Monday, August 1, 2011

"கலைக்காவலன்A. இராஜ்மோகன்"


"கலைக்காவலன் A.இராஜ்மோகன்"( பகுதி -1)

தனி ஒரு மனிதனை உயர்த்திப்பிடிக்கும் என் இன்னுமொரு பதிவு இப்படியான பதிவுகளை படிக்கும் போது வயிறு மற்றும் இதர உறுப்புகளில் எரிச்சல் ஏற்படும் என்று கருதுபவர்கள் இப்போதே வேறு பதிவுக்கு செல்வது உசிதம் ( அவ்வாறான எரிவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல )

இன்றைய தேதிக்கு இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு முன்னணி வானொலிக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது சில நேரங்களில் அந்த அடையாளம் ஒரு அறிவிப்பாளராகவும் இருக்கிறது வெற்றியை பொருத்தமட்டில் லோஷன் அண்ணா அதன் அடையாளம் (வெற்றி என்றால் லோஷன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு ) , சூரியனை பொருத்தமட்டில் அங்கும் இருவர் அடையாளமாக இருக்கின்றனர் ( பெயர் சொல்ல விரும்பவில்லை )



மதிப்பிற்குரிய திரு . A.R.V லோசன் அவர்கள்


நான் சார்ந்த சக்தியை பொருத்தமட்டில் கடந்த ஒரு தசாப்த காலமாக பலரை தன் அடயாளமாக சுமந்திருக்கிறது அப்படி அடயாளமாக இருந்த பலர் வானொலிகளுக்கே புது வடிவம் கொடுத்தனர் என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது எழில் வேந்தன் அவர்களின் காலம் , இறுக்கமான அதே நேரம் அழகிய சரளமான தமிழில் ஒரு வானொலியாய் சக்தி வளம் வந்தது , அபர்ணாவின் வருகையை தொடர்ந்து இன்னும் இலகு தமிழில் சக்தி பட்டி தொட்டியெங்கும் கலக்கியது ( பாமரர்களுக்கும் சராசரி தோட்ட தொழிலாளர்களிடமும் சக்தியை அடையாளப்படுத்திய பெருமை அபர்ணா அண்ணாவையே சாரும் )


மதிப்பிற்குரிய திரு . R.P.அபர்ணா சுதன் அவர்கள்


அவருக்கு பிற்பட்ட காலத்தில் எந்த வடிவ மாற்றமும் இல்லாமல் ஒரே வடிவில் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை தாக்கத்தை ஏட்படுத்தியிருந்தார் தமிழகத்தில் இருந்து வந்த மாயா இலகு தமிழில் அவர் காட்டும் வார்த்தை ஜாலங்களை ரசிக்காத வானொலி பிரியர்களே இல்லை என்று கூட சொல்லலாம் அவர் சக்தியில் இருந்த நாட்களில் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் அணைத்து வகுப்பினரையும் உள்ளடக்கியது , படித்தவர் முதல் பள்ளிக்கூடமே செல்லாதவர்களை கூட வார்த்தைகளால் கட்டிப்போடும் ஒரு அற்புதமான கலைஞனாக விளங்கினார்


மதிப்பிற்குரிய திரு. மாயா அவர்கள்


... இப்படி அவர் காலத்தினை தாண்டிப்பார்த்தால் மறுக்க முடியாத , தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாய் தன்னை வளர்துகொண்டவர்தான் இந்த ராஜ்மோகன் ( இந்த பதிவின் கதாநாயகன் )

"ராஜ்மோகனும் சக்தியும்,ஓரமாய் நானும்"


மதிப்பிற்குரிய திரு . இராஜ்மோகன் அவர்கள்


எப்படி சக்திக்குள் வந்தார் யார் மூலம் வந்தார் என்பதெல்லாம் கிடக்கட்டும் ஆனால் ராஜ் அவர்களின் வருகையை தொடர்ந்து சக்தி ஒரு புதுமையான பரிமாணத்தை தொட்டது (அதை நான் வானொலி ரசிகனாய் உணர்ந்தேன் ) தமிழில் வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கொட்டும் இவருக்கு இலங்கை முழுவதும் ரசிகர்கள் ( நேயர் என்ற பதத்திற்கு பதில் இங்கு ரசிகன் என்ற பதத்தை பயன்படுத்துவதில் ஒரு நோக்கம் உண்டு சராசரி அறிவிப்பாளர்கள் எல்லோருக்குமே நேயர்கள் உண்டு ஆனால் ஒரு சிலருக்குத்தான் ரசிகர்கள் உண்டு யார் யாருக்கு என்பதை மேல் பந்திகளில் புரிந்து கொள்ளலாம் ) வானொலி விளம்பரங்களில் ( treilors) எமது வானொலிக்கென தனி ஒரு அடையாளத்தை ஏட்படுத்திக்கொடுத்தவர் ராஜ் , வானொலி ரசிகன் ஒருவன் என்ன எதிர் பார்ப்பான் அதை அப்படியே கொடுக்காமல் அவன் ஆச்சர்யப்படும் வகையில் கொடுக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு

இன்றைய திகதிக்கு சக்தியில் ஒலிபரப்பாகும் பல நிகழ்சிகளின் வடிவத்திற்கு இவர்தான் உரிமையாளர் ! இவரின் ஆளுமையால்
வானொலி நாடகங்கள் என்றுமில்லாத அளவு வீரியம் பெற்றன வந்திய தேவனை பற்றி பலகலைக்கழக கருத்தரங்குகளில் பேசப்பட்டது , வாராந்தரிகளில் முன்னணி நாளேடுகளில் பெருமையாக பேசப்பட்டது துணிந்து யாரும் தொடாத வந்திய தேவனை பெரும் செலவில் எமது வானொலியால் தயாரிக்கப்பட்டது அதை மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியாக்கினார் ராஜ் , அதிகம் பயன்பட்ட , பயன்படாத , நம் நாட்டு தங்கங்களை ஒன்று திரட்டி தேடி தேடி வாய்ப்பு கொடுத்தார் , பிரபல நடிகர் கே. எஸ் . சந்திர சேகர் , ஜப்பு நாசீர், முது பெரும் நடிகர் ராஜா கணேஷன் , மகேஸ்வரி அம்மா , சில்மியா ஹாதி , புர்க்கான் பீ இப்திகார் , இளைய அறிமுகம் சஞ்சூபன் , அறிமுகம் தேவையில்லாத அசோக் பரன் , நிரோஜி, சம்ரத் , பிரகாஷ் , சில நேரங்களில் நான் என்று அத்தனை திறமைகளையும் லாவகமாக பயன்படுத்தி பல வெற்றிப்படைப்புகளை உருவாக்கியிருக்கிறார் , நெகிழ்வான ஒரு உண்மையும் உண்டு மறைந்த அமரர் சகல கலா வல்லவன் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள் நாடகம் ஒன்றுக்கு கடைசியாக குரல் கொடுத்தது இவருக்காகத்தான் ( வந்திய தேவன் படைப்பில் )


வந்திய தேவன் கதை வசனக்கோர்வை

மணித்தியாலத்திட்கு ஒரு தடவை வரும் நகைச்சுவை பகுதிகள் இவர் காலத்தில் புது வடிவம் பெற்றது . . . அது வரை நகைச்சுவை என்ற பெயரில் இருந் நிமிடக்கனக்கான அலட்டல்களை இருபது செக்கண்களுக்குள் அடக்கி சிரிக்க வைத்தார் , இவரின் குபேரன் பட்டி தொட்டி எங்கும் ராஜ நடை போட்டது குழந்தைகளின் செல் பொம்மை ஆனான் குபேரன் , தந்திரன் இளையவர்களை கொள்ளையடித்தான் ,
அண்டா புளுகன் ஆகாச புளுகன் என்ற நிகழ்ச்சி வெறும் பதினைந்தே செக்கன்கள் நீடிக்கும் ஒரு நிகழ்ச்சி ஆனால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கண்டது இப்படி எல்லாவற்றிலும் புதுமை எதிலும் புதுமையல் புகுத்தும் வல்லமை ராஜ்கே உரியது

இன்றைய திகதியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் அரேபிய இரவுகள் , மகா லக்ஷ்மி , தக்காளி தியட்டர் ,என்று அத்தனை படைப்புகளும் இவரின் இயக்கத்திலேயே சென்று கொண்டிருக்கிறது தக்காளி தியட்டர் வானொலிகளுக்கே புதிய வடிவம் , ( லொள்ளு சபாவின் பிரதி என்றாலும் வியாபாரத்தை மையநோக்காக கொண்ட வானொலி நிகழ்ச்சி என்ற வரம்பு மீறாமல் மாற்றி அமைத்துக்கொடுத்தவர் ராஜ் ). .. இவ் அனைத்து படைப்புகளிலும் பிரஷாந்த் ,ஹோசியா . சதீசன் , ரஜீவன் , அவ்வப்போது நான் என்று பல உதவி இயக்குனர்களையும் உருவாக்கினவர் இந்த ராஜ் மோகன்

இவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததின் உந்துதலால் அல்லது அது தந்த நம்பிக்கையினால் நான் உருவாக்கிய சுழியம் என்ற மர்ம விவரண நிகழ்ச்சி சக்தியின் மெகா ஹிட் நிகழ்ச்சி ! கொழும்பு தமிழ் சங்கத்தில் இவரின் குரலில் தமிழ் ஒலிக்காத வார இறுதிகளே இல்லை என்றளவில் இருக்கிறது நிகழ்காலம் ...... இப்படி இலங்கையில் ஒரு வானொலி அறிவிப்பாளன் படைப்பாளன் பெற வேண்டிய அதி உச்சத்தை தொட்டு சத்தமில்லாமல் வாழும் ஒரு அற்புதமான மனிதன் ( (இவையனைத்தும் அவரோடு பணி புரிந்தபோது நான் நேரடியாக கண்டவை சில விடயங்கள் குறிப்பிட தவறியும் இருக்கலாம் )


தொடரும் ................

2 comments :

  1. "ராஜ் அவர்களின் வருகையை தொடர்ந்து சக்தி ஒரு புதுமையான பரிமாணத்தை தொட்டது (அதை நான் வானொலி ரசிகனாய் உணர்ந்தேன்)"
    ராஜ் அண்ணாவை பற்றிய சிறப்பான அலசல்........

    ReplyDelete
  2. nunipul meyum ummai ponravarkalai enna solvathu orumurayavathu thamilai ucharika pazhagavum yaar yaar intha thurayil sathanai padathu ulaga parappil pirapalam pettirukiraarkal enatheriyaamal kundu sattikkul kuthirai otti thamil naattu kazhivukalukku kundi kazhuvi kudikka vendaam

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்