன் ( சக்தி வானொலியின் சமகால பணிப்பாளர் )...தலைமையிலான் ராஜ் மோகன் அண்ணா உள்ளிட்ட ஒட்டுமொத்த சக்தி நிகழ்ச்சி குடும்பத்திற்கும் என் ஆழமான நன்றிகளை தெரிவிக்கிறேன்

வரிவரியாக வடிக்குமளவிட்கு என் தந்தையின் வாழ்க்கை சாதனைகளால் நிரம்பாமல் இருக்கலாம் ஆனால் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது இரண்டையும் வாழ்ந்து எனக்கு உணர்த்தியவர் அவர்தான் உடைந்து நொறுங்கியிருக்கும் என் கனவுகளில் இருந்து எதிர்கால்த்திட்கான உயிர்ப்பை தேடுகிறேன் கிடைக்கும் வரை அன்புடன் அன்பன் ...கிருஷ்ணா

1 comment :

  1. எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது இரண்டையும் வாழ்ந்து எனக்கு உணர்த்தியவர் அவர்தான்
    He's the real Hero....

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்