மங்காத்தா (லாஜிக் இல்லா மேஜிக் )
மாப்பிள்ளை மாதிரி மொக்க படத்தையே மனசாட்சியில்லாமல் விளம்பரப்படுத்தி ஓட்டு ஓட்டு என்று ஓட்டும் சன் பிச்சர்ஸ் காரர்களின் கையில் மங்காத்தா மாதிரி மாஸ் படம் கிடைத்தால் சும்மாவா சென்னையில் மட்டும் படம் வந்து ஒரே வாரத்தில் முப்பது கோடி வசூல் ......எல்லோருக்கும் தெரியும் அஜித்தின் ஐம்பதாவது படம் இது ஏற்கனவே அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் தல என்ற செல்ல பெயர் தமிழ் நாடு முழுவதும் இயங்கி வந்த முப்பத்தெட்டாயிரம் ரசிகர் மன்றங்கள் / நற்பணி மன்றங்கள் அத்தனையும் அஜித் கலைத்து கைவிட்ட பிறகு இந்த படம் என்ன கதியாகுமோ என்று பலரும் உச்சு கொட்ட , நரை முடியுடன் கொடூர வில்லத்தனத்துடன் படத்தை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக்கியிருக்கிறார் தல .. காட்சிக்கு காட்சி பார்வையிலேயே பேசும் வித்தை அஜித்துக்கே உரியது மனுஷன் அநியாயத்துக்கு அழகு கை தட்டல்களை ஏகத்துக்கு வாங்கி குவிக்கிறார் அஜித் வரலாறில் ஐம்பது படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள திரைப்படம் இது அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் தல தொடரட்டும் தல பயணம்
பி. கு - ஒரு சின்ன குறை ஐம்பதாவது படத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்கள் பற்றியும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்
0 comments:
Post a Comment