உறையவைத்து உருகவைத்தவை
அண்மையில் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த செய்திகளில் இரண்டு சம்பவங்களின் பால் நான் அதிகமாக ஈர்க்கப்பட்டேன் உண்மையில் இறுதி யுத்தத்தின் பொது செய்திகள் எப்படி என்னிடம் இருந்து என் உறக்கத்தை பரித்துகொண்டதோ , அதே போன்றதொரு உணர்வை இந்த செய்திகள் இரண்டும் ஏற்படுத்தியதுவெளிநாட்டுக்கு வேலை தேடி சென்று அந்த சகோதர மொழி பேசும் சகோதரிக்கு நேர்ந்த கொடுமைகள் என் மனதில் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியிருந்தன மத்தியகிழக்கு தேசத்துக்கு வேலை தேடி செல்பவர்கள் இப்படியான கொடுமைகளுக்கு ஆளாவதுபற்றி நாம் கேள்விபட்டது இது முதல் தடவை அல்ல என்றாலும் இது ஒரு புதரகம் ... கேட்கும் போதே மனதுக்கு தோன்றும் வேதனைகள் காட்சிகளைபார்க்கும் போது பீரிட்டு வந்துவிடுகிறது
நம் நாட்டிலிருந்து மத்தியகிழக்கு செல்லும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த நிலைமையா? என்று தேடி பார்த்ததில் உதட்டை மட்டுமே பிதுக்க முடிந்தது ... இன்னும் கொஞ்சம் ஆழமாகப்போனால் பிற நாட்டு பெண்களுக்குத்தான் இந்த நிலைமையா என்றால் அதுவும் இல்லை சில நாட்களுக்கு முன் ஆனந்தவிகடன் சஞ்சிகையின் ஒரு பக்கம் என் இரவை ஆக்கிரமித்திருந்தது ...
ஆப்கானிஸ்தான் தேசத்தில் ஒரு பெண் 12 வது வயதில் பருவம் எய்தும் அவளுக்கு பெயர் ஆயிஷா
14 வது வயதில் ஒருவனுக்கு மனம் முடித்து கொடுக்கபடுகிறாள் ,இலவச இணைப்பாக மாப்பிள்ளைக்கு அவள் உடன் பிறந்த சோதரியும் ... அவன் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவன் ... பாதிநாள் அவனுக்கு காடுகளுக்குல்தான் சரணாகதி .. கணவனை எப்போதாவது பார்க்கும் ஆயிஷாவுக்கு மத்த நாட்கள் அனைத்தும் மாமனார் மாமியாரின் கொடுமைகள் ஏராளமாக , தாங்க முடியாமல் வீட்டிலிருந்து ஓடும் அவளை கந்தகார் பெண்கள் சிறையில் அடைக்கிறது அந்த நாட்டின் சட்டம் ஒருவாறு அங்கிருந்து அவளை அவள் தந்தை மீட்க சில நாட்கள் நிம்மதி , காடுகளுக்குள் கரந்தடி வாழ்க்கை வாழும் அவள் கணவன் வீட்டுக்கு வந்து மனைவியை மிஸ் பண்ண ... வெறி தலைக்கேரியவனாக ஆயிஷாவை தேடி மாமனார் வீட்டுக்கு போக ... தடுக்க முடியாமல் அவள் தந்தை அவனுக்கு வழிவிடும் நொடிகளில் வெறி பிடித்துவரும் அவனிடம் இருந்து தப்பிக்க ஒழிந்து கொள்ளும் அவளை பிடித்து இழுக்கும் அவன் உலகம் வெட்கி தலைகுனியும் அந்த கொடூரத்த்தை நடத்துகிறான் அவள் கதற கதற அவள் மூக்கை துண்டாக அறுத்து எறிகிறான் வலி தாங்க முடியாத அந்த 18 வயது குழந்தை மரண ஓலமிட காதுகள் இரண்டையும் ஓட்ட அறுத்து வெறியை தீர்த்துகொல்கிறான் அவன் "
வாசிக்க எதோ படத்தின் கதை போலதான் எனக்கும் இருந்தது ஆனால் உண்மை அதுவல்ல என்று தெரிந்ததும் , கவலை மறந்து போனது பதிலுக்கு கோபம் மட்டுமே தலைக்கேறியது , தலிபான்களின் சட்டம் எவளவு இறுக்கமானது என்பதும் அது பெண்கள் மீது எப்படி பாய்கிறது என்பது குறித்தும் நான் எழுதித்தான் தெரியவேண்டும் என்று இல்லை ... ஒருபக்கம் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து தலீபான்கள் எப்போதோ வேரருக்கபட்டுவிட்டனர் என்று அமெரிக்க கொக்கரித்தாலும் இன்னமும் அவர்கள் வசம் சில கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன அங்கு அவர்கள் வைப்பதுதான் சட்டம் ...
இதெல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மாகன் முன்னாள் நடக்க அதற்கு ஆறடி பின்னால் பெண் நடக்க வேண்டும் சில வாரங்களுக்கு முன் அங்கு சென்ற செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் ஒருவர் பார்வைக்கு இது மாறி தெரிகின்றது ஒரு இடத்தில் பெண் முன்னாள் நடக்க அதற்கு சில அடிகள் பின்னால் அவள் தடத்தில் ஆண் ஒருவன் அதாவது அவள் கணவன் தொடர்கிறான் .... காட்சியை கண்ட அந்த பெண் சிலிர்த்து போய் அவள் கணவனிடம் கேட்க்க அவன் சொல்கிறான் ஏற்கனவே இங்கு கண்ணிவெடிகள் முழுதாக அகற்றப்படவில்லை அதான் அவளை முன்னே விட்டு ஊர்ஜிதபடுத்திகொண்டு தான் பின்னே செல்கிறேன் என்கிறான் எப்புடி பய புள்ள
இனி ஆயிஷாபற்றி மறுபடி பார்க்கலாம் சில நலன் விரும்பிகள் மூலம் அவள் இப்பொழுது முக மாற்று அருவைசிகிச்சைகாக அமெரிக்கா போய்விட்டால் இனியாவது அவள் வாழ்க்கை நிம்மதியடயட்டும் ஆனால் அவள் கவலைபடுவதேல்லாம் அவள் தங்கை இன்னமும் அந்த கொடூரர்களின் பிடியில் .......
மனிதாபிமானம் இல்லாத இடங்களில் மதங்களுக்கு பிரயோஜனம் கிடையாது ( ஆயிஷா ) இப்படி சொந்த மண்ணிலேயே அதுவும் சொந்த இனத்து பெண்களுக்கே விமோசனம் இல்லாத நாடுகளை நோக்கி நம் ஏழை நாட்டு பெண்கள் படையெடுப்பது வறுமைக்காக மட்டுமே உள்நாட்டில் அவர்களுக்கான சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வக்கில்லாமல் ஒரு கூட்டம் மத்தியகிழக்கு சட்டத்தை சாடிக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறது
மூக்கோடு சேர்ந்து பெண் சுதந்திரம் அறுபட்ட நிலையில் இன்னமும் ஆயிரம் ஆயிஷாக்கள் மத்தியகிழக்கில்
0 comments:
Post a Comment