Friday, June 22, 2012

ஒரு விபச்சாரியின் வாக்குமூலம்

ஒரு குட்டிப்பையனை ஒரு பெண் ஆசையோடு முத்தம் கொடுக்க கன்னத்தை நெருங்குகிறாள் அவன் உடனே கன்னத்தை திருப்பிக்கொள்கிறான்


அருகில் இருந்த பெரியவன் அவனுக்கு ( அந்த குட்டிப்பையனுக்கு ) முத்தம் பிடிக்காது என்கிறான்.

அதற்கு அந்த பெண் -

எனக்கும் முத்தம் பிடிக்காது ஆனால் காசு வாங்கினா கொடுத்துதான் ஆகணும் வயசான கிழவன் , குடிகாரன் , சீக்காளி எவனா இருந்தாலும். என் உடம்பெல்லாம் நாருது எங்க அம்மா பிணம் கூட இப்டி நாரால. அம்மாவ நான் கொண்ணுட்டேன் ஓடிப்போய் கொண்ணுட்டேன். வண்டி உடன்சுடுச்சுனு மூணு நாள் என் வீட்டுப்பக்கம் ஒருத்தன் தங்கினான். முதல்நாள் அவன் போட்டிருந்த வெள்ளை ட்ரஸ் பிடிச்சுருந்தது, இரண்டாவது நாள் அவன் தண்ணி கேட்டப்போ அவன் சிரிச்ச வெள்ளை பல் பிடிச்சது. மூணாவது நாள் அவன் பக்கத்துல உட்கார்ந்து கார்ல போனபோ அவன பிடிச்சது. வழியில எதையோ குடிக்க குடுத்தான் மயக்கமா வந்துச்சு நா மயக்கத்துல இருக்குறப்போ என் மேல ஏறி என்னெல்லாமோ பண்ணினான் அது பிடிச்சிருந்துச்சு.

கண் முழிச்சா என் வாழ்க்கைல ஓட்டட பிடிச்சிருந்துச்சு. என்ன சுத்தி வர நாத்தம் பிடிச்ச பொம்பளைக. "புது சரக்கு புது சரக்குனு" சொல்லி சொல்லி மூணு நாள்ல என்ன முப்பத்தாறு பேரு மோ................ட்டானுங்க அதுக்கப்பறம் நான் எண்ணல கடைசியா ஒரு கெழவன் வந்தான்.அவன் அம்மா மார்புல இருந்த மச்சம் என்கிட்டே இருக்குனு என்ன சுத்தி சுத்தி வந்தான். ஓடிவந்துட்டேன் அம்மா முகத்த திருப்பிக்கிட்டா படு பாவி செத்த பிறகு குழில வைக்கும்போது கூட முகத்த திருப்பிக்கிடேதான் இருந்தா. அப்புறம் வயித்து பசிக்காக ரோட்டுல நிக்க ஆரம்பிச்சேன் இப்போ போற வர்றவன்
எல்லாம் என்ன பிச்சி பிச்சி திங்குறான்.

உடம்போட சேர்த்து இப்போ மனசும் நாருது ..........
 
( நந்தலாலா படத்தில் இருந்து )

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்