Sunday, September 12, 2010

உறையவைத்து உருகவைத்தவை



இன்னமும் மனம் எனக்கு ஆறவில்லை என் வயதுக்கும் என் ரசனைக்கும் சம்பந்தமே இல்லை என்று என் நண்பர்கள் கேலி செய்வார்கள் பழைய பாடல்கள் மீது எனக்கு இருந்த ஆர்வம்தான் எனக்கு சக்தி fm இல் அந்த நாள் ஞ்சாபகம் நிகழ்ச்சியை பழுதுபடாமல் சில நாட்கள் நடத்த உதவியது , வெளிச்சம் fm இன் மிகப்பிரபலமான பாலும் பழமும் நிகழ்ச்சியும் அப்படியே
இசை என்பது எனக்கு இன்று சில இரவுகளில் நான் மறக்கும் உறக்கத்துக்கும் மாற்றீடு , பல நேரங்களில் பசி என கத்திய என் வயிறுக்கு அமுதசுரபியாக இசை மட்டும்தான்

இதுவரை ஏன் இப்பொழுது எனக்கு தொழிலே அதுதான் ,இந்த பதிவு ஒரு இரங்கல் பதிவு அல்ல ஆனால் மனம் படும் வேதனைகளுக்கு கொஞ்சமும் அளவு கிடையாது , இப்பவும் நிமிடத்துக்கு நிமிடம் தோன்றுவது அந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்பதுதான் வாய்ப்பில்லை என்று தெரிந்தும் இந்த குழந்தை மனம் அந்த இழப்பை தாங்குவதாக இல்லை

ஸ்வர்ணலதா என்ற குயிலின் குரல் எனக்கு நன்கு அறிமுகமாகி என் உறக்கத்தை பறித்தது இன்று நேற்று அல்ல அரை காற்சட்டைக்கு மேல் சட்டை போட்டு வழியும் மூக்கை கரங்களால் துடைத்த அந்த நேரங்களிலேயே என் வை முணுமுணுத்தது அந்த முக்காலா பாடல்தான் ( அவருக்கு உதாரணம் காட்ட இந்த பாடல் பொருத்தம் இல்லை என்றாலும் உண்மை அது தான் ) ஒரு கட்டத்தில் பாடல்கள்தான் எல்லாமே என்று ஆனபோது ஸ்வர்ணலதா அம்மாவை மறந்த இசை இல்லை என்றளவுக்கு நான் அவரின் குரலுக்கு அடிமையாகினேன்

"மாலையில் யாரோ மனதோடு பேச" ,குயில் பாட்டு வந்ததென்ன ,என்னுள்ளே என்னுள்ளே ,என்னை தொட்டு அள்ளிகொண்ட ,போவோமா ஊர்கோலம் என்று , ராஜா தந்த கற்பனைக்கு எட்டாத ஸ்வரங்களின் கோர்வைக்கு இந்த குயிலை தவிர வேறு எந்த குரலை பொருத்தினாலும் எதோ ஒன்று குறையும்

ரஹ்மானின் வருகைக்கு பிறகு அதிகரித்த பாடகர்களின் எண்ணிக்கையில் ,இவர் அடித்து செல்லாமல் நிலைத்து நின்றமைக்கான சான்றுகள் ,எவனோ ஒருவன் ,போறாளே பொன்னுத்தாயி ,காதலெனும் தேர்வெழுதி , என்று நீண்டு செல்லும் , ஹேரிஸ் ஜெயராஜின் இசையில் வந்த ஆரிய உதடுகள் இவரின் உதடுகள் தந்த என்றும் இனியவை

பார்வைக்கு எப்போதுமே எளிமையாக , தான் பெற்ற பெயரை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளாத பெருமை இவருக்கு நான் ஊடகத்துறைக்கு வர முன்னர் கண்ட கனவுகளில் , செவ்வி காண முடியாவிட்டாலும் ஒருமுறை நேரில் பார்த்தாகவேண்டும் என்று ஆசைப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்த குயில் இனி காற்றலையில் குரலாக மட்டுமே இருக்கபோகிறது

இந்த குயிலின் இடத்தை நிரப்ப இனி எந்த குயில் பிறக்குமோ ?

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்