Monday, February 21, 2011

பரிசு

வாழ்க்கையும் உலகமும் கட்டுப்பட்டிருப்பதும் ...தொடர்ச்சியான உலக அசைவுகளை கட்டுப்படுத்தும் ஷக்தி அன்பு என்றும் காதல் என்றும் சொல்லும் விதி தொடர்கிறது .... நேற்றுவரை நானும் இந்த கருத்துக்கு முழு உணர்வோடு உடன்பட்டிருந்தேன் ...நேற்று எனக்கொரு சிறிய பரிசு கிடைத்தது அதோடு நேற்று இரவு வெளிச்சம் f.m இன் "நினைக்காத நாள் இல்லை " என்றொரு இனிமையான நிகழ்ச்சி

கடைசி நேரம் வரை எதை பற்றி பேசுவது என்று பொறி தட்டுப்படவே இல்லை கடைசியில் எனக்கு கிடைத்த பரிசை நீண்ட நேரம் பார்த்துகொண்டிருந்த போதுதான் சில விடயங்கள் சிந்தனைக்கு வந்தது ... உண்மையில் உலகம் ....அன்பு காதல் உணர்வுகளை மீறி பரிசுகளில்தான் கட்டுப்படிருக்கின்றதோ என்று தோன்றியது

உலக இயக்கத்தின் அடிப்படையே பரிசுதான் என்பேன் ...எனக்கு தோன்றியது என்னவென்றால் உலகம் பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட பரிசு , வாழ்க்கை இயற்கை வழங்கிய பரிசு , உறவுகள் உணர்வுகளால் வழங்கப்பட்ட பரிசு , ஏன் காதல் கூட இதயங்களை ஒருவருக்கொருவர் பரிசளிப்பதால் வருவதுதானே

சரி பொறி தட்டிவிட்டது ... வானலையில் பரிசை வைத்தே எதாவாது பேசலாம் என்று சிந்தித்தபோது ...நேயர்களே வாழ்கையில் உங்களுக்கு கிடைத்த பெறுமதியான பரிசு எது ?
அதை உங்களுக்கு தந்தவர் யார் ? ... என்று எனக்குரிய பாணியில் கேட்டதுதான் தாமதம்
அப்போ புரிந்தது பரிசுகளின் பெறுமதி ... மகளை பரிசாக நினைக்கும் தகப்பன் , தந்தை தாயை பரிசாக நினைத்து அவர்கள் தந்த வாழ்க்கையையும் பரிசாக கருதும் மகள் ...கணவனை பரிசாக நினைக்கும் மனைவி ,,,பழைய காதலி தந்த நினைவுகளை பரிசாக கருதும் காதலன் ..... இவ்வளவு ஏன் 10 வருடத்துக்கு முன் ஒரு நண்பன் தந்த சிறிய சித்திரத்தை அவன் மரணத்துக்கு பின்னும் வைத்திருக்கும் ஒரு சகோதரி ....அப்பப்பா வாழ்க்கையில் பரிசுகளின் மகத்துவம்தான் என்ன ?

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்