Monday, April 11, 2011

உலகக்கிண்ணம் 2011



மூச்சுவிட முடியாத பரபரப்போடு முடிந்தது 2011 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் இந்த உலகக்கிண்ண இறுதி போட்டியில் பலரின் கனவுகளில் ஓட்டை விழுந்திருக்கலாம் ஆனால் எனக்கு பதவி உயர்வு கிடைத்தது போன்று பெரிய வெற்றி.. காரணம் சக்தி வானொலியில் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் சிறப்பு ஒலிபரப்பின் முழுப்பொறுப்பும் என்னிடமே வழங்கப்பட்டிருந்தது நினைக்க நினைக்க .... நெஞ்சுக்குள் தேன் ஊறுகிறது ...இருக்காதா எத்தனை வருடகால கனவு நேரத்திற்கு மயூரன் அண்ணாவின் மட்டக்களப்பு பயணத்திற்கும் நன்றிகள்...ஹீ ஹீ .......


இனி விடயத்திற்கு வருவோம் ...என் இந்த வயது வரை ...கிட்டத்தட்ட 5 உலகக்கிண்ண இறுதி போட்டிகளை பார்த்துவிட்டேன் ...1996 உலகக்கிண இறுதிப்போட்டியில் , அதே சமயம் கடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் கூட இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு இந்தமுறை எகிறியது என்றே சொல்லலாம் ... கொழும்பின் சகல வீடுகளிலும் தொலைக்காட்சிகள் வேலை செய்து கொண்டிருந்தது ... மிக சிறிய அளவிலான மைதானங்களில் கூட பெரிய திரைகளில் போட்டியை பார்க்க மக்கள் முன்டியடித்துகொண்டிருந்தனர் .... சில வீடுகளில் பொது நலம் கருதி வீட்டுக்கு வெளியே தொலைக்காட்சி பாதையில் செல்பவர்களுக்காக ஒளிஎற்றப்பட்டிருந்தது.... ஒரு veel park குக்கு ஒரு தொலைகாட்சி ... குளிர்பானம் ...அன்னதானம் என்று கொழும்பு நகரமே அமர்க்களப்பட்டிருந்தது .... மட்டக்களப்பில் நான் சார்ந்த சக்தி fm வானொலி நடத்திய உலகக்கிண்ண சிறப்பு நிகழ்ச்சியின் ஒளிபரப்பை காண கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை வந்திருந்தனர் .... இப்படி உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் ...அத்தனையும் ஒரே எதிர்பார்புக்காக ..ஒரே இலட்சியத்திற்காக ...அது சங்கா கையில் உலகக்கிண்ணத்தை சுமக்கவேண்டும் என்பதற்காக



அத்தனையும் தகர்ந்து போனதை இப்போ வரைக்கும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை .... என்ன நடந்தது இலங்கை அணிக்கு ..( இந்த வினா உலகக்கிண்ணத்தை இலங்கை தவறவிட்ட நேரத்தை விட அதன் பிறகு நடந்த சம்பவங்களின்போதுதான் அதிகம் எதிரொலித்தது அது பற்றி பிறகு பாப்போம் ) ...இறுதியாட்டத்தில் இலங்கை அணியின் போராட்டகுணம் எங்கு போனது என்று கொஞ்சமும் புரியவில்லை மிக முக்கியமாக களத்தடுப்பில் விட்ட தவறுகள் நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது பலரின் பார்வைக்கு இலங்கை உலகக்கிண்ணத்தை திறமையின்மை அல்லது இந்திய அணியை விட திறமை குறைவினால் தவறவிட்டது என்று சிந்திக்க சொல்லவில்லை அவர்களில் நானும் ஒருவன் அதற்கு சில காரணங்களை சொல்லலாம்

உண்மையில் போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை அணியின் வேகம் எப்போதும் போல வெறித்தனமாகத்தான் இருந்தது ஆரம்ப விக்கட்டுகள் இழக்கப்பட்டாலும் இணைப்பாட்டங்கள் சராசரியாக நன்றாகத்தான் இருந்தது .....மகேலவின் அதிரடி சதத்துடன் நுவான் குலசேகர , திசர பெரேராவின் தேவயரிந்த வேகமான துடுப்பெடுத்தாடளினால் இலங்கை அணி அடைந்த 270 என்ற ஓட்டப்பெருமானம் மும்பை வேங்கட மைதானத்தில் இரவில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு அவ்வளவு இலகுவான பெறுமானம் அல்ல ... இருந்தும் இலங்கை அணியினால் போதிய அழுத்தம் கொடுக்கமுடியாமல் போனது உண்மையில் ஆச்சர்யம்தான் .... போட்டியை கூர்ந்து கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் போட்டி நிறைவடைய 8 or 9 ஓவர்கள் இருக்கும் போதே சங்ககார போட்டியை கைவிட்டுவிட்டார் .... இப்படி சொல்ல சில காரணிகளை நான் முன்வைக்கிறேன் மலிங்க வழமையாக இரண்டு sesion கள் பந்து வீச அழைக்கப்படுவார் ...ஆனால் இறுதி போட்டியின் பொது மலிங்கவை சங்ககாரா உடைத்து உடைத்தே பயன்படுத்தினார் ( இறுதிப்போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மலிங்கவை சிறப்பாக கையாண்டனர் என்பதும் உண்மை ....) இணைப்பாட்டத்தை முறியடிக்க இருக்கலாம் என்று கருதுவதில் எந்த உண்மையும் இல்லை .... சங்கா போன்ற மிக சிறந்த தலைவருக்கு அது நன்கு தெரியும் ...அதே சமயம் .. திசர பெரேராவை முழுமையாக பயன்படுத்தவேண்டிய எந்த தேவையும் இருந்ததாக தெரியவில்லை அடி விழுகிறது என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவரே அழைக்கப்பட்டார் ஏன்? டில்சானுக்கு 5 overs மீதம் இருந்தது ... முரளிக்கு 3 overs மீதம் இருந்தது பயன்படுத்தியிருக்கலாமே ?...



இப்படி நிறைய காரணிகளை அடுக்கலாம் .... போட்டி இருகும் சூழ்நிலையில் இலங்கை அணி மூர்க்கமாக போராடும் ஆனால் அந்த குணத்தை அன்று காணவில்லை .....இப்போ இந்த பதிவை இடும் நேரத்தில் இலங்கை கிரிக்கட்டில் பல்வேறுபட்ட மாற்றங்களை காண முடிகிறது ( எதுவும் ஆரோக்கியமாக இல்லை )... சங்கா உலக கிரிக்கட் பதினொருவர் அணிக்கு தலைமையேற்றவர் ... அவரின் ராஜினாமாவை ஏற்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ....



இது இவ்வாறிருக்க தனது இருபத்தெட்டு வருடகால ஏக்கத்தை தீர்த்து வைத்த டோனி தலைமையிலான இந்திய அணியை இந்திய ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது இவர்களா இந்திய அணி தோல்வியடையும் போது கல்லடிக்கிரார்கள் என்ற கேள்வியை நானே கேட்டுக்கொள்ளவேண்டியுள்ளது ( வெளிய சொன்னா கல் எனக்கு வந்துடும் இல்ல) ... இனி இலங்கை அணிக்கு இப்படியான ஒரு வாய்ப்பு எப்போ அமயும் என்பது கேள்வியே .....விடு மச்சி cup 32 km மட்டும்தான் அந்தபக்கம் என்று சொன்ன என் நண்பனை நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்


தோனி கடைசியாக வெற்றிக்காக அடித்த அந்த சிக்ஸர் இப்போதும் மனதில் நிழலாடுகிறது

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்